Thursday, October 29, 2009

போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்.- முன்னாள் US அட்டர்னி ஜெனரல்


ராம்சே கிளார்க்? அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க்.சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்ஸ.?சர்வதேச சமூகம்? என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப்படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் ?புதிய உலக நியதி?யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்துஸ?இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும்.தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. ?வியாபாரமயமாக்கல்? மற்றும் ?பொருள் முதல் வாதம்? முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் ?கலாச்சாரம்? ஆகியவைதான்.ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவேஸ..?உலகமயமாக்கலின்? தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.இராக் மீதான அமெரிக்காவின் ?அத்து மீறிய ஆக்கிரமிப்பை? நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள?கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டதுஸஎப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ?பயங்கரவாதம்? அமெரிக்காவின் சுய உருவாக்கமா?பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்,பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தைமுற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்?அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்;இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில்மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ?மார்க் குவைன்? என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ?தேவையில்லாத தேவைகள்? பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக்கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ?அணு ஆயுதம்? உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்? எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கையும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

Sunday, October 25, 2009

இஸ்லாத்தை ஏற்ற கிரீஸ் நாட்டு யுவதி

நான் கிரீஸிலுள்ள ஏதன்ஸ் நக ரில் பிறந்தேன். எனது பெற்றோர் கிரேக்கப் பூர்வீகத்தைக் கொண்டவர் கள். எனது தந்தையின் குடும்பம் துருக் கியில் வசித்தது. எனது தந்தை பிறந்த தும் வளர்ந்ததும் அங்கே தான். அவரின் குடும்பத்தினர் செல்வந்தர் களாகவும் கல்வி கற்ற வர்களாகவும் பாரம்பரிய கிறிஸ்தவ மதத்தைப் பின் பற்றுபவர்களாகவும் வாழ்ந்தார்கள்.
துருக்கிய அரசாங்கம் திடீரென்று அங்கு வாழ்ந்த கிரேக்கப் பூர்வீகக் குடி மக்களை வெளியேற்றியதுடன் அவர் களது சொத்துக்கள் வியாபாரம் போன் றவற்றையும் அபகரித்துக் கொண்டது. எனவே, எனது தந்தையின் குடும்பத் தினர் வெறுங்கையுடன் கிறீஸுக்குத் திரும்பினார்கள். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வெறுத்தனர்.
எனது தாயின் குடும்பம் கிரீஸுக் கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையில் அமைந் திருந்த தீவொன் றில் வாழ்ந்து வந்தது. இத்தீவையும் துருக்கியர்கள் ஆக்கிரமித்ததோடு அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகளையும் எரித்தனர். இதனால் அம்மக்கள் கிரீஸுக்குத் திரும்பினார்கள். அவர் களும் முஸ்லிம்களையும் இஸ்லாத் தையும் வெறுத்தார்கள். கிரீஸை சுமார் 400 வருடங்கள் துருக்கியர்கள் தமது பிடியில் வைத்திருந்தனர். அவர்க ளுக்கு எதிரான துருக்கியர்களின் நடவடிக்கைகளினால் இஸ்லாம் பற் றிய தவறான விளக்கங்கள் எமக்கு கற் பிக்கப்பட்டன.
உண்மையில் இது கிரீஸ் பாரம் பரிய தேவாலயத்தின் விரிந்த திட்ட மாக இருந்தது. அதன்மூலம் முஸ்லிம் களை வெறுக்கக் கூடியவர்களாகவும், தமது மார்க்கத்திலிருந்து மக்கள் இஸ் லாத்திற்கு மாறுவதை தடுக்கவும் முயற்சித் தார்கள். எனவே, பல நூற் றாண்டுகளாக எமது வரலாறு பாடத் திலும் சமய பாடத்திலும் இஸ்லாத்தை வெறுக்கவும் கேலி செய்யவுமே கற்பிக்கப் பட்டோம்.
எங்களுடைய புத்தகங்களில் இஸ் லாம் என்பது உண்மையில் ஒரு மார்க் கம் அல்ல. முஹம்மத் (ஸல்) அவர் கள் ஒரு தூதர் அல்ல. அவர் விவேக மான ஒரு தலைவராகவும் கிறிஸ்தவ யூத மதங்களிலிருந்து சட்டங்களை ஒன்றுசேர்த்த அரசியல்வாதியாகவும் அவரது சில சொந்த சிந்தனைகளாலும் இந்த உலகத்தை அடிமைப்படுத்தினார் என்றே எழுதப்பட்டிருந்தது.
பாடசாலையிலும் நாங்கள் அவரை வைத்தும் அவரது மனைவி மார்கள் நண்பர்களை வைத்தும் கேலி செய்பவர்களாக இருந்தோம். இன்று ஊடகங் களில் வெளியிடப்படுகின்ற கேலிச் சித்திரங்கள் கார்டூன்கள் என்பவையே எமது பாட அத்தியாயங் களாகவும் பரீட்சைகளாகவும் இருந் தன.
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் இஸ்லாத்தை வெறுப்பதிலிருந்தும் எனது உள்ளத்தைப் பாதுகாத்தான். முஸ்லிம்கள் அல்லாஹ் தூதர்களை அனுப்பு வதன் மூலம் அவர்களுக்கு நேர்வழிக் காட்டினான் என்பதை நம்பினார்கள். ஆதம், நூஹ், இப்றா ஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மூஸா அலைஹி முஸ்ஸலாம் போன்ற நபி மார்கள் அனுப்பப்பட்டார்கள். அவர் களில் இறுதியாக முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி னான்.
எனது பெற்றோர் இருவரும் மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்காமை எனக்கு உதவியாக அமைந்தது. அவர்கள் மிக அரிதாகவே மத வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதேபோன்று திருமணங்கள் அல்லது மரணம் போன்றவற் றிற்கு மட்டுமே தேவாலயத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள்.
எனது தந்தை கிறிஸ்தவ பாதிரிமார் கள் செய்த குற்றங்களை அறிந்தார். அவர்கள் தேவாலயத்தின் பணத்தை திருடினார்கள் அதன்மூலம் அவர்க ளுக்கென பெரிய மாளிகைகளையும் நவீன கார்களையும் வாங்கினார்கள். அத்தோடு ஓரின பாலுணர்வையும் பரப்பினார்கள். இவர்கள் எவ்வாறு ஒரு மார்க்கத்தின் சட்டங்களை மதிக் கின்ற பிரதிநிதிகளாக, எங்களுக்கு வழிகாட் டுபவர்களாக இருக்க முடியும் என்று எனது தந்தை சிந்தித்தார். அதன் விளை வாக அவர் மனமுடைந்து ஒரு நாஸ்திகராக மாறினார். கிறிஸ்தவத் தில் பாதிரியாக வருவதென்பது மிகச் சிறந்த இலாபகரமான தொழிலாகும். இதனால் அதிகமான இள வயதினர் இந்த மார்க்கத்தைவிட்டும் வெளி யேறி வேறேதேனும் மார்க்கத்தைத் தேடுகின்றார்கள்.
நான் இளவயதை சேர்ந்தவள் என்றவகையில் அதிகமாக வாசிப் பதற்கு விரும்பினேன். ஆனால், கிறிஸ் தவ சமயப் புத்தகங்களில் எனக்கு நம்பிக் கையும் திருப்தியும் ஏற்பட வில்லை. நான் இறைவன் இருக்கின் றான் என்பதை ஏற்றுக் கொண்டேன். அவனுக்கு பயந்தேன். அவன் மீது அன்பு கொண்டேன். என்றாலும் எனக்கு எல்லாம் குழப்பமாகவே இருந்தது. நான் எல்லாப்பக்கமும் தேடலானேன். ஆனால், நான் இஸ் லாத்தைப் பற்றி தேடவில்லை. எனது ஆரம்பக் காலத்திலிருந்தே அதற்கெ திராக எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தமை அதற்கு காரணமாக இருக்கலாம்.
என்றாலும் அல்ஹம்துலில்லாஹ், அருளாளனான அவன் எனது பிரச்சி னையை தீர்ப்பதற்கு வழிகாட்டி னான். இருளிலிருந்து ஒளியை நோக் கிச் செல்வதற்கும் நரகத்திலிருந்து சுவனத்திற்குச் செல்வதற்கும் அவன் வழிகாட்டினான்.
அவன் எனக்கொரு பிறப்பிலே முஸ்லிமான ஒரு கணவனை தந்தான். எங்கள் இதயங்களிலே அன்பின் விதை களை விதைத்தான். நாங்கள் எமது மத வேறுபாடுகளை கவனத்திற்கொள்ளா மலே திருமணம் செய்தோம். எனது கணவர் எனது எல்லாக் கேள்விகளுக் கும் அக்கறையுடன் பதிலளித்தார். அவர் எவ்வித தாழ்வுமனப்பான் மையும் கொள்ளவில்லை. அத்துடன் என்மீது எவ்வித அழுத்தத்தையும் பிர யோகிக்காததுடன் என்னை மதம் மாறுமாறும் கேட்கவில்லை.
நாங்கள் திருமணம் முடித்து மூன்று வருடங்களுக்குப் பின்னால் இஸ்லாத் தைப் பற்றி அதிகமாக அறிவ தற்கும் அல்குர்ஆனை வாசிப்பதற்கும் சந்தர்ப் பம் கிடைத்தது. அத்தோடு ஏனைய மத புத்தகங்களையும் வாசிப் பதற்கு சந் தர்ப்பம் கிடைத்தது.
முஸ்லிம்கள் அல்லாஹ் ஒரே இறைவன் என்பதையும் அவன் வணக்கத் திற்கு தகுதியானவன் என்பதையும் அவனுக்கு பிள்ளைகளோ அவனுக்கு இணையானவர்களோ இல்லை என்றும் நம்புகின்றனர். வணங்குவ தற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் நம்பு கின்ற னர். அவனது தெய்வீகத் தன்மை களை அவர் கள் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. அல்லாஹ் அல்குர் ஆனில் அவனைப்பற்றி அவனே பின்வ ருமாறு கூறுகின்றான்: (112: 01-4)
நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதனை எனது குடும் பத்தி னரோ நண்பர்களோ அறியாது பல வருடங்கள் பாதுகாத்துக் கொண்டேன். நான் எனது கணவருடன் இஸ் லாத்தை செயற்படுத்துவதற்கு முயற்சித் தேன். ஆனால், அது மிகவும் கஸ் டமானதாகவும் சாத்தியமற்றதாகவும் இருந் தது. எனது பிறந்த நகரில் எவ் வித மஸ்ஜித்களோ அல்லது இஸ்லா மிய கற்கைகளுக்கான வாய்ப்போ அல் லது தொழுகின்ற மனிதர்களோ அல் லது நோன்பு நோற்கின்ற மனிதர் களோ அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களோ இல்லை.
மாற்றமாக சில வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இருந்தனர். அவர் கள் மேற்கத்தேய வாழ்க்கை முறை யிலே வாழ்ந்தனர். அவர்களும் மோசடிகளில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அவர்களையோ அல்லது அவர்களது மார்க்கத் தையோ பின்பற் றுபவர்கள் எவரும் இருக்கவில்லை.
நானும் எனது கணவரும் கலண்ட ரைப் பார்த்துதொழுதோம். நோன்பு நோற் றோம். எங்களுடைய செவிக ளால் அதான் ஓசையைக் கேட்க வில்லை. இஸ்லாமிய சமூகம் எங்க ளுக்கு உதவவில்லை. அதனால், நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் எமது பழைய வாழ்க்கை நோக்கித் திரும்பிக் கொண் டிருந்தோம்.
எங்களுக்கு மகள் கிடைத்தபோது நாம் ஒரு தீர்மானத்தை எடுத்தோம். எங்களுடைய பிரச்சினைகளையும் எமது மகளின் பிரச்சினையையும் கவ னத்திற் கொண்டு நாங்கள் ஓர் இஸ்லா மிய நாட்டிற்கு இடம்பெயர்வதற்கு முடிவெடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ். அவன் எங்களுக்கு ஓர் இஸ் லாமிய நாட்டிற்கு இடம்பெயர்வதற் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந் தான். அங்குதான் நாம் இனிமையான அதானின் வாசகங்களை செவிமடுத் தோம். எமது அறிவை அதிகரித்துக் கொண்டோம். அல்லாஹ்வையும் எமது அன்பிற்குரிய தூதரையும் நேசிக் கக் கற்றுக் கொண்டோம்.
islamonline.net
தமிழில்: பௌஹானா நுஸைர்

Sunday, October 11, 2009

ஹமீட் கர்ஸாய் தனிமைப்படுகிறார்


ஓகஸ்ட் 20ம் திகதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி நியாயமான முறையில் பெறப்பட்டதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இத்தேர்தல் அமெரிக்கா வகுத்த சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடைபெற்றது. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்கா அனுமதிக்காததால் வேட்பாளர்கள் தனிநபர்களாகவே போட்டியிட்டனர். ஹமீட் கர்ஸாயும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாவும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் நின்றனர்.
கர்ஸாய் இத்தேர்தலில் பலமுறைகேடுகளை நடாத்தி வெற்றிபெற்றுள்ளதாக அப்துல்லா ஊடகங்களுக்கு கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிச்சார்ட் ஹோல்புறூக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். கர்ஸாய் ஆட்கள் செய்த பெருமளவிலான வாக்குத் திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாதென்று ஹோல்புறூக் கூறியிருப்பது முறைகேடுகள் இடம்பெற்றன என்பதை உறுதிப்படுதுகின்றது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதென்ற தகவல் இப்போது வெளிவருகின்றது. வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் இருபது வீதத்துக்கு மேற்பட்டோர் உரிய வயதெல்லையை அடையவில்லை என்று தேர்தலுக்கு பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பன்னிரெண்டு வயதிற்குட்பட்டவர்க ளும் வாக்காளர்க ளாக பதிவு செய் யப்பட்டிருக்கின்றார் களாம். ஆப்கானிஸ்தானின் மூன்றிலொரு பகுதி இப்போதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர். தேர்தலில் வாக்களிப்பவர்களின் விரல்கள் வெட்டப்படும் என்று அச்சுறுத்தியுமிருந்தனர். இந்த நிலையில் பெருந்தொகையானோர் வாக்களித்திருப்பார்கள் எனக் கருத முடியாது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தேர்தல் ஆணையம் நாற்பது வீதத்துக்கும் ஐம்பது வீதத்துக்கும் இடைப்பட்டோர் வாக்களித்திருப்பதாக கூறுகின்ற போதிலும் சுதந்திரமான கணிப்பீடுகள் இருபது வீதமென தெரிவிக்கின்றன.
கர்ஸாய் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அப்பதவிக்கான முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பவராக இருப்பார் எனக் கருதுவதற்கில்லை. தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாகவும் வேறு காரணங்களுக்காகவும் அமெரிக்கா கர்ஸாயை ஓரங்கட்டுமென எதிர்பார்க்கலாம். கர்ஸாய் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டவர். அவரை அமெரிக்காவே ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தியது. இப்போது அவரைக் கைவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தேர்தல் முறைகேடுகளையிட்டு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருப்பது கர்ஸாயை கைவிடுவதற்கு தயாராகுவதையே புலப்படுத்துகின்றது. தேர்தல் காலத்தில் முன்னாள் யுத்தக் குழுக்களின் தலைவர்களின் ஆதரவை கர்ஸாய் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதாக இல்லை. அஹமட் ரiத் டொங்டம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் துருக்கிக்குச் சென்று வாழ்ந்து வந்தவர். இவரை கர்ஸாய் தேர்தலில் தனக்கு ஆதரவு தேடுவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு அழைத்தமை அமெரிக்காவுக்கு உடன்பாடானதாக இல்லை.
டொங்டம் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு வந்து கர்ஸாய்க்காக தேர்தல் பரப்புரை செய்தார். கர்ஸாயின் உப ஜனாதிபதியாக Running mate முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மட் காஸிம் பாஹிம் கர்ஸாயினால் நிறுத்தப்பட்டார்.
போதைவஸ்து கடத்தல் தொடர்பாக அமெரிக்கா பாஹிமுக்கு எதிராக விசாரணை நடத்துவது தெரிந்திருந்தும் கர்ஸாய் அவரை உப ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி யதையிட்டு அமெரிக்கா சீற்றமடைந்திருக்கின்றது. சுருக்கமாகக் கூறுவதானால் கர்ஸாயை தூரத்தில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துவிட்டது எனலாம். அதேநேரம் ஆப்கானிஸ்தானில் தனது பிடியை நெகிழ விடவும் அமெரிக்கா தயாராக இல்லை.
பிரதான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்துடன் கூடிய பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரை நியமிப்பது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. கர்ஸாயின் அதிகாரத்தை நறுக்குவதே இந்த நியமனத்தின் நோக்கம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

thinakaran

Tuesday, October 06, 2009

இஸ்ரேலின் போர்க்குற்ற அறிக்கை ஐ. நாவில் சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைப்பு

காஸா மீது இஸ்ரேல் புரிந்த போர் குற்றங்கள் பற்றிய அறிக் கையை ஐ. நாவில் சமர்ப்பிப்பதற்கு தாமதம் காட்டப்படுவது குறித்து காஸாவை ஆளும் ஹமாஸ் அமை ப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடும் ஆட்சேபனை வெளியிட்டுள் ளார் இஸ்ரேலின் போர்க்குற்றங் களை விளக்கும் கோல்ஸ்டோன் அறிக்கை ஐ.நாவின் சமர்ப்பிக் கப்படாமல் தாமதப்படுத்தப்பட்ட மைக்கு மேற்குலகமும் அதன் கூட் டாளியான பலஸ்தீனமும் காரண மென இஸ்மாயில் ஹனியா சொன் னார்.
கோல்ஸ்டோன் என்ற போர்க் குற்ற அறிக்கையை ஐ.நா. வின் மனித உரிமைகள் அமைப்பு தயாரித் தது. இதில் இஸ்ரேல் பிரதான குற் றவாளியாகக் கூறப்பட்டுள்ளதுடன் ஹமாசும் போர்க்குற்றங்களில் ஈடுப ட்டதாக இந்த அறிக்கை கூறுகின் றது.
இதை அரபு நாடுகளும் ஒப்ப மிட்டு அங்கிகரித்தன. ஆனால் ஐ.நா வில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட ஏற்பாடானபோது திடீரென இது ஒத்திவைக்கப்பட்டது மேற்குலகின் சதி முயற்சியே இதற்குத் காரண மென ஹமாஸின் தலைவர் இஸ் மாயில் ஹனியா குற்றம் சாட்டியு ள்ளதுடன் பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ¤ம் இதற்குப் பின்னாலுள்ள தாகக் கூறினார்.
பலஸ் தீனத்திலுள்ள 16 மனித உரிமைகள் அமைப்புகளும் இந்த அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக் கப்படாமல் தாமதமானதைக் கண்டித்தன.
காஸா மக்களுக்கு இஸ்ரேலால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்கும் நடவடிக்கையை மேற் குலகம் தடுக்க முனைகின்றது. அப் பாவி மக்களின் வாழ்வியல் உரிமை களில் அவர்கள் விளையாடுகின்றனர். என மனித உரிமை அமைப்பின் அதி காரிகள் கூறினர்.
பலஸ்தீன பொரு ளாதார அமைச்சர் மேற்குலகின் இச்சதி நடவடிக்கையைக் கண்டித்து தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

காஸா ஒக்டோபர் ஏ. எப். பி

Saturday, October 03, 2009

நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.Muntazer al-Zaidi embraces his sister upon arrival at the Al-Baghdadya television station following his release from prison Photo: REUTERS

முன்தாஜர் அல் ஜெய்திநான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன..எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன் நன்றி . .போராட்டம் வலைப்பதிவு