Monday, September 28, 2009

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது/எடுத்துரைத்து யார்?உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.


حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038


ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.


وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34


(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)


-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி
நன்றி : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இணையத்தளம்

Friday, September 25, 2009

புஷ் மீது ஷ¥க்களை வீசியவர் சுவிசில் அடைக்கலம் கேட்கிறார்

ஈராக் நாட்டு நிருபர் முண்டாசர் அல் சேய்தி. இவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தன் பதவிக்காலத்தின் கடைசிக்காலத்தில் ஈராக் நாட்டுக்குசென்று இருந்த போது, அவர் மீது ஷ¥க்களை வீசினார். இதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் சமீபத்தில் தான் விடுதலை ஆனார்.
அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று விரும்புகிறார்.
அவர் ஒரு டி.வி.சனலுக்கு அளித்த பேட்டியில் கூறி யிருப்பதாவது,
சுவிட்சர்லாந்து நாடு நடுநிலையான நாடு. அது ஈராக்கை ஆக்கிரமித்ததை ஆதரிக்கவில்லை. 2003ம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமி ப்பை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது போர் குற்றங்களுக்காக வழக்கு தொடர்வேன். ஆக்கிரமி ப்பை ஆதரித்த அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு தொடர்வேன்.
ஷ¥ வீசியதற்காக என்னை சிறையில் அடைத்த போது, அதிகாரிகள் சிறையில் என்னை கொடுமைப் படுத்தினார்கள்.
இவ்வாறு முண்டாசர் அல் சேய்தி தெரிவித்தார்.

Thursday, September 24, 2009

அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரிட தலீபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது

அமெரிக்க தலைமைத் தளபதி
வாஷிங்டன், செப். 23-
அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரிடுவதற்கு தலீ பான்களுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உதவி செய்து வருகிறது என்று அமெரிக்க இராணுவத் தலைமை தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ்டைல் குற்றஞ் சாட்டினார்.
ஆய்வு அறிக்கை
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதியில் போர் நிலைமை குறித்து ஆய்வு நடத்தி தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ் டைல் வெள்ளை மாளிகைக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.
தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவன மான ஐ.எஸ்.ஐ. வெளிப்படையாகவும் தெள்ளத் தெளிவா கவும் உதவி அளித்து வருகிறது. குவாட்ஸ்போர்சஸ் என்ற ஈரானிய உளவு நிறுவனமும் தலீபான்களுக்கு உதவி அளி த்து வருகிறது.
போர்க்களத்தில் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரி ட்டு வருபவர்கள் ஆப்கானிஸ்தானியர் தான். அவர்களை பாகி ஸ்தானில் உள்ள மூத்த ஆப்கானிஸ்தான் தலைவர்களால் வழிநடத்துகிறார்கள். பாகிஸ்தானில் இருந்தபடி அவர்கள் தலீபான் அமைப்பில் சேர்க்கப்படும் புதியவர்களுக்கு ஆயுதங்களை அனுப்பி வைப்பதிலும் பாகிஸ்தானில் உள்ள மூத்த தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள தலீபான் மூத்த தலைவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள். ஈரான் உளவுத்துறை அதிகாரிகளும் உதவி செய்து வருகிறார்கள்.

Friday, September 18, 2009

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களும் தமிழ் அரசியல் சமூகமும்


செப்டம்பர் 07, 2009 அன்று ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சந்திப்பு, கூட்டமைப்பின் அரசாங்கம் தொடர்பான நடத்தையில் முக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக மாற்றமடைந்துள்ள புதிய அரசியல் சூழலிலேயே இது நிகழ்ந்துள்ளது.
ஏனைய விடயங்களைப் பேசியதற்கு மத்தியில் 1990ல் புலிகளால் பலவந்த மாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீள்குடி யேற்றம் பற்றியும் அவர்கள் பேசி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களது விவகா ரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக முன்னெடுத் திருப்பது இதுவே முதன் முறை யாகும்.
வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீளத் திரும்பும் உரிமையை பகிரங்கமாக அங்கீகரிப் பதற்கும் அவர்களது விடயத்தை அனுதாபத்துடன் நோக்குவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் அங்கத்துவக் கட்சிகளுக்கும் 19 நீண்ட வருடங்கள் தேவையாய் இருந்திருக்கிறது.
வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் கவனமெடுத்திருப் பதற்கு, அதன் ஒரே யொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான ஆர். எம். இமாமின் அழுத்த மும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பின ரான என். சிறிகாந்தா அதற்களித்த ஆதர வுமே முக்கிய காரணம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிகாந்தா பாராளுமன்ற உறுப்பினராக ஆவதற்கு சந்தர்ப்பமாய் அமைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்; வெளியேற்றப்பட்ட வட க்கு முஸ்லிம்கள் மீது நீண்டகால மாக அனுதாபமுள்ளவராக இருந்து வந்தார். வெளியேற்றப் பட்ட வட புல முஸ்லிம்கள் கடந்த 19 வருடங் களாக துன்பத்திற்கு உள்ளாகி வசித்து வரும் புத்தளம் அகதிமுகாம்களுக்கு இதுவரை விஜயம் செய்தி ருந்த ஒரேயொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர் ரவிராஜ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தைக் கையிலெடுத்தி ருப்பது வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தில் எந்தவொரு திடீர்த் திருப்பத்தை யும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளி யேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்க ளது கிராமங்களை நோக்கி கொஞ் சம் கொஞ்சமாக செல்லத் தொடங்கி விட்டனர்.
அவர்களுக்கு முன்னே பல சவால்கள் உள்ளன. தேவாலயங் களும் அதிகார வர்க்கத்தினரும் மன்னாரின் சனப் பரம்பலை மாற்றி யமைப்பதற்கு அல்லும் பகலுமாக உழைத்து வருகின்றனர். வெளியேற் றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடி யேறினாலும் இந்த சனப் பரம்பல் பெரியளவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக உள்ளனர்.
ஜனாதிபதியுடனான கூட்டமைப் பினரின் சந்திப்பின்போது கலந்து கொண்ட மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூட இனச் சுத்திகரிப்பின் பாதிப்புக்குள் ளானவர்தான். அனைத்து அகதி களையும் மீள்குடியேற்றும் பொறுப்பு அவருக்குத்தான் வழங்கப்பட்டி ருக்கிறது. கூட்டமைப்பு எம்.பி.யான இமாம் கூட இனச் சுத்திகரிப் பின் பாதிப் புக்குள்ளானவர்தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ரின் வடக்கு முஸ்லிம்கள் சார்பான இந்தக் குரலை, அம்மக்கள் பற்றிய அவர்களது அக்கறையாகவும் ஆதர வுக் குரலா கவுமே முஸ்லிம்கள் பார்க்கின்றனர். புலிகள் அழிக்கப் பட்டதன் பின்னர் கடைசியில் ஒருவாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களது மீள்குடி யேற்றத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளது. ஆனால், சில புகலிடத் தமிழர்களும் ஈ.பி.டி.பி., புளொட் தவிர்ந்த தமிழ்த் தலைவர் களும் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத் திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக் காமல் உள்ளனர்.
அகதிகள் தொடர்பாக எங்கு, எப்போது பேசினாலும் தமிழ் அகதிகள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் பற்றிய அனுதாபத்தை யேனும் அவர்கள் வெளிப்படுத்த வில்லை.
இவ்வருடம் ஜூலை மாதம் புகலிடத் தமிழர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து வன்னி அகதி முகாம்களுக்கும் சென் றது. அவர்கள் அங்கும் கிழக்கிலும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சந்தித்துப் பேசினர். அவர்களால் புத்தளத்திலோ அனுராதபுரத்திலோ உள்ள அகதி முகாம்களுக்குச் செல்ல முடியவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத் தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தக் குறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புகலிடத்தில் வாழும் தமிழர்கள் ஆகியோர் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ் லிம்கள் தொடர்பாக மௌனமான போக்கையே கடை பிடிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்த இனச் சுத்திரிப்பின் காரண கர்த்தாக்களான புலிகள் செயற் பட்டுக் கொண்டிருந்ததால், இந்த மௌனத்தை அவர்கள் நியாயப் படுத்த அது ஒரு வசதியான காரண மாக இருந்தது.
ஆனால், தமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, தமது சக சமூகத்தி னருக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் காட்டுவதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாகும். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவது இந்த வகையில் பொருத்தமானது.
meelparvi

Monday, September 14, 2009

பெண்கள் கவனத்திற்கு…

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை:
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும்:
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.
கட்டுரை ஆக்கம்: சகோதரர் – சுலைமான் அவர்கள்

Sunday, September 13, 2009

பராக் ஒபாமாவுக் கெதிராக அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம்


கொமினிஸத்தை நோக்கிச் செல்வதாகவும் கண்டனம்
வாஷிங்டன், செப்டம்பர். 13 ஏ. எப். பி.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கெதிராக ஆர்ப் பாட்டம் நடந்தது.
கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சுதந்திர வேலைகளுக்கான அடிமட்ட அமைப்பு ஏற்பாடு செய்தது. அமெரிக்காவின் நாலா பக்கங்களிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாஷிங்டனை நோக்கி வந்தனர்.
இதில் கலந்து கொண்டோரின் சரியான தொகையைக் கூற முடியாதெனப் பொலிஸார் கூறினர். இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரையிலான பொது மக்கள் இந்த ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாள ர்கள் முன்னர் அறிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பராக் ஒபாமாவின் புகைப்படங்களைத் தாங்கியபடி கோஷமிட்ட னர். வரி விதிப்பைக் குறை, பொருளாதார சுதந்திரத்தை தா, கருக்கலைப்பு சுகாதாரத்துக் குப் பாதுகாப்பானதல்ல, நாட்டை கொமினிஸ த்தை நோக்கி நகர்த்தாதே என்று பல கோஷ ங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
ஜனாதிபதி பராக் ஒபாமா கருக்கலைப்புக்கு ஆதரவானவர். சனத் தொகையைக் கட்டுப் படுத்த இத் திட்டம் அவசியம் எனக் கருதும் ஜனாதிபதி பராக் ஒபாமா அரசாங்கத்தில் இதற்கான விசேட ஏற்பாடுகளையும் செய்யவுள்ளார்.
இவற்றைக் கண்டிக்கும் பொருட்டே பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். பெயர் கூறவிரும்பாத ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முழு நம்பிக் கையுடன் கடந்த ஜனவரியில் ஒபாமாவுக்கு வாக்களித்தேன். அவை அனைத்தும் அர்த்த மற்றுப் போயுள்ளது. ஒபாமாவின் செயற்பாடு கள் கொமினிஸ நாட்டைப் போல் அமெ ரிக்காவைப் பாதிக்க வைத்துள்ளதென்றார்.
இதே போன்ற பல கருதுக்களை வெளியிட்டனர். இறந்தோருக்கு வரி வழங்கல், பிறப்புச் செலவு இலவசம் என அறிவி க்கப்பட்ட ஒபாமாவின் திட்டங்கள் செயலுரு பெறாததற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பராக் ஒபாமாவைக் கேலி செய்யும் பல சித்திரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கி நின்றனர். ஒபாமா துரோகி என்றும் ஆர்ப் பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.

Saturday, September 12, 2009

சே குவேராவின் பொலிவிய டயறிசேயின் பொலிவிய டயறி’ (Diary of Che in Bolivia) 1968 ஆம் ஆண்டு யூன் மாதம் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வெளியிடப்பட்டது. இந்த டயறிக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. சீ. ஐ. ஏ யின் முயற்சி தோல்வி கண்ட கதை.
கொங்கோவில் கெரில்லாப் போராட்டத்துக்காக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சே குவேரா சிறிது காலம் சோர்வுற்ற மனோ நிலையுடன் இருந்தார். இந்த நிலை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. அவரது அடுத்த போராட்டக் களமாக பொலிவியாவைத் தேர்ந்தெடுத்தார்.
சே குவேரா 1966 நவம்பர் மாதத்தில் பொலிவியாவுக்குள் அடியெடுத்து வைத்தார். கியூபாப் போராட்டத்திலும் கொங்கோப் போராட்டத்திலும் அவருடன் இணைந்திருந்த சிலரும் கியூபாவில் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் அவருடன் செயற்பட்ட சிலரும் கூடச் சென்றனர். பொலிவியாவில் ‘மேஜர் றமோன்’ என்ற பெயரிலேயே சே செயற்பட்டார்.
அக்காலத்தில் பொலிவியா சீ. ஐ. ஏ யின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தது. சகல அமைச்சுகளிலும் சீ. ஐ. ஏ ஏஜன்டுகள் இருந்தனர். ஜனாதிபதியும் பல முக்கிய அமைச்சர்களும் சீ. ஐ. ஏயின் கொடுப்பனவுப் பட்டியலில் இருந்தனர். இராணுவம் ஏறக்குறைய சீ. ஐ. ஏ யின் கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டது.
சேயின் பொலிவிய டயறியில் முதலாவது பதிவு 1966 நவம்பர் 7ந் திகதி செய்யப்பட்டது. “இன்று ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகின்றது. இரவு நேரத்தில் நாங்கள் கால்நடைப் பண்ணையை வந்தடைந்தோம்” என்று அதில் சே குவேரா எழுதியிருந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்புகள் எழுதப்பட்டன. எழுதுவதற்கு விசேடமாக எதுவும் இல்லாத நாட்களில் ‘ஒன்றுமில்லை’ என்று எழுதியிருந்தார்.
சே குவேரா பொலிவியாவில் நன்காஹ¤வாஸ¤ என்ற இடத்தில் கெரில்லாத் தளமொன்றை அமைத்துச் செயற்பட்டார். அது செவ்விந்தியர்கள் வாழும் பகுதி. அவர்களிடமிருந்து சே குவேராவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்க வில்லை. இதற்கு இரண்டு காரணங்க ளைக் கூறலாம். அவர்களுக்கு ஸ்பானிய மொழி தெரியாதது ஒரு காரணம். வெள் ளையர்கள் அனைவரையும் எதிரிகளாகப் பார்க்கும் சுபாவம் அவர்களிடம் இருந்தது இன்னொரு காரணம்.
பொலிவியாவில் சேயின் பணி இலகுவானதாக இருக்கவில்லை. அவரது படையணி பொலிவிய இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டே படிப்படியாக முன்னேறியது. 1967 ஒக்டோபர் 8ந் திகதி எல் ஜுரோ பள்ளத்தாக்கில் கெரில்லாப் படையணியைச் சுற்றி வளைத்த இராணுவம் சே குவேராவையும் வேறு சிலரையும் கைது செய்தது. கைது செய்யப்படுவதற்குச் சில மணித்தியாலங்களுக்கு முன் சே குவேரா தனது கடைசி டயறிக் குறிப்பை இவ்வாறு எழுதியிருந்தார்.
“ஐந்து மணியளவில் நாங்கள் புறப்பட்டோம். மிகக் குறைவான சந்திர ஒளி மாத்திரம் இருந்தது. பயணம் மிகவும் சிரமமானது. பள்ளத்தாக்கில் பல சுவடுகளை விட்டுவிட்டு வந்தோம். சற்றுக் களைப்பாறிச்செல்வதென இரண்டு மணியளவில் தீர்மானித்தோம். ஆனால் தொடர்ந்து செல்வதில் ஒரு அர்த்தமும் இல்லையெனப் பின்னர் தீர்மானித்தோம்”.
சே குவேராவின் கொலை:
கைது செய்யப்பட்ட சே குவேராவை ஹிகுரா என்ற கிராமத்திலுள்ள ஒரு பாடசாலையில் தடுத்து வைத்திருந்தார்கள். இராணுவத் தலைமையகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. எட்டாவது படையணியின் தளபதி கேர்ணல் ஜோக்கின் ஸென்ரெனோ ஹிகுரா கிராமத்துக்குச் செல்வதற்காக 9ம் திகதி காலை ஆயத்தமாகிய போது, கப்டன் பீலிக்ஸ் றமோஸ் அவருடன் இணைந்து கொண்டார். இருவரும் ஹெலிகொப்டர் மூலம் ஹிகுராவுக்குச் சென்றனர்.
கப்டன் பீலிக்ஸ் றமோஸ் ஒரு அமெரிக்கர். சீ. ஐ. ஏ ஏஜனட். இவருக்கும் இன்னொரு சீ. ஐ. ஏ ஏஜன்டான எடுவார்டோ கொன்ஸலெஸ் என்பவருக்கும் பொலிவிய இராணுவத்தில் கப்டன் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
சே குவேராவைத் தடுத்து வைத்திருந்த பாடசாலையில் ஸென்ரெனோவும் றமோஸ்ஸ¤ம் அவரை நீண்ட நேரம் விசாரித்தார்கள். எல் ஜுரோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து இராணுவ நடவடிக்கை இடம்பெற்றதால் ஸென்ரெனோ பாடசாலையிலிருந்து வெளியேறி அங்கு சென்ற பின் றமோஸ் தனியாக சேயை விசாரித்தார். அவ்வேளையில் சே குவேராவை றமோஸ் சுட்டுக் கொன்று விட்டார்.
சேயிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயறியின் எல்லாக் குறிப்புகளையும் றமோஸ் படம்பிடித்த பின் அந்த டயறியை எல் ஜுரோ பள்ளத்தாக்கிலிருந்து திரும்பிய கேர்ணல் ஜோக்கின் ஸென்ரெனோவுக்குக் கொடுத்தார். அவர் தலைநகருக்குத் திரும்பியதும் இராணுவத் தளபதியிடம் டயறியைக் கையளித்தார்.
அமைச்சரின் இரட்டை வாழ்க்கை:
இக்காலத்தில் பொலிவியாவின் சக்திமிக்க உள்துறை அமைச்சர் பதவியை வகித்தவர் அன்ரோனியோ ஆர்குவெதஸ். பொலிவியாவின் விமானப் படையில் கப்டன் பதவி வகித்த ஆர்குவெதஸ் அறுபதுகளின் முற்பகுதியில் பிரதி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இளமைக் காலத்தில் இவர் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததை அறிந்த சீ. ஐ. ஏ இராஜினாமா செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதற்குப் பணியாமலிருக்க அவரால் முடியவில்லை.
ஆர்குவெதஸ்ஸை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக சீ. ஐ. ஏ பெருவுக்குக் கூட்டிச் சென்றது. பெருவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ‘பொய் அறியும்’ கருவி இருந்ததாலேயே அங்கு கூட்டிச் சென்றனர். நான்கு நாட்களாகக் கடுமையான விசாரணை நடைபெற்றது. இப்போதும் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா, மொஸ்கோவின் ஏஜன்டா அல்லது ஹவானாவின் ஏஜன்டா என்பன போன்ற கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டார்கள். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற துன்புறுத்தல் காரணமாக ஆர்குவெதஸ் மிகவும் மனம் உடைந்திருந்தார்.
கம்யூனிஸ்ட் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த சீ. ஐ. ஏ ஆர்குவெதஸ்ஸை உள்துறை அமைச்சராக நியமிக்கும்படி ஜனாதிபதிக்குச் சிபார்சு செய்தது. உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற பின் சீ. ஐ. ஏ சொல்வதைச் &:v@ரிவி!8’ரி அவர் இருந்தார். சீ. ஐ. ஏ அவரை ஆட்டி வைத்தது எனக் கூறலாம். இந்த வாழ்க்கை சந்தோசமானதாக இருக்கவில்லை. பெருவில் நடத்திய விதம் காரணமாக ஏற்கனவே சீ. ஐ. ஏ மீது கொண்டிருந்த வெறுப்பு இப்போது அதிகரித்தது. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
காஸ்ட்ரோவிடம் டயறி
சே குவேரா கொலை செய்யப்பட்டு நாற்பது நாட்களின் பின் அவரது டயறியின் புகைப்படப் பிரதியொன்றை அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த ஹியூகோ முறே என்பவர் ஆர்குவெதஸ்ஸிடம் கொடுத்தார். ஆர்குவெதஸ் அதைப் படம் பிடித்து நெகடிவ்களை வைத்துக் கொண்டு பிரதியைப் பத்திரமாக வைத்திருப்பதற்காக உதவியாளரிடம் கொடுத்தார். சீ. ஐ. ஏயைப் பழிவாங்குவதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.
கம்யூனிஸத்தையும் கியூபாவையும் இழிவுபடுத்தும் வகையில் சே குவேராவின் டயறியைத் திரிவுபடுத்தி வெளியிடும் முயற்சியில் சீ. ஐ. ஏ ஈடுபட்டிருந்ததென்பது ஆர்குவெதஸ்ஸ¤க்குத் தெரியும். இத்தகவலுடன் டயறியின் நெகடிவ்களை 1968 யூன் 14ந் திகதி பிடெல் காஸ்ட்டோவுக்கு அனுப்பினார். இரண்டு வாரங்களுக்குள் ‘Diary of Che in Bolivia’ ஹவானாவில் வெளியிடப்பட்டது. சீ. ஐ. ஏ யின் முயற்சி பலிக்கவில்லை.
அன்ரோனியோ ஆர்குவெதஸ் நாட்டை விட்டு வெளியேறிச் சிலியிலும் லண்டனிலும் சிறிது காலம் வாழ்ந்த பின் பொலிவியாவுக்குத் திரும்பி விசார ணைக்கு முகங்கொடுத்தார். விசாரணை யில் சீ. ஐ. ஏ பற்றிய பல விடயங்கள் அம்பலத்துக்கு வரத் தொடங்கியதால் அது இடைநடுவில் கைவிடப்பட்டது. மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய ஆர்குவெதஸ் மெக்சிகோவில் அரசியல் தஞ்சம் பெற்றார்.
கேவியெஸ் thinakaran

இலங்கைக்கு ஐ.நா. நிதியுதவிகள் நீடிக்காமல் போகலாம்: ஐ.நா. பிரதிநிதி எச்சரிக்கை

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே தங்கியிருந்தால், ஐ.நா. நிதியுதவிகள் நீடிக்காமல் போகலாம்: ஐ.நா. பிரதிநிதி எச்சரிக்கை
இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவி வழங்குவதை ஐக்கிய நாடுகள் சபையினால் தொடர முடியாது என்று இலங்கைக்கான ஐ. நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
முகாம்களிலே தங்கியிருப்பவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் இன்னமும் தொடருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இந்த முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பச் செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. தலைமைச் செயலரிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை அவர்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று நீல் பூனே தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்கள் என்று அரசாங்கம் கூறும் பத்தாயிரம் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்படாதது குறித்தும் ஐ.நா. பிரதிநிதி தனது விமர்சனத்தை வெளியிட்டார்.
தவிர இலங்கையைச் சேர்ந்த ஐ.நா.வின் இரு பணியாளர்கள், கடந்த ஜூன் மாதம் முதல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து நியூயோர்க்கில் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் கடுமையான விசனத்தை தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளால் அவர்கள் தவறான முறையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Friday, September 11, 2009

Photos

Thursday, September 03, 2009

எப்படி ஒரு பாம்பினால் மிருகத்தை விழுங்கமுடியும்!!!!!!

Wednesday, September 02, 2009

வெள்ளை மாளிகையில் இஃப்தார் விருந்து அளித்தார் பராக் ஒபாமாரமலான் நோன்பை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஃப்தார் விருந்து அளித்தார். இதில் அமெரிக்க வாழ் முஸ்லிம்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உலகில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், அமெரிக்காவுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்த ஒபாமா, விருந்திற்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்றாலும், அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நகைக்சுவை பொங்கப் பேசினார்.ஒபாமாவுக்கு முன் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும், வெள்ளை மாளிகை இஃப்தார் விருந்து அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாக ஆபிரிக்க மாநாட்டில் கடாபி சீற்றம்


ஆபிரிக்க நாடுகளிலிருந்து இஸ்ரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு லிபிய ஜனாதிபதி கோரிக்கை
பிராந்தியத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாக ஆபிரிக்க மாநாட்டில் கடாபி சீற்றம்
கெய்ரோ, செப்டம்பர் ஏ.எப்.பி
ஆபிரிக்க நாடுகளிடையே நிலவும் முரண் பாடுகள் இஸ்ரேல் யூத அரசாங்கத்தால் ஏற் படுத்தப்பட்டதாகத் தெரிவித்த லிபிய ஜனாதி பதி முஹம்மத் கடாபி இஸ்ரேல் தூதரகத்தை ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண் டுமென அழைப்பு விடுத்துள்ளார். லிபியத் தலை நகர் திரிபோலியில் ஆபிரிக்க நாடுகளின் மாநாடு ஆரம்பமானது.
இரண்டு நாள் மாநா ட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய லிபிய ஜனாதிபதி முஹம்மத் கடாபி ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத் தினார். பொதுவான நாணயம் பொதுவான வங்கி முறை பொதுவான இராணுவம் உள்ளி ட்ட அமைப்புகள் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசி யம். இந்நாடுகளுக்கு எல்லைகள் தேவையில்லை. எல்லைகளை நிர்ணயித்து எம்மை வேறாக்கியது சர்வதேசம் இந்த சதி வலையில் தொடர்ந்தும் நாம் சிக்க முடியாதென்றும் லிபிய ஜனாதிபதி உரையாற்றினார்.
சூடான் சாட் ஆகிய நாடுகளின் எல்லை முரண்பாடுகள் சூடானின் டர்புர் பிரச்சினை என்பவற்றைத் தீர்ப்பதற்கு ஆபிரிக்க யூனியன் பங்காற்ற வேண்டும். ஐ.நா.வின் தேவையில் லாத தலையிட்டை ஆபிரிக்க நாடுகளிலிருந்து நீக்குதல் உட்பட வெளிநாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆபிரிக்க நாடுகளை விடுதலை யளிப்பது பற்றியும் இம்மாநாட்டில் ஆலோசிக் கப்பட்டது.
சுமார் 53 நாடுகள் ஆபிரிக்க யூனி யனில் அங்கம் வகிக்கின்ற போது இம்மாநா ட்டில் முப்பது நாடுகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷிரும் இம்மாநாட்டில் பங்கேற்றார். இவர் மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் எழுந்த நெருக்கடியான சூழலை ஆபி ரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் எதிர்நோக்கின. டர்புர் பிரச்சினைக்கான தீர்வு சூடான் அர சாங்கத்தின் கைகளில் உள்ளது என்பதை மாநாடு அழுத்திக் கூறியது.
லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இடம் பெறும் வேளையில் இந்த மாநாடு ஆரம்பமா கியுள்ளது. திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரி க்க நாடுகள் மாநாடு நேற்று செவ்வாய்க் கிழமை முடிவடைந்தது. லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளியான லிபியப் பிரஜை விடுதலையானமையால் மேற்குலக நாடு களுடனான உறவை விஸ்தரிக்க லிபியா எண் ணியுள்ளது. இஸ்ரேலை நேரடியாகத் தாக்கிப் பேசியமையால் மேற்குலக நாடுகள் சில அதிருப்தி தெரிவித்துள்ளன.