Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Unmoveable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன் மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page File) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான Ram இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாதபோது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும். இதனையே பேஜ் பைல்/ ஸ்வொப் பைல் (Swap File) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது.
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணனியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம். அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter என்னும் யூட்டிலிட்டி விண்டோஸ¤டன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படு கிறது. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகு இந்த அன் மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாக இருக்கும்.
பேஜ் பைல் அல்லது ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்கு விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel/ Systerm/ Advanced tab/ Performance Setting/ Advanced tab/ Change தெரிவு செய்யுங்கள். அங்கு (Virtual Memory) என்பதன் கீழ் No paging file தெரிவுசெய்து ஷிலீt என்பதைக் கிளிக் செய்யுங்கள் பின்னர் கணனியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum Size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட்டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது கணனியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும். ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும் போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த ணிபிஹி பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்டரியில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start - Run - Regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரை (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE/SYSTEM/ Current Control Set/ Control/ File system வரை பயணித்து NtfsMft Zone Reservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலதுபுறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்Zடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்Zடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.
thinakaran

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு


அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறியhttp://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.
இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-
நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.
வோஷிங்டன், நவ. 27

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி


ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தனர். லிபியா தூதரகம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடாபியை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் 200 பெண்களும் வந்திருந்தனர். கடாபி உறுதி மொழி படிக்க அந்த பெண்களும் அந்த உறுதி மொழியை சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குரான் புத்தகம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் கடாபி இந்த கூட்டத்தில் பேசினார். இதுபற்றிய விரிவான கையேடு ஒன்று 200 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் குறிப் பிடுகையில், " இந்தகூட்டத்தில் கலந்து கொண்டால் சில ஆயிரம் ரூபாய் பணமும், லிபியா நாட்டு பரிசு பொருட்களும் கிடைக்கும், என கூறினார்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை' என்றனர்.கடாபி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டனவாம். அதாவது, "ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. அவர் இருந்த இடத்தில் யாரோ ஒரு நபர் இதேபோல இருந்துள்ளார்'என, இந்த கூட்டத்தில் பேசிய சிலர் தெரிவித் தார்கள், என மதமாறிய பெண்கள் தெரிவித்தனர்.

ஆப்கான் அமெரிக்காவுக்கு ~பொறி' ஆகிவிட்டது

வளர்ந்த கடா மார்பில் பாய்கின்றது.

ஆப்கானிஸ்தானில் வைத்த காலை எடுக்க முடியாமல் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் திண்டாடுகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகக் கூடுதலான படையினரைக் கொண்டுள்ள நாடு பிரித்தானியா. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட 9000 பிரித்தானியப் படையினரில் 234 பேர் இதுவரையில் சண்டையில் இறந்துள்ளனர்.
இது பிரித்தானியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரருக்கு அவசியமாகத் தேவைப்படும் ஹெலிகொப்ரர்கள், கவச வாகனங்கள் போன்றவற்றைப் போதுமான எண்ணிக்கையில் அனுப்பாததாலேயே படைவீரர்கள் இறக்க நேர்ந்தது என்ற குற்றச்சாட்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து படை வீரரைத் திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு வலுத்து வருகின்றது.
பிரித்தானியாவில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரர் விவகாரம் தேர்தலில் தொழிற் கட்சிக்குப் பாதகமாக அமையலாம் எனக் கருதிய பிரதமர் கோர்டன் பிறவுண் ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச மகாநாடொன்றை லண்டனில் நடத்துவதற்கு முன்வந்திருக்கின்றார்.
அடுத்த வருட முற்பகுதியில் இந்த மகாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் படைவீரருக்குப் போதியளவு பயிற்சி அளித்துவிட்டு நேட்டோ படைகள் வெளியேறுவதற்கான கால அட்டவணையைத் தீர்மானிப்பது இம் மகாநாட்டின் பிரதான நோக்கம்.
பிரித்தானியா மாத்திரமன்றி, மற்றைய நேட்டோ நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதையே விரும்புகின்றன.
சர்வதேச மகாநாடொன்றைக் கூட்டி ஆப்கான் நிலைமை பற்றி விவாதிக்க வேண்டும் என்ற ஆலோசனையைப் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், ஜேர்மன் அதிபர் அஞ்செலா மேர்கெல், பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி ஆகியோர் செப்ரெம்பர் மாதத்தில் கூட்டாக முன்வைத்தனர். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாகவே லண்டனில் மகாநாடு நடத்துவதற்கு கோர்டன் பிறவுண் ஏற்பாடு செய்கின்றார்.
இந்த நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புகின்ற போதிலும் தனியாக வெளியேறுவதற்குச் சாதகமாகச் சமகால சர்வதேச ஒழுங்கு இல்லை. எனவேதான் மகாநாடு கூட்டித் தீர்மானிக்க முனைகின்றன.
இதே நேரம், இரண்டு வருட காலத்துக்குள் கூடுதலான படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. அந்தளவுக்குத் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது. 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் 26607 அமெரிக்கப் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 48250 ஆக உயர்ந்தது. 2009 ஜனவரியில் 3000 படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். பெப்ரவரியில் மேலும் 17000 பேர் அனுப்பப்பட்டனர். மேலும் துருப்புகளை அனுப்புவதற்கு ஒபாமா முடிவு செய்திருக்கின்றார்.
நேச நாடுகள் தங்கள் படையினரைத் திருப்பி அழைப்பது பற்றி ஆலோசிக்கும் போது அமெரிக்கா மேலும் மேலும் துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புகின்றது.

அமெரிக்காவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அமெரிக்காவினாலேயே உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் சோவியத் சார்பு ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா வளர்த்தெடுத்தவர்களே தலிபான்கள். பாகிஸ்தானில் தளங்களை அமைத்துப் பெருமளவு பணச் செலவுடன் தலிபான்களை அமெரிக்கா வளர்த்தது.
தேவையான ஆயுதங்களும் பாகிஸ்தானுக்கூடாக வழங்கப்பட்டன. தலிபான்களுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளித்ததால் இன்று அவர்கள் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது. அமெரிக்கா வளர்த்த கடா இன்று அதன் மார்பிலேயே பாய்கின்றது.
ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலான படையினரை அனுப்புவதோடு பாகிஸ்தானுக்கும் சகல விதமான உதவிகளைச் செய்ய வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தலிபான்கள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதால் அவர்கள் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பதற்குப் பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி தேவை.
மேலும், பாகிஸ்தானுக்குள் இருக்கும் தலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
இதனால் பாகிஸ்தானுக்குத் தேவைப்படும் நிதி, ஆயுத, இராஜதந்திர உதவிகளைச் செய்வதை அமெரிக்கா தவிர்க்க முடியாது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அடிக்கடி நிதியுதவி வழங்கி வருகின்றது. 750 கோடி நிதியுதவி வழங்கும் ஆவணத்தில் ஒக்ரோபர் 15ம் திகதி ஒபாமா கையொப்பம் இட்டார். இது அமெரிக்காவின் பிந்திய நிதியுதவி.
இராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சி பலனளிக்காதது போலவே அரசியல் ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியும் திருப்திகரமான பலனைத் தரவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஹமிட் கர்ஸாய் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லாவிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். கர்ஸாய் பெற்ற வாக்குகள் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் என அறிவிக்கப்பட்டது. கர்ஸாயின் வெற்றியை ஏற்க முடியாது என்ற சமிக்ஞையை அமெரிக்கா வெளிப்படுத்தியது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்குமான அமெரிக்கத் தூதுவர் றிச்சாட் ஹோல்புறூக் கர்ஸாயின் ஆதரவாளர்கள் பெருமளவு வாக்குத் திணிப்புச் செய்ததால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பகிரங்கமாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுபெற்ற தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழு கர்ஸாயின் வாக்கு வீதத்தை 54 வீதத்திலிருந்து 48.6 வீதமாகக் குறைத்தது. தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவொன்று வெற்றிபெற்ற வாக்காளரின் வாக்கு வீதத்தைக் குறைத்துப் பிரகடனப்படுத்திய நிகழ்வு இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை. இந்த ஆணைக் குழு அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டதென்பது தெரிந்த விடயம்.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பதை முழு உலகமும் அறியும். பெருமளவில் வாக்குத் திணிப்பு இடம்பெற்றது.
வாக்காளர்களாக 12 வயது நிரம்பாதவர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அப்துல்லாவும் தேர்தல் முறைகேடுகள் பற்றி முறைப்பாடு செய்திருந்தார். எனினும் தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரகடனம் அதிரடியானது.
ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்தின்படி, அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 50 வீதத்துக்குக் கூடுதலாக எந்தவொரு வேட்பாளரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெற வேண்டும். நவம்பர் 7ந் திகதி இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெறுமென அறிவிக்கப் பட்டது.
தேர்தல் ஆணையாளர் பக்கச்சார்பானவர் என்பதால் வாக்களிப்புக்கு முன் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்காததால் அப்துல்லா நவம்பர் 1ந் திகதி போட்டியிலிருந்து விலகினார். கர்ஸாய் தெரிவானதாகத் தேர்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியது.
கர்ஸாய் அமெரிக்காவின் ஆள். அமெரிக்காவினால் ஜனாதிபதிப் பதவியில் இருத்தப்பட்டவர். அவர் தோற்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமல்ல.
அண்மைக் காலத்தில் கர்ஸாய் அமெரிக்கா கீறிய கோட்டுக்கு அப்பால் சென்று செயற்பட முற்பட்டதால், அவரை வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனேயே அவரது தேர்தல் முடிவுகளைப் பற்றி அமெரிக்கா பிரச்சினைகளைக் கிளப்பியது. குறிப்பாக தேர்தல் பிரசார காலத்தில் அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் விதத்தில் கர்ஸாய் நடந்துகொண்டார்.
அஹமட் ரiட் டொஸ்ரம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறித் துருக்கியில் வாழ்ந்தவர். கர்ஸாய் அவரை அழைத்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் குவாஸிம் பாஹிம் போதைவஸ்துக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவினால் உட்படுத்தப்பட்டிருப்பவர்.
இவரைத் தனது உப ஜனாதிபதியாக கர்ஸாய் பிரகடனப்படுத்தினார். இச் செயற்பாடுகளையிட்டுத் தனது அதிருப்தியைக் கர்ஸாய்க்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தல் முடிவு பற்றி அமெரிக்கா பிரச்சினை கிளப்பியது.
ஆப்கானிஸ்தானில் இன அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் கர்ஸாய் பெரும்பான்மையான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவரென்பதால் இரண்டாவது சுற்று வாக்களிப்பிலும் தாஜிக் இனத்தைச் சேர்ந்த அப்துல்லாவிலும் பார்க்க அவர் கூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியாதவையல்ல.
அமெரிக்காவின் சமிக்ஞை கர்ஸாயிடம் மாற்றம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. கர்ஸாய் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவருக்கு இரு புறத்திலும் டொஸ்ரமும் பாஹிம்மும் நின்றார்கள்.
இது அமெரிக்காவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் செயல். ஆனால் உடனடியாக அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது. அதிரடி நடவடிக்கை பாதகமான விளைவுகளுக்கு வழிகோலலாம்.
ஆப்கானிஸ்தானை அமைதியற்ற பிரதேசமாக அமெரிக்கா ஆக்கியிருக்கும் பின்னணியிலேயே ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின் எட்டாவது ஆண்டு நிறைவுக்கு அடுத்த நாளிலேயே இப்பரிசு பற்றிய அறிவித்தல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
சங்கர சேயோன்

நிவாரணக் கிராமங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்


எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரலாம்
(கே. அசோக்குமார்)
வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப் பட்டு வந்த சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று இந்த அறிவித்தலை விடுத்தார். இவ்வறித்தலின்படி நிவாரணக் கிராமத்திலுள்ள அனைவரும், நாட்டிலுள்ள எப்பகுதிக்கும் சென்றுவர முடியும். அதேநேரம், உறவினர்களையும் அவர்கள் பார்க்கவும் முடியும்.
ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுடன் மீளக் குடியேறும் மக்களுக்கு இதுவரை வழங்கிய 25,000 ரூபா கொடுப்பனவு டிசம் பர் 15 ஆம் திகதி முதல் 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தங்க வைக்கப்பட்டி ருந்த மக்கள் முகாமைவிட்டு வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. உறவினர்கள் வந்து பார்ப்பதோ அல்லது முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்வதோ தடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவை அனைத்தும் நீக்கப்படுவதுடன் அவர்கள் சுதந்திரமாக செல்ல முடியும். இப்பகுதியி லிருந்து மக்கள் சென்றுவர பஸ் போக்கு வரத்து வசதிகளும் செய்யப்பட வுள்ளன.
மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகளின் எண் ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். மேலும் 6 மாதங்களுக்கு உலர் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘இடம்பெயர்ந்துள்ளவர்களுள் தற்போது சுமார் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே இன்னமும் நிவாரணக் கிராமங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.
இடம்பெயர்ந்தவர்கள் என நாட்டில் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே எமது அரசு செயற்படுகிறது, என அங்கு உரையாற்றிய ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
வடக்கில் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல் களுக்கு அமைய பசில் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார் என நேற்று முன்தினம் அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
வவுனியா சென்ற பசில் ராஜபக்ஷ எம்.பி. வவுனியா நிவாரணக் கிராமங் களிலுள்ள மக்களை சந்தித்து உரையாடிய துடன் அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பையும் விடுத்தார்.
தற்போது வவுனியா நிவாரணக் கிராமங்களில் 1,27,495 பேரளவில் மட்டுமே உள்ளனர். இவர்களும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தப்படுவதுடன் அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுவிடும் என ஆளுநர் ஜீ. சந்திரசிறி தெரிவித்தார்.

கிளோ குடியிருப்பு விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது

நஸரத் - ஆக்கிரமிக்கப்பட்ட தென் ஜெரூசல நகரில் பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட

பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ குடியிருப்பு


நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ (Gilo) குடியிருப்பை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேலிய அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. டெல் அவிவாக இருந்தாலும் புனித நகரான ஜெரூசலமாக இருந்தாலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைப் பொறுத்தவரையில் தான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்று அது குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்குப் பதிலளித்துப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரியொருவர், ‘கிளோ குடியிருப்பானது ஐக்கிய ஜெரூசலத்தில் ஓர் இன்றியமையாத பகுதியாகும்’ என்றும், ‘அதன் விரிவாக்கப் பணி ஒரு வழமையான செயற்திட்டமாகவே அமையும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் என யெடிஒத் அஹ்ரனொத் (Yedioth Ahronoth) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் கிளோ குடியிருப்பின் கட்டுமானப் பணிகளுக்கான வரைவுத் திட்டத்தை அங்கீகரிக்கும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல்
முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறித்து அமெரிக்க நிர்வாகத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் (George Mitchell) இஸ்ரேலியப் பிரதமரின் ஆலோசகர் யிட்சாக் மொல்ச்சோ(Yitzhak Molcho)வுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்ததாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது.
மேற்படி குடியிருப்பு விரிவாக்கச் செயற்பாடானது பலஸ்தீன் அதிகார சபையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பின்னடையச் செய்யும் அபாயம் உள்ளது என மிச்சேல் தெரிவித்துள்ளார்.
நன்றி: PIC

இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது- ராஜினாமா கடிதத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது. அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையை வெளிக்காட்டுகின்றது என்று முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாத அதேவேளை பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலைமை எதிர்காலத்தில் மற்றுமொரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பாதுகாப்பு செயலர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய இந்தத் திடீர் முடிவுக்கான 16 காரணங்களை சரத் பொன்சேகா தெளிவுபடுத்தியிருந்தார்.இவ்வாறு அவரால் குறிப்பிடப்பட்ட அந்த 16 காணரங்களும் பின்வருமாறு :
01. இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வரையில் நான் இராணுவத் தளபதியாக நீடிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆயினும் அது அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டமாக அமையும் என்று கூறி சில சக்திகள் உங்களை திசை திருப்பியதால் எனது கோரிக்கையைத் தட்டிக் கழித்தீர்கள். அத்துடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று விட்ட நிலையில் இராணுவத் தளபதி பதவியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் பின்னணியில் என்ன சதித்திட்டம் இருக்கின்றது என்பது இராணுவத்தினருக்கு நன்றாகத் தெரியும்.
02. யாழ்.கட்டளையிடும் அதிகாரி சேவையை கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டு வந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை என்னையடுத்து இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை கவனத்திற் கொள்ளாது, 'ஹோல்டிங் போமேஷன்' என்ற வகையிலான கட்டளையிடும் அதிகாரியாக மட்டுமே இறுதிக் கட்டப் போரில் கடமையாற்றியவரும், ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவருமான ஒருவரை எனக்கு பதிலாக நியமித்தீர்கள்.
03. நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைத் திசை திரும்பும் வகையில், எந்தவொரு அதிகாரமும் இல்லாத, அதேநேரம் தொடர்பாடல் எனும் பொறுப்பை மாத்திரம் கொண்டதும் இராணுவத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவிக்கு என்னை நியமித்தீர்கள். இராணுவ வெற்றியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே இராணுவத் தளபதி என்ற பதவியை துறக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனக்கு கட்டாயப்படுத்தினார். அந்த வகையில் இரண்டு மாதங்களுக்குள் நான் இந்த பதவியிலிருந்து விலகுவேன் என்று ஜனாதிபதியாகிய உங்களிடம் வாக்குறுதி அளித்தேன். இருப்பினும் எனக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக என்னால் யுத்த வெற்றிக்கு காரணமாகவிருந்த இராணுவ வீரர்களுக்கான உதவிகளைக் கூட வழங்க முடியாமல் போனது.
04. அதேவேளை எனக்கு வழங்கப்பட்ட இந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவியானது என்னை தட்டிக்கழிப்பதற்காக வழங்கப்பட்ட பதவியாகும். இந்தப் பதவியில் பல்வேறு அதிகாரங்கள் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், நான் பதவிக்கு வந்ததன் பின்னர் பாதுகாப்பு செயலாளரினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றில், எனது பதவி இராணுவத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டது என்றும் அதனையும் மீறிய அதிகாரம் எனக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் எனக்கு அதிகாரங்களை வழங்க நீங்களும் அரசாங்கமும் விரும்பவில்லை என்பதையும் என் மீது உங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
05. இராணுவ உயர் அதிகாரிகளினுடனான பாதுகாப்பு செயலாளர் முப்படைகளையும் உள்ளடக்கிய அதிகாரம் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படுமாயின் அது இக்கட்டான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று தெரிவித்தார். இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் கூறப்பட்ட இக்கருத்தினால் நான் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளானேன்.
06. இராணுவ வெற்றி கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இனித் தேவைப்படாது என்றும் தேவைக்கதிகமான இராணுவ பலமொன்று நாட்டில் இருப்பதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியாகிய உங்களால் தெரிவிக்கப்பட்டது. இராணுவ வெற்றி தொடர்பில் பெருமைப்பட்டுக் கொண்ட நீங்கள், இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்தமை மட்டமான ஒரு விடயமாகும். எப்பொழுதுமே பெறமுடியாதென கருதிய வெற்றியை ஒரு வாரத்திற்குள், உங்களுக்கே சாதகமான இராணுவத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட நிலையிலும் அந்த இராணுவத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளீர்கள் என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் உணர்ந்து கொண்டேன்.நான் இராணுவ தளபதியிலிருந்து விலகிய நிலையிலும் நீங்கள் இந்தக் கருத்தினை மற்றுமொரு தடவை முன்வைத்தீர்கள். இந்தக் கருத்து எனக்கு அருவருப்பை ஏற்படுத்தியதுடன் யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் அமைந்தது.
07. தற்போதைய இராணுவத் தளபதி பதவியேற்றதன் பின்னர் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியாக செயற்பட்ட எனது மனைவி மற்றும் அவருடனிருந்த கனிஷ்ட பிரிவு அதிகாரிகளைக் கூட இடமாற்றம் செய்தார். இது அதிகாரிகளின் நடுநிலையான தன்மைக்கு சவால் விடுப்பதுடன், என்னுடைய தலைமைத்துவம் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி இராணுவ அதிகாரிகளை தைரியமற்ற தன்மைக்கு கொண்டு செல்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
08.தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது.இந்நிலைமை என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. பயங்கரவாத இயக்கமொன்றை தோற்கடிக்கக் கூடிய திறமையினையும் தொழில்வல்லமையையும் கொண்ட இலங்கை இராணுவத்தின் கீர்த்தி இதனால் சர்வதேசத்தின் முன்னிலையில் தலைகுனிய நேரிட்டது. வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த என்னுடைய தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரின் நடவடிக்கையே இந்த சந்தேகத்திற்கு வழிவகுத்தது.
09.தனிப்பட்ட சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு கடந்த அக்டோபர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரையில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். இந்தக் காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்த சிங்க ரெஜிமென்டின் வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு வேறு ரெஜிமென்ட்களைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த 4 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்டிருந்த மேற்படி வீரர்கள் ஒரேஇரவில் பாதுகாப்பு செயலரின் எண்ணத்திற்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டமையானது வருந்தத்தக்க விடயமாகும்.
10. பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கமைய கஜபா ரெஜிமண்டின் வீரர்கள் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்தில் சேவைக்கு அமர்த்தப்பட்டமையானது இராணுவத்தின் நடுவுநிலைமை சிதைவடைந்ததை எடுத்துக்காட்டியது. அத்துடன் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதும் இதன்மூலம் வெளிப்படையாகியது. இந்த நடவடிக்கைக்கு இராணுவத் தளபதி ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வெளிப்படையான உண்மையாகும்.
11. எமது நாட்டின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட ரீதியிலான ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ளாது, என்னையொரு தேசத்துரோகியாக காண்பிக்கும் வகையில் அரசின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பொய்ப்பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளித்தமை என்னை விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
12. நான் வெளிநாடு சென்றிருந்த போது எனது கடமையை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு பதில் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. இதனால் நான் வகிக்கும் பதவி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருப்பதாக பல தரப்புகளிலும் பேச்சு அடிபட்டது. இதுவே உண்மை நிலையுமாகும்.
13. சாதாரண மட்டத்தில் இருந்து தரமுயர்த்தி, என்னால் பெரும்பாடுபட்டு கட்டிக்காக்கப்பட்ட இராணுவ சேவையிலிருந்து நான் தற்போது புறந்தள்ளப்பட்டமையானது கவலைக்குரிய விடயமாகும்.
14. யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை மென்மேலும் வருத்துகின்றது. அவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் வாழ வைப்பதற்காக, விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து மீட்கும் முயற்சியில் இராணுவ வீரர்கள் பலரும் உயிர்த் தியாகங்களைச் செய்தனர். இருப்பினும் அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையைக் குறித்துக் காட்டுகிறது. தங்களுடைய பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வரையில் அந்த மக்களின் உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அம்மக்களுக்கு இடமளிக்க வேண்டும்.
15. என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் உங்களுடைய அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாமையானது, பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருவதற்கு சமமானது. அத்துடன் எதிர்க்காலத்தில் மற்றுமொரு போராட்டம் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் முடிவில் அனைத்து இன மக்களும் எதிர்ப்பார்த்திருந்த சமாதானத்தின் பிரதிபலன், இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அழிவும் வஞ்சகமும் மென்மேலும் தலையெடுத்துள்ளது. ஊடக அடக்குமுறை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எமது தாய் நாட்டுக்கு சமாதானத்தையும் சமரசத்தையும் கொண்ட யுகத்தை ஏற்படுத்திக் கொடுக்க எம்மால் முடியுமானால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரின் முயற்சி மற்றும் தியாகங்கள் வீண் போகாது.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18990

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை : இந்தியச் செய்திகள் தகவல்


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வருகின்றார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில் பிரணாப் இலங்கை வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இதுவரை கொழும்பு செல்லாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்பு செய்வதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.பிரணாப் முகர்ஜி, நாளை டில்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் சென்னை வந்து, பின்னர் 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார். முதல்வருடன் சந்திப்பு சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மேலும், ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.ராஜபக்ஷ - பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் செல்வதாகவும் ஒரு கூற்று உள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கவை காங்கிரஸ் கட்சி டில்லிக்கு அழைத்து ராஜபக்ஷவுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.சரத் பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவர் சீனா மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, சமீப காலமாக சீனா, பாகிஸ்தானுடன் படு தோழமையாக உள்ளது இலங்கை. இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்று தெரிகிறது." இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
virakesari

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவும் பண்பாடுகளும்

இலங்கை முஸ்லிம்கள், தென்பகுதி சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக, இன ஐக்கியத்தைப் பேணி வாழ்ந்து வந்தது போலவே, தொன்றுதொட்டே வடக்கு, கிழக்கில் தமிழர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு தமிழர்களுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுக்குப் போதியளவு முக்கியத்துவம் அளிக்கப்படாதிருப்பது ஒரு குறையாகும்.
இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் அரபிகளது வழித்தோன்றல்களாக இருந்தும் அரபைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை. சுமார் 70% முஸ்லிம்கள், சமூக தொடர்புகளுக்கான பிரதானமான மொழியாக சிங்களத்தைக் கொள்ளும், வடக்கு கிழக்கு தவிர்ந்த, வெளிமாவட்டங்களில் வாழ்ந்த போதிலும், அந்த சிங்களம் அவர்களில் பெரும்பாலானவர்களது தாய் மொழியாக இல்லை.
அவர்களும் பெரும்பாலும் தமிழையே தாய் மொழியாகக் கொள்கிறார்கள். இதிலிருந்து முஸ்லிம்களுக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குமிடையேயுள்ள உறவின் பலத்தை ஊகிக்க முடியும். சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தை தமது மொழியாகக் கொள்ளாதிருப்பதால் பல சிரமங்களையும் நெருக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தொடர்பாடல், அரசியல் போன்ற பல துறைகளில் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூட அதனைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். தமிழை தமது தாய்மொழியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்குக் கூட முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துவருவதோடு, இன்பத் தமிழ் என அதனை கூறுகிறார்கள்.
தமிழை அரபு எழுத்துக்களில் ‘அரபுத்தமிழ்’ என்ற பெயரில் எழுதி, தமது சமய போதனைகளை அதனூடாகச் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ‘அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என அதனைப் போற்றினார்கள்.
மொழி ரீதியில் நோக்கும் போது முஸ்லிம்களும் தமிழர்களும் சகவாழ்வைப் பேணிவந்தமையை இது குறித்து நிற்கிறது. இரு இனங்களையும் இணைக்கும் பிரதான பாலமாக தமிழ் மொழி அமைந்தது.
இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள்; மதத்தால் முஸ்லிம்கள்’ என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் கூறுமளவுக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் பல்வேறுபட்ட ஒற்றுமைகளோடு வாழ்ந்து வந்திருகிறார்கள்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தென்பகுதியைப் போலவே மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சிறுபான்மையாக வாழும் அவர்களது கிராமங்கள், தமிழ் கிராமங்களுக்கு அருகருகே அமைந்துள்ளன.
வியாபாரம், கலாசாரம், அரசியல், சமூக உறவுகள் போன்றன இருசாராரையும் ஒருங்கிணைத்து வந்துள்ளன. அண்மைக்கால இனவாத சூழல் உருவாகும் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்ததாகக் கொள்ள முடியும். வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் பல்வேறுபட்ட விகிதாசாரங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணத்துக்காக சில பிரதேசங்களது புள்ளிவிபரங்களை மாத்திரம் இங்கு நோக்கலாம்.
மன்னார் முஸ்லிம்கள்
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாந்தோட்டத் துறைமுகத்துடனான அரபிகளது தொடர்பு மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
12ம் 15ம் நூற்றாண்டு காலத்தில் இப்பிரதேசங்களுடனான (அவர்களது) தொடர்பு பன்மடங்காகியது. சேர் அலேக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் கருத்துப்படி இக்காலகட்ட மன்னார் பிரதேசம் முஸ்லிம்களின் வர்த்தக மையம் (Emporium of Trade) ஆகக் காணப்பட்டது. மாந்தோட்டத் துறைமுகம் இவர்களது கப்பல் இறங்கு துறையாகவும் வர்த்தக பண்டகசாலையாகவும் விளங்கியது. முஸ்லிம்களால் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் ஓங்கி வளர்ந்தது.
மன்னார் பகுதி முஸ்லிம்கள் ஏற்றிறக்குமதியில் மட்டுமன்றி, முத்துக்குளிப்பது, சங்கு எடுப்பது, படகோட்டுவது போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
காலனித்துவ ஆட்சியாளர்கள் இவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார்கள். இருப்பினும் முத்துக்குளிப்பிலும், சங்கு குளித்தலிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்பட்டமைக்கு அத்தொழிற்துறை சார்ந்த அம்மக்களது தேர்ச்சிதான் காரணமாகும்.
1902ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, மன்னார் மாவட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் செறிவைக் கொண்ட 29 குடியிருப்புக்களில், மாந்தை- நானாட்டான் பிரதேசத்தில் மட்டும் 11 குடியிருப்புக்கள் இருந்தன.
ஆனால், இப்பிரதேச முஸ்லிம் கிராமங்கள் கத்தோலிக்க அல்லது இந்து சமய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலில் அமையப்பெற்றுள்ளன. இன்னொரு விதத்தில் பார்த்தால் முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடொன்று புவியியல் ரீதியாகத் தொடர்பற்றிருந்தன.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேச முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் தமிழர்களுடன் அதிக தொடர்புகளை வைத்திருந்தார்கள். வயல் வேலைகளில் இவ்விரு இனத்தவரும் பரஸ்பரம் உதவி செய்தார்கள்.
கொடுக்கல் வாங்களில் மிகவுமே கெளரவமாக நடந்து கொண்டதோடு பிணக்குகளின் போது பிரச்சினை முற்றிவிடாது. அப்பிரச்சினையை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை வழிகளைக் கொண்டிருந்தனர்.
ஒருவரது சுகதுக்கங்களில் மற்றவர் மிகச் சரளமாகப் பங்குபற்றினர். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உறவுப் பதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள். ஒரு சமயத்தவரின் விருந்தோம்பல்களில் மற்றவர் எவ்வித சங்கடமுமின்றி பங்கேற்கும் வழமை இப்பிரதேசத்தில் காணப்பட்டது. (4)
யாழ்ப்பாண முஸ்லிம்கள்
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்துவந்தார்கள். எம். எஸ். அப்துல் ரஹீம் என்பவர், இலங்கையில் முஸ்லிம்கள் தென் பகுதிக்கு முன்னர் வட பகுதியில்தான் முதன் முதலில் குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.
‘கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் தமிழர் ஆதிக்கம் இலங்கையின் தென்பகுதி, மேற்குப் பகுதிகளில் குறைவாகவே இருந்திருக்கிறது. வட பகுதியே காலத்துக்குக் காலம் நிகழ்ந்த தென்னிந்தியப் படையெடுப்புக்களாலும் குடியேற்றங்களாலும் தமிழர் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இங்கு முதலில் முஸ்லிம்கள் குடியேறி அங்குள்ள மக்கள் மத்தியில் அடைந்த செல்வாக்கக் காரணமாக ஏற்கனவே குடிகொண்டிருந்த இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு இலக்கானதன் காரணத்தால் உயர் குடியிற் பிறந்த நல்லொழுக்கமுடைய இந்துப் பெண்மணிகள் இஸ்லாத்தை ஒப்புக்கொண்டு இவர்களுக்குத் துணைவியராகும் வாய்ப்பைப் பெற்றனர்.
’ இப்படியாக தமிழ்ப் பெண்களை அராபியர் மணந்ததனாலேயே அவர்களின் தாய்மொழி தமிழாக இருக்கிறது. முதற் குடியேற்றம் சிங்கள மக்கள் சூழவுள்ள பேருவளையில் நிகழ்ந்திருந்தால் முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக இருந்திருக்க வேண்டும்.
அத்துடன் சிங்களவரின் பண்பாட்டு அம்சங்களும் நிறைந்திருக்க வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் பண்பாட்டு அம்சங்களில் தமிழர் பண்பாட்டின் செல்வாக்கு விரவியிருத்தலை நன்கு அவதானிக்க முடியும்.
போர்த்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தில் இருந்த பள்ளிவாசல்கள், கட்டிடங்கள் யாவற்றையுமே சிதைத்து அந்தக் கற்களைக்கொண்டே பறங்கியத் தெருப் பகுதியில் கட்டிடங்களை நிர்மாணித்தபடியால் எந்தவிதமா வரலாற்றுச் சான்றுகளும் பெறமுடியாது போய்விட்டன.” என அப்துர் ரஹீம் எழுதுகிறார். இக்கூற்று ஆய்வுக்குரியதாகும்.
யாழ்ப்பாணம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும் நுகரைப்பற்று எனும் பகுதியில் முழுக்க முழுக்க முஸ்லிம்களே (துலுக்கர்) வாழ்ந்தார்கள் என்றும் சான்றுகள் கூறுகின்றன. 13ம் நூற்றாண்டில் துலோத்துங்க என்பான் யா¡ப்பாகுவையை அழித்த வேளை யாவுகர்களை (முஸ்லிம்களை) சிறைபிடித்தான். சாவகச்சேரியில் அவர்களைக் குடியேற்றினான்.
யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினார் தீவு, மண்டைதீவு, மண்கும்பான், காரைதீவு எனும் தீவுகளிலும் பரந்து வாழ்ந்துள்ளனர்.
இன்றும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகள் சோனகன் வடவி, சோனக வெளி, சோனக வாடி, சோனக அடி, சோனகரடைப்பு என்னும் முஸ்லிம்களின் தனிப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன. இவை போன்ற பலவற்றையும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகளது தாய் உறுதிகளிலிருந்து பெறலாம்”
மிருசுவிலில் உள்ள உசன், சாவகச் சேகரிக்கும் சங்கத்தானுக்குமிடையிலுள்ள சோனகன் புலவு போன்ற இடப்பெயர்கள், அப்பிரதேசங்கள் முஸ்லிம்களது குடியிருப்புக்களாக இருந்தமைக்கான சான்றுகளாகும். நல்லூர் கந்தசாமிக் கோயிலை அடுத்துள்ள பகுதியில் சோனகன் தோப்பு என்ற பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தார்கள். அங்கு தற்போதும் ஒரு ஸியாரம் காணப்படுகிறது.
இவ்வாறு முஸ்லிம்கள் யாழ் குடாநாட்டிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் தமிழ் சமூகத்துடன் சகவாழ்வைப் பேணி வாழ்ந்தனர். 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வட பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது எனலாம்.
முல்லைத்தீவுப் பகுதி
வட மாகாணத்தின் மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால், மொத்த மாவட்ட சனத்தொகையில் 5% ஐக் கொண்ட முஸ்லிம்கள், பெரும்பான்மைத் தமிழர்களோடும், சிறுபான்மைச் சிங்களவர்களோடும் கலந்து வாழ்ந்து வந்தார்கள். 1921ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி மரிடைம் பற்று உதவி அரச அதிபர் பிரிவில் முஸ்லிம்கள் 6.5% ஆகவும், முல்லைத்தீவு நகரில் 7.5% ஆகவும் வாழ்ந்தார்கள்.
முல்லைத்தீவுப் பகுதியில் முஸ்லிம்கள் 1800ம் ஆண்டு முதல் வாழுகிறார்கள் என்பதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன என கலாநிதி ஹஸ்புல்லாஹ் கூறுகிறார்.
அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வாய்மொழி ஆதாரங்களே உள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போர்த்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த மூன்று கிராமங்களான தண்ணீரூற்று,
நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பவற்றின் வரை படத்தைப் பார்த்தால் முஸ்லிம் பள்ளிவாசல், இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் இப்பிரதேசத்தில் அருகருகே அமைந்திருப்பது இப்பிரதேசத்தின் நீண்டகால இன ஐக்கியத்திற்குச் சான்றாகும்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்திலும் கூட முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர்களது சகவாழ்வு மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். உதாரணமாக, மட்டக்களப்புப் பகுதியில் கி. பி. 5ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் கிழக்குக் கடலில் பயணம் செய்த அரபிகளில் ஒரு சாரார் பூநொச்சிமுனையில் குடியேறி வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் காத்தான்குடிப் பகுதிக்கும் வந்ததாகவும் இவர்களிடமிருந்தே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் தோற்றம் பெற்றதாகவும் பி. ஆர். சிற்றம்பலம் கூறுகிறார்.
அதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட ‘முக்குவர்’ எனும் ஒரு சாரார் அங்கிருந்து மட்டக்களப்புப் பகுதிக்கு வந்த போது அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த திமிலர்கள் அவர்களது வருகையை விரும்பாததால் அவர்களைத் துரத்தியடிப்பதற்கு நாடினர். அப்போது, முக்குவர்கள் அரேபியரது உதவியை வேண்டி நின்றனர்.
அவ்வாறு அந்த அரபிகள் அந்த திமிலர்களை துரத்தியடித்தனால் அந்த அரபிகள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு, நெருக்கம் அதிகரித்து அவர்களுக்கு மிகுந்த கெளரவம் கொடுத்தனர். தற்காலத்தில் குருமண்வெளி இந்துக் கோவிலில் தொப்பி அணிந்த ஒரு சிலை காணப்படுகிறது.
மேலும், ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலில் உள்ள குலவிருது பற்றிய பாடலில், முஸ்லிம்கள் அணியும் தொப்பி பற்றிக் கூறப்படுகிறது. முக்குவர்கள் சவக்குலி ஏலம் விடும் போது ‘முக்குவர்களைக் காத்த பட்டாணியர் போற்றி’ என்று அதனை முடிக்கிறார்கள். இவற்றை அவதானிக்கையில் முக்குவர் - முஸ்லிம்கள் உறவு பற்றிக் தீர்மானிக்க முடியும் என மஹ்ரூப் கரீம் என்பார் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பிற்கு துலுக்கர்களும் பட்டாணிகளும் (முஸ்லிம்களும்) வந்து போன விபரங்களை தமிழர்களின் பூர்வீக சரித்திரத்தைக் கூறும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தெளிவாக்குகிறது. ‘காட்டான், பட்டாணி, சுல்தான், சிக்கந்தர், வேடரோடு வர்த்தகம் செய்வதற்காகச் சில துலுக்கக் குடும்பங்களுடன் மண்முனைக் கடுக்கப்பாளையம் போட்டு வர்த்தகம் செய்தனர். என அந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
முக்குவர்கள் தமக்கு உதவி செய்த முஸ்லிம்களிடம் கைமாறாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்றுமாறு கேட்டபோது, முஸ்லிம்கள் முக்குவர்களின் பெண்களை அடைந்து, இரத்த உறவைப் பலப்படுத்தினர். முஸ்லிம்கள் முக்குவர்களுடன் இணைந்து போரிட்டதனால் அவர்கள் முன்னர் குடியேறத் தடுக்கப்பட்டிருந்த ஏறாவூரில் குடியேறி வாழ அனுமதிக்கப்பட்டனர். வாழைச்சேனையில் குடியேறிய முஸ்லிம்களும் பெரும்பாலும் கத்தான்குடியிலிருந்தே வந்தனர்.
தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் ஊர்களைப் பொறுத்தவரையில், அங்கும் கூட அரபிகளும் இந்திய வியாபாரிகளும் தமது வியாபார நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதிலும் உள்நாட்டுக்கு அவசியமான பொருட்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் அதிகமாகப் பங்கெடுத்தனர். வேடுவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வர்த்தக நீதியான உறவுகள் இருந்து வந்தன. வியாபாரத்துக்காக இலங்கை வந்த பல முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கினார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை ‘மட்டக்களப்பு முஸ்லிம்கள்’ என்றே அண்மைக்காலம் வரை ஏனைய பிரதேசத்தவர்கள் அழைத்து வந்திருப்பதால் இவ்விரு பிரதேசங்களும் வரலாற்று ரீதியாக ‘மட்டக்களப்பு’ என்றே நோக்கப்படுகிறது. கண்டிப் பகுதியுடன் வர்த்தக தொடர்பைப் பேணி வந்த முஸ்லிம்கள், கண்டி மலைப் பிரதேசத்தையும் கிழக்கிலிருந்த துறைமுக பிரதேசத்தையும் இணைத்துக் கொடுத்தார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு அருகருகே தமிழ், சிங்கள கிராமங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. 1971ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் (48.3%) இருக்க, சிங்களவர் (28.2%), தமிழர் (23.2%) ஆகியோர் அதற்கடுத்த நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
1981ம் ஆண்டின் கணிப்பீட்டின் படி அக்கரைப்பற்றில் 12439 தமிழர்களும், 22941 முஸ்லிம்களும், கல்முனை பட்டின சபை எல்லைக்குள் இந்துக்கள் 4779 பேரும், முஸ்லிம்கள் 15940 பேரும் வாழ்ந்தார்கள். இவ்விரு இனங்களும் ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாத அளவுக்கு வியாபாரத்திலும் உறவுகளிலும் ஒன்றில் மற்றையது தங்கியிருக்கின்றன.
எனவே, ஆய்வாளர் ரமீஸ் அப்துல்லாஹ் பின்வருமாறு எழுதுகிறார். ‘(முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான) இவ்வுறவு வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றியிருந்தது. கிழக்கு மாகாண வரலாற்றிலிருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
கிழக்கு மாகாணத்தின் வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழ, தெற்குப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழுகிறார்கள். பொதுவாக ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள், அதற்கடுத்த கிராமத்தில் தமிழர்கள் என கிழக்கு மாகாணம் முழுவதிலும் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்தே வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லிம் ஆண்கள்’முக்குவர்’ சாதிப் பெண்களை மணந்ததால், தமிழர் முஸ்லிம்களிடையே இரத்த உறவுகளும் உள்ளன. இதனால், தமிழர்களின் சாதி முறை மரபுகளும் முஸ்லிம்களும் உரித்தாளிகளாகின்றனர்.
இங்குள்ள முஸ்லிம் சமூகத்தில் சாதி முறை முக்கியத்தும் பெற்றுள்ளதோடு அது மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது முஸ்லிம் சமய ரீதியானதல்ல. மேலும், இங்கு தாய்வழி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழ் பாரம்பரியமே காரணமாகும்.
மணமகனின் காலைக் கழுவி, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, தாலிகட்டி, ஆராத்தி எடுத்து, பால் பழம் கொடுக்கும் சடங்குகள் முஸ்லிம் திருமணங்களிலும் நிறைவேற்றப்படுகின்றன.
கிழக்கில் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் சமயம், சடங்குகள் என்பவற்றை மதித்து கெளரவப்படுத்துகின்றது. கல்முனை ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ்வின் பள்ளி விழா, பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோயில் தீ மிதிப்பு விழா போன்றவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி இரு சமூகத்தவர்களும் கலந்துகொள்கின்றனர். காரைதீவில் பகீர் சேனைத் தைக்கா, அட்டப்பள்ளயத்தில் அவுலியா தர்ஹா போன்ற முஸ்லிம் சமயத் தலங்கள் உள்ளன.
திருவாளர் பாலசுந்தரம் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :-
‘இங்கு (மட்டக்களப்பில்) வாழும் தமிழ் இனத்தவருடன் சகோதரத்துவ மனப்பான்மை பூண்டு, நட்புறவுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையோரான இந்துக்களும் இஸ்லாமியரும் மத அடிப்படையில் வேறுபட்டிருப்பினும் வாழ்க்கை முறைகள், பண்பாட்டு அம்சங்களில் ஒன்றுமைகள் உள்ளன.’ முஸ்லிம்கள் நான்கு திருமணம் செய்ய அனுமதி இருந்தும் செய்யாதிருப்பதற்குக் காரணம் தமிழ் மக்களுடன் அவர்கள் முன்னைய காலங்களில் ஏதோ வழிகளில் ஒன்றுபட்டிருந்திருக்கிறார்கள் என்று கூறுவதில் தவறில்லை.’ என ஆய்வாளர் சித்தீக் கூறுகிறார்.
மேற்படி கூற்றுக்களிலிருந்து முஸ்லிம் சமூகம் தனது நம்பிக்கைக் கோட்பாடு, வழிபாடுகள், வாழ்வு முறை போன்ற அம்சங்களில் இந்துக்களது சமூகத்துடன் சிலபோது ஒன்றித்து விட்டமையைக் கூடக் காண முடிகிறது. அது இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற சகவாழ்வாக அமையமாட்டாது. தனித்துவம் காத்த நிலையில் சகவாழ்வைப் பேணுவதனையே இஸ்லாம் அங்கீகரிக்கும் என்பதனையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்காயினும் ஏனைய பிரதேசங்களாயினும் பொதுவாக முஸ்லிம் - தமிழ் உறவு பற்றி எழுதும் சித்தீக், ‘தமிழ் மொழியை இருசாராரும் பேசுவதால், ஒன்றுபட முடியும். தமிழை முஸ்லிம்கள் தாய் மொழியாகக் கொண்டிருப்பது இரு சமூகங்களுக்கிடையே இறுக்கமான வராற்றுறவு இருந்திருப்பதைக் காட்டும்.
தமிழ் – முஸ்லிம் மக்கள் மொழியில் மட்டுமல்லாது கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு பாரம்பரியம், திருமணச் சடங்குகள் போன்ற சிலவற்றில் சில அம்சங்களிலும், சிலவற்றில் முழுவதுமாக ஒருமைப்பட்டுக் காணப்படுகின்றனர்.
இவ்வம்சங்களிலான ஒருமைப்பாடுகள் பல தனிச் சிங்களப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்கிடையேயும் காணப்படுவதானது, முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் சிங்கள மக்களுடன் அல்லாது தமிழ் மக்களுடனேயே கூடுதலான உறவுகளை வைத்துள்ளனர் என்று நம்பச் செய்கிறது’ என்கிறார். ‘முஸ்லிம்களது சில பெயர்கள் தமிழர்களின் சில பெயர்களது திரிபுகளாகவும் ஒத்தவையாகவும் உள்ளன.
உதுமாநாச்சி, மெளலாமக்காம் நாச்சியா, சின்னராசா, சந்திரா போன்ற பெயர்களைப் பார்க்கும் போது, முன்னைய காலங்களில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை அந்நியர்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.’ என்றும் அவர் கூறுகிறார்.
சிங்களப் பகுதி முஸ்லிம்கள் கூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதற்கும், தமிழ் மக்களின் சில பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதற்கும் காரணம் கூறும் ஐ. எல். எம். அப்துல் அkஸ் அவர்கள், அராபியர்கள் இலங்கைக்கு வந்து முதன் முதலில் குடியேறிய போது, அவர்களைத் தமிழர்களே வரவேற்றனர் என்றும், அடைக்கலம் கொடுத்து ஆதரித்தனர் என்றும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே தமது குடும்ப உறவுகளையும், வர்த்தக உறவுகளையும், திருமண உறவுகளையும் பெருமளவில் வைத்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இதில் பெரியதோர் உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
வடபகுதியில் மட்டுமன்றி, தென்பகுதி முஸ்லிம்களும் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொள்வதற்கு பின்வரும் காரணமும் கூறப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்டது. இக்காலப் பிரிவில் சோள மண்டலக் கரையை (விoroசீலீntal விost) ஒட்டி நடைபெற்ற வணிகத்தில் தமிழ் மொழி முக்கிய இடம்பெற்றது.
அதேவேளை, தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோள மண்டலக் கரையிலுள்ள ‘மஃபர்’ பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும் கலாசாரப் பண்பாட்டு மொழியாகவும் கொள்ளும் வரலாற்றுச் சூழ்நிலையை உருவாக்கியது என ஆய்வாளர் கலாநிதி சுக்ரீ அபிப்பிராயப்படுகிறார்.
எனவே, ஐ. எல். எம். அப்துல் அkஸ் கூறும் காரணத்திலிருந்து கலாநிதி சுக்ரீ கூறும் நியாயம் வித்தியாசப்பட்ட போதிலும், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவுக்கு மேற்படி இரு காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தமாக நோக்கின், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்தது. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் முஸ்லிம்கள் சகவாழ்வைப் பேணி காலாகாலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். பழக்கவழக்கங்கள், சமூக உறவுகள், மரபுகள், வாழ்வு முறை என்பவற்றிலும் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. சிங்கள சமூகத்தவரை விட தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ்ந்தமை அதிகம் என்று கூறுவது கூட பிழையாக இருக்க முடியாது.
அண்மைக் காலத்தில் சில அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இவ்விரு சாராரும் சில கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொண்ட போதிலும் கிட்டிய அண்மைக்காலம் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்தே வந்திருக்கிறது.
சகவாழ்வின் அவசியம்
இரு தரப்புக்குமிடையில் மனந்திறந்த கலந்துரையாடல்கள், சுமுகமான சூழலில் இடம்பெறுமாயின் மீண்டும் பழைய நிலையைக் கட்டியெழுப்புவது சிரமமான காரியமல்ல.
இவ்விடயத்தில் இரு தரப்பைச் சேர்ந்த புத்தி ஜீவிகளது பங்கு மிகவுமே அவசியப்படுகிறது. சுமுகமாக நிலவிவந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அவை மென்மேலும் தொடராதிருப்பதற்கு திடசங்கற்பம் பூணுவது அவசியமாகும்.
மாறாக கடந்தகால தவறுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துவதோ, இடம்பெற்ற தவறுகளை நடக்கவில்லை என்று கூறுவதோ அல்லது அவற்றிற்கு நியாயம் கூறி தப்பிக்க விழைவதோ இதய சுத்தியுடனான சுமுகமான தீர்வுகளைக் காண தடையாக அமையும்.
முஸ்லிம்களோ தமிழர்களோ நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் இடங்கள், அவர்கள் தமக்கென அமைத்துக்கொண்ட வணக்கஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், நிலபுலன்கள், குடியிருப்புக்கள் என்பன அவர்களுக்கே உரியவை. கசப்புணர்வு தொடர்ந்தால் அவற்றிலிருந்து அவர்கள் விலக நேரிடும்.
இது சாத்தியமில்லை. தமக்கென பழக்கப்பட்ட சூழலிலேயே அவர்கள் வாழுவது இலகுவாகவும் உசிதமாகவும் இருக்கும்.
‘தேங்காய்த் துருவலும் பிட்டும்போல்’ ஒருவருக்குள் ஒருவராக பக்கத்துப் பக்கத்து வீடுகளிலும், கிராமங்களிலும் தொழில் துறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிர்ப்பந்தமாக ஒட்டியுறவாடும் முஸ்லிம் - தமிழ் இனங்கள் இனியும் கசப்புணர்வுகளுடன் வாழ்வது மேலும் பேராபத்துக்களையே தரும். எவரும் எவரையும் துரத்துவது பல இன்னல்களுக்கே வழிவகுக்கும். எனவே, சுமுகமாக வாழ்வதற்கும் சக வாழ்வைக் கடைப்பிடிப்பதற்குமான வழிவகைகளைத் தேடுவது உடனடித் தேவையாகும்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பbல் (நZமி)B. A. (Hons) M. A
நன்றி : இஸ்லாமிய சிந்தனை (2008 ஜனவரி - மார்ச்) இதழ்ஜாமிஆ நZமிய்யா வெளியீட்டுப் பணியகம்

கப்டன் அலி நிவாரணப்பொருட்கள் முதல்தடவையாக இன்று விநியோகம்


சர்ச்சைக்குரிய 'கப்டன் அலி' கப்பலில் உள்ள பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த கப்டன் அலி கப்பல் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்தவண்ணமிருந்தன.இந்நிலையில், மெனிக்பாம் நிவாரண முகாமின் நான்காம் வலயத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்களை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இலங்கைக் கிளையின் நிர்வாகத்தினர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்," 'கப்டன் அலி' கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வழங்கியது. அதன்படி அந்த கப்பலை வவுனியாவுக்கு அனுப்பி மக்களுக்கு நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்" எனத் தெரிவித்தார்.

virakesari

மர்மங்களைத் துலக்கும் கறுப்புப் பெட்டி

விமான விபத்து என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது கறுப்புப் பெட்டி. ஆனால் இந்த கறுப்புப் பெட்டியை சில விமானிகள் விரும்புவதில்லையாம்.

விமான விபத்து என்று கேள்விப்பட்டவுடன் நினைவில் வரும் ஒரு சாதனத்தின் பெயரே ‘கறுப்புப் பெட்டி’. இதன் பெயரைக் கேள்விப்பட்டுள்ள போதிலும், அதனை உச்சரித்து பழக்கப்பட்டுள்ள போதிலும் அதன் இயக்கம் பற்றி, சக்தி பற்றி, அவசியம் பற்றி அறிந்துகொண்டிருக்க மாட்டோம்.
இந்த சாதனம் கறுப்புப் பெட்டி என அழைக்கப்படுவதே வேடிக்கையானது. ஏனெனில் இதன் நிறம் கறுப்பு அல்ல. எங்கு இருந்தாலும் பளிச்சென தென்படும் செம்மஞ்சள் நிறம் கொண்டதே இந்த கறுப்புப் பெட்டி.
இது மிகவும் அற்புத அபார சக்திகள் வாய்ந்த ஒரு சாதனம். விமானத்தின் சேதம் குறைந்த பின்பகுதியிலேயே இது பொருத்தப்பட்டிருக்கும். எவ்வளவு பாரிய தாக்கமொன்றுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தீயினுள் சிக்குண்டாலும் எரிந்துபோகாத தன்மை கொண்டது. கடல் நீரிலே ஒரு மாத காலம் ஊறினாலும் பாதிக்கப்படாதது. சுமார் ஆறு கிலோ மீட்டர் ஆழம் உள்ள கடலினடியில் இது மூழ்கி இருந்தாலும் நூறு நாட்கள் வரை பழுதடையாமல், துருப்பிடிக்காமல் இருக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது.
ஆகாயத்திலிருந்து எவ்வளவு பலமான வேகத்தில் இது பூமியில் வீழ்ந்தாலும் இது உடையமாட்டாது. இது எங்கு வீழ்ந்தாலும் வினாடிக்கு வினாடி தான் இருக்கும் இடத்தை எலக்ட்ரோனிக் தகவல் மூலம் காட்டிக்கொண்டே இருக்கும். சுமார் ஒரு மாதகாலம் வரை இவ்வாறு அது தகவல் வெளியிட்ட வண்ணமே இருக்கும். விமானத்தின் எடை வேகம் என்பவற்றுக்கேற்ப மோதலின்போது சிதைவடையா வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சக்திவாய்ந்த கறுப்புப் பெட்டி உருவான இதிகாசமே அலாதியானது. இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் 1903ம் ஆண்டிலே றைட் சகோதரர்களின் முயற்சியால் உருவான முதல் விமானம் பறக்கத் தொடங்கிய ஆண்டாகப் பதிவாகியது. இந்தக் கறுப்புப் பெட்டியின் கால் கோளும் அன்றிலிருந்தே ஆரம்பமாயிற்று. அதனையும் றைட் சகோதரர்களே சாதித்தனர். விமானம் தொடர்பான தகவல்களைக் கண்டறிவதற்காக ஒரு மணிக்கூடு. ஒரு காற்றின் திசையறி கருவி, ஒரு வேகமானி, விமானத்தின் இயந்திர சுழற்சியைப் பதியும் கருவி என்பவற்றைத் தனித்தனியாக பாவித்து தகவல் சேர்க்கும் முறையொன்றினை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து 1927ம் ஆண்டு சார்லிஸ் வின்ட்பேக் என்பவர் இக் கருவிகளனைத்தையும் ஒன்று சேர்த்து இதனை மேலும் ஒரு படி முன்னேற்றி செயல்பட வைத்தார். 1954ம் ஆண்டிலே அவுஸ்திரேலிய விமான ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் வரான் என்பவர் விமானிகளின் பேச்சு ஒலிகளைப் பதியும் முறையை இதில் இணைத்தார். ஆனால் ஆராய்ச்சிக் கழகம் அதற்கு எதிராக கலகம் செய்தது. வரான் இதனை விட்டுக்கொடுக்க வில்லை. இந்தப் பதிவு இயந்திரம் விமானத்தில் இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி புரிய வைத்தார். பல நாடுகள் அவருக்கு பக்க பலமாகின. முயற்சி வெற்றி யளித்தது. இந்த சாதனத்தில் மற்றுமொரு முன்னேற்றம் 1955 ல் நிகழ்ந்தது. வில்லியம் பெனி, ஜிம் கீல்ஸ் ஆகிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக உருவான தொழில் நுட்ப சேர்வைகளோடு இணைந்த தற்போதைய கறுப்புப் பெட்டி தயாராக ஆரம்பித்தது. இதற்கென ஒரு விதிமுறை வரையறை என்பன கூட சட்டமாக்கப்பட்டன.



இதன் பிரகாரம் 1000 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் 30 நிமிடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் தன்மை, 20,000 அடி ஆழத்திலும் அமுக்க எதிர்ப்புச் சக்தி நிலவல், 3400 தடவைக்கு மேலான புவியீர்ப்பு எதிர்ப்புத் திறன், 30 நாட்களுக்கும் மேல் கடற்பரப்பில் மிதக்கும் விதத்திலான அமைப்பு என்பன போன்ற சக்தி கொண்ட கறுப்புப் பெட்டிகளே சட்ட ரீதியாக செல்லுபடியானவை என ஏற்று அங்கீகரிக்கப்படுகின்றன. இத்தகைய அங்கீகாரத்துக்குள்ளான கறுப்புப் பெட்டிகளே விமானங்களில் பொருத்தப்படுகின்றன.
1960ம் ஆண்டு முதல் ஆகாய விமானங்களில் இரு முக்கிய சாதனங்கள் இணைக்கப்படவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அவற்றுள் ஒன்று ‘ப்ளைட் டாட்டா ரெகோடர் மற்றையது கொக்பிட் வொய்ஸ் ரெகோடர் என்பதாகும். இவை குறியீட்டுப் பெயர்களால் முறையே பி.ளி.ஞி என்றும் வி.V. ஞி என்றும் அழைக்கப் படுகின்றன.
இந்த இரண்டு சாதனங்களும் இரு வகையான பணி களை மேற்கொள் கின்றன. பி.ளி.ஞி விமான த்தின் தொழில் நுட்ப தகவல்களை சேகரிக்கும் சாதனம். இது விமா னத்தின் வேகம் பறக்கும் உயரம், திசை, நாடு போன்ற பல்வேறு தகவல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கும். அதே சம காலத்தில் வி.V. ஞி என்றழைக்கப்படும் சாதனம் விமான மோட்டியின் அறையில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் ஓசைகளைப் பதிவு செய்த வண்ணம் இருக்கும். இந்த இரண்டு பதிவுக் கருவிகளும் விமானத்தில் வேவு பார்க்கும் ஒற்றர்களைப் போல் செயல்படும் அதி முக்கியமான இரு சாதனங்களாகும். இவற்றைத் தன்னுள் அடக்கி பாதுகாக்கும் சாதனமே கறுப்புப் பெட்டி.
ஒரு விமானம் எவ்வளவு கொடூரமான ஆபத்தை எதிர்கொண்டாலும் எந்த அதிர்ச்சியையும் தாங்க வல்லதான சக்தி வாய்ந்த இப் பதிவுக் கருவிகள் மூலம் விபத்துக்கான காரணத்தை தெளிவாக அறிய முடியும். உடைந்துபோகாத வலிமை மிக்க உருக்கினாலான சுமார் 6000 அடி நீளமான நாடாவொன்றிலேயே இது பதிவாகிறது.இதில் 25 மணிநேர நிகழ்வுகளைப் பதிவு செய்யக்கூடிய வசதி உண்டு. இருந்தபோதிலும் பதிவுக் கருவிகளில் காணப்படும் ஒரு விசேட தன்மை இறுதி அரை மணிநேர பதிவுகளையே நிலைக்கச் செய்கிறது.
விமானத்தின் இயக்கம் ஆரம்பித்த வினாடி முதல் அதன் இயக்கம் நிறுத்தப்படும் வினாடி வரை பதிவுகள் இடம்பெற்றாலும் அவை சுயமாகவே அழிந்து, அழிந்து இறுதி 30 நிமிட நேர பதிவுகளே நாடாவில் எஞ்சும். இது அந்த விமானத்தின் கடைசி 30 நிமிட செயற்பாடுகளை, கோளாறுகளை, காரணங்களை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும். விபத்து ஒன்று ஏற்பட்டு இயந்திரத்தின் இயக்கம் தடைப்படும் பட்சத்தில் இறுதி 30 நிமிட நேரப் பதிவுகளால் விபத்தின் காரணம் தெளிவாகும்.
அதி நவீன அற்புத கண்டு பிடிப்புகளாக விளங்கும் பி.ளி. ஞி மற்றும் வி.V. ஞி எனும் சாதனங்களை உள்ளடக்கிய துருப்பிடிக்காத இரும்பினாலான மிக வலிமைமிக்க பாதுகாப்பு கவசம் தான் கறுப்புப் பெட்டி எனப்படுகிறது. விமானத்தின் தரவுகளை, தகவல்களை, அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு தனக்கே உரிய இலட்சனங்கள் பலவற்றைக் கொண்டுள்ள கறுப்புப் பெட்டி மனித சக்தியின் மேன்மைக்கு, விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு.
ஆனால் கறுப்புப் பெட்டிக்கு இன்றும் எதிர்ப்பு இருக்கிறது என்றால் ஆச்சரியம் அல்லவா? அதுவும் விமானிகளிட மிருந்தே -ஜி கிளம்புகிறது என்றால் அதுவும் வியப் பல்லவா? ஆம். தமக்கு வேண்டியவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களும், விமானப் பணிப்பெண்களுடனான கொஞ்சல்களும் கூட இதில் பதிவாகிறதே என்ற ஒரு நினைப்பு தான்.
எனினும் கருப்புப் பெட்டியைக் கழற்றிவிட யாரும் தயாரில்லை. ஏனெனில் விபத்தை அனுமானிக்க இது ஒன்று தான் கை கொடுக்கிறது.
thinakaran