Subscribe Us

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.
இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-
நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.
வோஷிங்டன், நவ. 27

0 Comments:

Post a Comment