Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இஸ்லாத்தின் மீதான அவதூறு - மன்னிப்புக் கேட்டது பிபிஸி!


இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim council of Britain) தலைவரான டாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.


பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போது பிரிட்டிஷ் படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றிய ஒரு விவாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர் குழு தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன் ஆதரித்துப் பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழு பழி சுமத்தியது.

இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்று முஹம்மத் அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார். தான் கூறாத ஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்ட பிபிஸிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல் ஈராக்கில் பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்து தான் பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழு திரித்து அவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப் பேசியது போன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும் பிபிஸி பழி சுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸி இறுதியில் தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டு முஹம்மத் அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்செய்தி பிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.

சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time) நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸி பதிவு செய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்து ஈராக் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் பதில் அளித்திருந்தார்.

பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட வேண்டுமா? என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்ல முற்படுகையில் குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்து இத்தகையப் போராட்டங்கள் பல நடந்தும் அதனைக் கண்டனம் செய்யத் தவறியதால் முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.

அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீது நிகழும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத் பாரி அவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவே இஸ்லாம் கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில் நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர் குழு அந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர் குழுவின் இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாக பிரிட்டனின் முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது வெளிப்பட்டுள்ளது.

பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டை எதிர்த்து முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடைய இஸ்லாமிய விரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தியதோடு முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது. இந்தத் தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாக வழங்கி விடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள் தெரிவித்துள்ளார்
- அபூ ஸாலிஹா.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின. இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும். இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.
ஆபீஸ் தொகுப்பு 2010 இரு வகைகளில் தரப்பட இருக்கிறது. 32 பிட் அமைப்பிலும் 64 பிட் அமைப்பிலும் இயங்கும் வகையில் இரண்டு வகை தரப்படும். ஆபீஸ் தொகுப்பு ஒன்று இவ்வாறு இரண்டு வகைகளுக்கும் தரப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் வேர்ட் தொகுப்பின் புதுமையாக இமேஜ் எபக்ட்ஸ் கூட்டாகத் தரப்படுகிறது. வேர்ட் மற்றும் பிற ஆபீஸ் புரோகிராம்களில் பேஸ்ட் பிரிவியூ என்ற ஒட்டுமுன் காட்சி தரப்படுகிறது. இதன் மூலம் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதனை அறிந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப பல பேஸ்ட் முறைகளைச் சோதனை செய்து பார்த்து செயல்படலாம்.

எக்ஸெல் தொகுப்பில் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்றொரு வசதி தரப்படுகிறது. ஸ்ப்ரெட் ஷீட் ஒன்றில் காணப்படும் செல் ஒன்றில் அமையும் வகையில் உள்ள சிறிய கிராப் ஆக இது இருக்கும். பவர்பாய்ண்ட் தொகுப்பில் வீடியோ எடிட்டிங் வசதிகள் தரப்படுகின்றன. பிரசன்டேஷன் ஒன்றின் வீடியோ காட்சி எப்படி இருக்கும் என்பதனை இந்த தொகுப்பின் மூலமே அறிந்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் அனொடேஷன்ஸ் இணைந்து இருக்கும். அவுட்லுக் இமெயில் மற்றும் காலண்டர் வசதிகளில் ஜிமெயிலில் உள்ளது போல கான்வெர்சேஷன் வசதி கிடைக்கிறது. இதற்கும் மேலாக "Ignore thread" ஒன்று தரப்படுகிறது. இதன் மூலம் மெசேஜைப் பார்த்துவிட்டு அதனை அலட்சியப்படுத்தி வைக்கும் வசதி கிடைக்கிறது. இதில் “மெயில் டிப்ஸ்” வசதி உள்ளது. இது டாகுமெண்ட் ஒன்றை இமெயில் மூலம் அனுப்புகையிலும் பலருக்கு ஒரே மெசேஜை அனுப்புகையிலும் அது நாகரிகமாக இருக்க வேண்டியதற்கான டிப்ஸ்களை அளிக்கிறது.
ஆபீஸ் 2010 உடைய ஒவ்வொரு அப்ளிகேஷன் தொகுப்பிலும் பைல் கையாளும் விதங்களில் கூடுதல் வசதிகள் தரப்படுகின்றன. பைல் சேவிங், பைல் பிரிண்டிங் போன்ற பணிகளுக்கு ஒரு பேக் ஸ்டேஜ் வியூ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் வேலை எப்படி அமையும் என முன் கூட்டியே கண்டு கொள்ளலாம். ஒரே டாகுமெண்ட்டை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எடிட் செய்திடலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தயாரிக்கப்படும் பல பகுதிகள் அடங்கிய ஒரு டாகுமெண்ட்டை ஒரே நேரத்தில் அதன் ஆசிரியர்கள் அனைவரும் கையாளக் கூடிய வசதி கிடைக்கிறது.

முன்பு போலின்றி இந்த ஆபீஸ் தொகுப்பு மூன்று வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் ஹோம் மற்றும் மாணவர்க்கான பதிப்பு ஒன் நோட், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகளுடன் கிடைக்கும். ஆபீஸ் ஹோம் மற்றும் பிசினஸ் தொகுப்பில் மேலே குறிப்பிட்டவற்றுடன் அவுட்லுக் இணைந்திருக்கும். ஆபீஸ் புரபஷனல் தொகுப்பில் மேலே சொல்லப்பட்ட அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் அக்செஸ் டேட்டா பேஸ், மற்றும் பப்ளிஷர் பேஜ் லே அவுட் புரோகிராம்கள் கிடைக்கும்.

வர்த்தகர்களுக்கான தொகுப்பினைப் பார்க்கையில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஸ்டாண்டர்ட் தொகுப்பு பயனளிக்கும். அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குப் பெறும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான பதிப்பாக இது இருக்கும். இதில் எக்ஸெல், அவுட்லுக், பவர்பாய்ண்ட், வேர்ட், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் கிடைக்கும். இறுதியாக உள்ள இரண்டு அப்ளிகேஷன்களும் இந்த வகை பதிப்பில் புதிதாக இப்போது சேர்க்கப்படுகின்றன. ஆபீஸ் ஸ்டாண்டர் பதிப்பிற்கான லைசன்ஸ் பெற்றவர்கள் பிரவுசர் அடிப்படையிலான பதிப்பினைக் கையாளும் உரிமையினைப் பெறுவார்கள். ஆபீஸ் 2007ல் இருக்கும் ஆபீஸ் பட்டனுக்குப் பதிலாக மெனு பட்டன் தரப்படும். இதன் மூலம் முழு விண்டோ பைல் மெனுவினைப் பெறலாம். இதனை பேக் ஸ்டேஜ் வியூ என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதன் மூலம் பிரிண்டிங் மற்றும் பைல் ஷேரிங் பணிகளை எளிதாகக் கையாள முடியும். ஆபீஸ் 2010 குறித்த விஷயங்கள் வெளியானவுடன் பலர் விதம் விதமான சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அவற்றை மைக்ரோசாப்ட் தெளிவாகத் தீர்த்து வைத்துப் பல கூடுதல் தகவல்களைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் இன்டர்நெட் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் ஒரே செயல்பாட்டுடையனவாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. இன்டர்நெட் வழி பயன்பாட்டிற்குத் தரப்படும் தொகுப்பில் வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் மட்டுமே இருக்கும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் எல்லைகளும் சுருக்கமாகவே இருக்கும். வெப் அடிப்படையிலான ஆபீஸ் 2010 தொகுப்பினால் பின் என்ன பயன்? இது முற்றிலும் பிரவுசர் வழியாகச் சென்று இயக்கப்படும் தொகுப்பாகவும் குறைந்த அளவே வசதி கொண்டதாகவும் இருக்கும். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு டாகுமெண்ட்டை பலர் எடிட் செய்திடலாம்.

வெப் அடிப்படை ஆபீஸ் தொகுப்பில் உருவாகும் பைல்களை ஆன்லைனிலேயே சேவ் செய்து வைக்க முடியுமா? முடியும். ஆனால் அதற்கு இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் அக்கவுண்ட் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். வெப் ஆபீஸ் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்குமா? ஆம், முற்றிலும் இலவசமாகவே இது கிடைக்கும். இலவச விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் இதனைப் பெற முடியும். வெப் ஆபீஸ் தொகுப்பில் அனைத்தும் கிடைக்கிறது என்றால் நான் ஏன் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு 2010 ஐ இன்ஸ்டால் செய்திட வேண்டும்?

வெப் ஆபீஸ் தொகுப்பு குறிப்பிட்ட ஒரு எல்லை வரையிலான வசதிகளையே தரும். நான்கு அடிப்படை புரோகிராம்களே இதில் கிடைக்கும். கூடுதல் வசதிகளையும் நவீன் தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பினை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதிலும் ஆபீஸ் 2007ல் உள்ளது போன்ற ரிப்பன் மெனு இருக்குமா? ஆம். இதிலும் அதன் பயன்பாடு இருக்கும். ஆனால் இன்னும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு இருக்கும். ஆபீஸ் தொகுப்பு அனைத்தையும் இதன் மூலம் பெற்றுக் கையாள முடியும். பொதுவான வேலைகளை இப்போது ரிப்பன் மெனுவில் இணைக்கவும், தேவையற்றவற்றை நீக்கவும் முடியும்.

வேர்டில் என்ன புதுமை? பேஸ்ட் பிரிவியூ ஆப்ஷன், டெக்ஸ்ட்டுக்கு ஸ்டைல் அமைப்பதில் கூடுதல் வசதி, வேர்ட் புரோகிராமினை விட்டு வெளியேறாமல் ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கும் வசதி, இமேஜ் எடிட் செய்வதற்கான புதிய டூல்ஸ் எனப் பல புதுமைகள் உள்ளன. அவுட்லுக்கில் என்ன புதுமை? ஜிமெயிலில் உள்ளது போல சார்ந்த தொடர்பான இமெயில்களை ஒரு குழு உரையாடல் போல வைத்துப் பார்க்கும் வசதி தரப்படுகிறது. பொதுவான வேலைகளை மேற்கொள்ள ஷார்ட் கட் வசதி, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு இன்பாக்ஸிலிருந்தே செல்லும் வசதி, ஆன் டிமாண்ட் மொழி பெயர்ப்பு டூல்ஸ் ஆகியவை புதிய வசதிகளாகும். எக்ஸெல் என்ன தருகிறது? ஸ்பார்க்லைன் என்ற (மேலே விளக்கப்பட்டுள்ளது) சிறிய சார்ட் இணைக்கும் வசதி. டேபிள் அமைப்பு மற்றும் கையாள்வதில் கூடுதல் வசதி மற்றும் டேட்டாக்களைக் கையாள்வதில் கூடுதல் வசதிகள் ஆகியவை உள்ளன.
பவர் பாய்ண்ட்டில் என்ன புதுமை? ஆச்சரியப்படத்தக்க புதுமை இதில்தான் உள்ளது. பலவகையான பார்மட் வீடியோக்களை இதில் இணைக்கலாம்; இணைத்த பின் இத்தொகுப்பில் இருந்தே அவற்றை எடிட் செய்திடலாம். முதல் முறையாக உங்கள் ஸ்லைட்ஷாவினை ஒரு முழு விண்டோஸ் மீடியா பைலாக மாற்றிப் பெறலாம். உங்களுக்கு ஆபீஸ் 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.சென்று உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
Click here to get web link
from Lankasri web

போர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் தகவல்

இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்திய 'றோ' அமைப்பின் முகவர்கள் 50 பேர் இலங்கை அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர் பட்டியல் ஒன்றை இலங்கை அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

"இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரும் 'றோ' இலங்கையில் இருந்து 'றோ' செயற்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தார்கள். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கேட்கின்றோம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாதான் பயிற்சியளித்தது. அவர்கள் தமது தவறை உணர்ந்துகொண்ட பின்னர்தான் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இப்போதும் பிரிவினைவாத சக்திகளால் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது" எனவும் குறிப்பிட்ட ஜே.வி.பி. தலைவர், 1980-களில் இலங்கையில் தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பாக இந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்ட அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

"எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை மீட்பதற்காக எமது நாட்டைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தில் இப்போது யார் ஆக்கிரமித்துக் கொள்கின்றார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்காகவா எமது நாட்டவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.

இப்போது இங்கு 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். இலங்கையின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்."

இவ்வாறு சோமவன்ச தனது பேட்டியில் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
news: tamilwin.org

கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் 'வணங்கா மண்' நிவாரணப் பொருட்கள்


இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை, பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது.

தற்போது அப்பொருட்களை மீட்டு உரிய மக்களைச் சென்றடையச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து அவை கொழும்பு துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய தமிழர்கள் இலங்கை மக்களுக்காக உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரணப் பொருட்களை 'வணங்காமண்' கப்பலில் அனுப்பி வைத்தனர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் 'வணங்கா மண்' கப்பல் தத்தளித்தது.

முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, அக்கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் 27 கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்தின் மூலம் 'கொலராடோ' என்ற சரக்கு கப்பலுக்கு மாற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தக் கப்பல் கடந்த 9ஆம் திகதி கொழும்பு துறைமுகம் வந்தடைந்த பின்னரும், நிவாரணப் பொருட்களை இதுவரை செஞ்சிலுவை சங்கத்தினர் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த 19 நாட்களாகக் கேட்பாரற்று கிடக்கின்றன.

இது குறித்து தமிழகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் லண்டன் 'மெர்ஸி மிஷனி'ன் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,

"நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத்தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லண்டனில் உள்ள 'மெர்ஸி மிஷன்' (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம்.

எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகின்றன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Virakesari News

DARWINISM’S UNSCIENTIFIC FORMULA

Plentiful Muddy Water + A Long Time + Many Coincidences = Civilization

When the subject of evolution comes up, many people imagine that this is a scientific problem—and that for anyone less knowledgeable than scientists, Darwinism is impossible to understand. They assume it’s pointless to argue the issue, one way or the other. Indeed, Darwinists employ Latin words and scientific terms generally unfamiliar to the public in order to encourage this mistaken idea. They engage in complicated descriptions and frequently resort to demagoguery and hollow slogans in order to give the impression they are discussing a highly scientific matter.




In fact, however, Darwinism’s basic claim is completely unscientific, and its logical poverty is so obvious that even primary school age children can see it. According to Darwinism, in some unexplained manner, the first cell supposedly formed in the Earth’s primeval environment, in a pool of muddy water. And out of that single cell, a literally endless series of coincidences later gave rise to animals, plants, human beings and civilizations. In other words, all of mankind, as well as the entire plant and animal kingdoms, are supposedly the work of an ideal quantity of mud, a long period of time and plentiful coincidences.
One would have to lack any facility to understand and reason in order to believe that through coincidences, mud eventually gave rise to civilizations. Anyone capable of thinking and drawing appropriate conclusions can’t possibly be taken in by Darwinist errors


According to Darwinists, who are suffering from an obvious logical deficiency, these materials, each one of which is unconscious, gave rise to human beings possessed of reason and conscience, who think, love, feel compassion, possess sound judgment, produce paintings and statues, compose symphonies, write novels, build skyscrapers, construct nuclear reactors, discover the causes of diseases and manufacture drugs to cure them, or engage in politics. They claim that when sufficient time had passed, lions, tigers, rabbits, deer, elephants, cats, dogs, moths, flies, crocodiles and birds all evolved by chance from muddy water.

A whole range of fruits and vegetables, with their own unique tastes and smells—oranges, strawberries, bananas, apples, grapes, tomatoes, peppers—flowers with their matchless appearances and other plants all emerged from that same mud. In short, ever since Darwin’s time, countless articles, papers, films, newspaper reports, magazine articles and television programs have repeated the evolutionist scenario in which all of life emerged by chance from mud.

In other words, if you ask a Darwinist “How did our civilization arise?” or, “How did such a wide range of life forms come into being?” or, “How did mankind come into existence?” the essential answer you will receive is this: Coincidences gave rise to all these things from mud, over the course of time.


The Darwinist scenario of “life emerging from mud” can no longer deceive people. Any rational person can immediately see the nonsensical premise of the theory of evolution.


One would doubtless need to be devoid of reason or lack any facility for understanding in order to believe such a tale. Yet surprisingly, that very irrational and illogical theory has had its adherents for many years and is still being propagated constantly under a scientific guise.





The Lies of Darwinism Have Been Unmasked
Scientific evidence has revealed that the “sequence” of equine evolution, long portrayed as one of the strongest pieces of evidence for evolution, is untrue—and wholly imaginary


The theory of evolution, first proposed under the primitive conditions of the 19th century, has been disproved by advances in science and technology. It has been recognized that Darwin’s claims are totally unrealistic:
Natural selection and mutations, cited as the mechanisms that drive the process of evolution, have no effects of the kind envisaged by Darwinists. In short, it is impossible for them to give rise to new species.

The final death blow to Darwinism was dealt by the fossil record. Darwin claimed that all the millions of different life forms had come into being through descent from a supposed single common ancestor.

In order for his claim to be verified, there should be traces in the fossil record—an irrefutable document of natural history—of this supposed primitive ancestor and of the various life forms that developed from it. For example, if all mammals were descended from reptiles, as evolutionists maintain, then there would have to be fossil remains of a series of half-mammalian, half-reptilian life forms.

To date, millions of fossils, belonging to a great many species, have been unearthed during excavations. Yet not a single one showing a transition between species has ever been found. Every fossil ever found shows that each living thing emerged suddenly, with all its characteristics complete. In other words, every species of plant and animal was created.

Confronted by this fact, evolutionists have resorted to various falsehoods. They have produced hoaxes—counterfeit, artificial fossils that have come to be regarded as disgraces to paleontology. They have tried to deceive the lay public by tampering with genuine fossils of extinct life forms and inventing a series of imaginary scenarios. One of the best known of them is the so-called “evolution of the horse.”

Fossils belonging to entirely different species that once lived in India, South America, North America and Europe were arranged in order of size—from small to large—in the light of evolutionist imaginations. So far, different researchers have come up with more than 20 different equine evolution scenarios. There is no agreement among them regarding all these completely different family trees. The one point they commonly agree upon is their belief that a dog-like creature known as Eohippus (or Hyracotherium) that lived in the Eocene epoch (54 to 37 million years ago) was the very first ancestor of today’s horses. However, Eohippus—portrayed as the ancestor of the horse and that became extinct millions of years ago—is almost identical to the present-day animal known as the hyrax, which looks nothing like a horse and is totally unrelated to that species.

Moreover, it has been established that breeds of horse living today have also been discovered in the same rock strata as Eohippus. (See Francis Hitching’s The Neck of the Giraffe: Where Darwin Went Wrong, New York: Ticknor and Fields, 1982, pp. 30-31.) This means that the horse and its supposed ancestor were both living at the same time, which proves that the horse never underwent any such process as evolution.

The invalidity of the “equine series” proposed by evolutionists also applies to birds, fish, reptiles and mammals, in short, to all living things, to their supposedly common ancestors and supposed family trees. It has been determined that every fossil species suggested as being the ancestor of some other living thing either belongs to an independent extinct life form or is the result of evolutionists tampering with fossils of the species in question.

Darwinism has been exposed as the most wide-ranging and astonishing deception in the world’s history. That millions have been taken in by this deception, as if hypnotized, and have been influenced by all of Darwinism’s illogical claims, is truly miraculous. The support lent to the theory of evolution and the acceptance it has enjoyed up to now are the result of tricks played on mankind by satan, who urges vast numbers of people towards Darwinism.

Until recently, no one had the courage to unmask this ruse of satan’s and to publicize the true facts. But in the present century, the response to this deception has finally been laid out in full detail, and the public has been made fully aware of the state of affairs. By the will of God, the collapse of Darwinism has advanced beyond any point of recovery. Indeed, that is the fundamental reason for the panic in the Darwinian
global empire.
By
Harun Yahya

மைக்கேல் ஜாக்சன் என் தந்தை அல்ல: நார்வே வாலிபர் திடீர் பல்டி

அமெரிக்காவில் கடந்த மாதம் மரணம் அடைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இதற்கிடையே அவருக்கு நார்வே நாட்டில் உமர்பட்டி என்ற 25 வயது மகன் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.கடந்த 8 ஆண்டுகளாக அவர் அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் வசித்து வந்தார். மைக்கேல் ஜாக்சன் இறுதிச் சடங்கிலும் அவர் முதல் வரிசையில் இருந்தார்.


மைக்கேல் ஜாக்சனின் மகன் என்று அவரைப் பற்றி கடந்த வாரம் தகவல் வெளியானது. மரபணு சோதனை மூலம் அவர் மைக்கேல் ஜாக்சனின் வாரிசாக நிரூபிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.இந்த நிலையில் உமர் பட்டி தான் மைக்கேல் ஜாக்சனின் மகன் இல்லை என்று அறிவித்துள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.அவர் கூறி இருப்பதாவது:-மைக்கேல் ஜாக்சன் என் தந்தை அல்ல. நானும் அவரும் நெருக்கமாக, ஆத்மார்த்த நட்புடன் பழகினோம். அவர் எனக்கு ஒரு நண்பராக இருந்தார்.மைக்கேல் ஜாக்சன் அடிக்கடி என்னை பார்த்து மகன் போல நினைக்கிறேன் என்று சொல்வார். அது எனக்கு கிடைத்த பெருமை. ஆனால் தேவை இல்லாமல் நான் மைக்கேல் ஜாக்சனின் மகன் என்று வதந்தியை பரப்பிவிட்டனர்.உண்மையான என் பெற்றோர் நார்வே நாட்டில் இருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பன் என்ற முறையில்தான் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் நான் முதல் வரிசையில் இருந்தேன். அதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.இவ்வாறு உமர்பட்டி கூறினார்.

BERUWALA INCIDENT (MURDER)

Assalamu Alaikum dear islamic brother and sisters,
Two murders - pre planned murders with obvious??? instructions to the police not to respond - had taken place.
The politicians who run even when a man dies of dog bite are very conspicuous by their absence. If you are calling yourselves the leaders of the society, where are you? Sleeping in your lofty palaces? Those who are at the door steps when the elections are around the corner, why are you silent? Two young boys in their early 30's who had nothing to do with the provocations -were murdered in the most brutal way. One's head was chopped off after being cut form behind and another's head was crushed with a massive concrete stone.
Still not a single politician -the so called guardians of our community (albeit self proclaimed) - visited the homes. all are are absconding. Ok, you cannot -and will not, settle the problems, but shouldn't you be there at least to attend a funeral of a fellow Muslim - of a matter which has gripped the nation? To at least show sympathy to the family?
No you all wouldn't. But, Sir, your slip is showing.
Surely, all of you will surely be questioned on the day of Akhira for the roles you play in your positions.
It is also shocking that in spite of the murders - and burning of the palace of Allah, no other Da'wa organization other than the thouheed organizations -have even conveyed a word of sympathy, leave alone condemnation of the dastardly act or solidarity with the murdered's families. The irony is that many of those belonging to the Hubbul awliya thakiya party - the perpetrator's side - have come forward to show empathy with the family.
Why, I ask the others - is the blood of the thouheed bother blue?
Difference of opinions and clashes are here to stay - that is a foregone conclusion. But murder? MURDER? That is another matter. And international pre planned murder? With police not to not responding - from 7 p.m. till 2 a.m.? In spite of repeated calls and pleas?
Quran is very clear on the matter. do I need to remind anyone?
Allah is the greatest judge. and He is watching all of us.
.........................................................
Two Janasas move to home
One of Janas's Home near to Broken Masjid
Broken Masjid photos in some view
During Janash time in front of broken Masjid



infornt of Beruwala Police station rally after the Jansa Prayer

நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம்

கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதன் தென் தீவு 30 செ.மீ. மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா பக்கமாக நகர்ந்துள்ளது நியூசிலாந்து. இந்த நிலநடுக்கத்தால் மிகச் சிறிய சுனாமி அலையே ஏற்பட்டதும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் இரு கண்டத் திட்டுகளுக்கு மத்தியில் உள்ள மெதுவான பகுதியில் ஏற்பட்டதால் பாதி்ப்பு பெரிதாக இல்லை என்று நியூசிலாந்து வி்ஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அதிக அதிர்வு கொண்ட அலைகள் ஏற்படாமல் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டதாகவும் இதனால் கட்டடங்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெறிவித்துல்ளானர்.
வீரகேசரி இணையம்

அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான


அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமானநிலையங்களிலும் பொது இடங்களிலும் முகத்தில் தாடியுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம் முஸ்லிமல்லார் என்றப் பாகுபாடின்றி அனைவரும் கண்காணிக்கப்படுகின்ற்னர். அமெரிக்க விமானநிலையங்களில் பல்வேறு பிரபலங்கள் முகத்தில் தாடி இருந்த ஒரே காரணத்திற்காக தீவிர பரிசோதனை மற்றும் கடுமையான கேள்வி கணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் இப்போக்குத் தற்பொழுது இஸ்லாத்திற்கு மாறிய அமெரிக்க இராணுவத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு அமெரிக்கா, கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இணைத்தவர்களில் ஓய்வுபெற்ற அமெரிக்க முன்னாள் இராணுவவீரரும் ஒருவர். எரிஷ் ஸ்கெர்ஃபென் என்றப் பெயர் கொண்ட அவர், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செய்த இக்காரியத்தினால் தற்பொழுது தனது பணியினையும் இழந்து எதிர்காலமே சூனியமான நிலையில் தத்தளிக்கின்றார்.அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தீவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் தனது பெயர் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப் படுவதற்கான விளக்கம் கோரியும் உடனடியாகத் தனது பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவர் அமெரிக்க உள்விவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறை(Department of Homeland Security) மீது தற்பொழுது வழக்கு தொடுத்துள்ளார்.தனது மனுவில், “1994ம் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியது தான் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் தனது பெயர் இணைக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தான் கருதுவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தனது மனைவிக்கும் தனக்கும் எதிராக இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டதில்லை என்றும் எவ்வித குற்றங்களிலோ, தீவிரவாதிகளோடோ எந்த ஒரு தொடர்பும் தங்களுக்கு இல்லை” என்றும் கூறியுள்ளார்.தமது மனுவில் இத்தம்பதிகள், “தாங்கள் சோதனைகளுக்காகவும் விசாரணைகளுக்காகவும் விமான நிலையங்களிலும் எல்லையை கடக்கும் போதும் 2006 முதல் பல முறை எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டோம்; வளைகுடா போரில் நாட்டுக்காகப் போரிட்ட தன் மீது எவ்வித அடிப்படையும் இன்றி அரசு காட்டும் அணுகுமுறை அவமானகரமானது” என்றும் தம்பதியினர் முறையிட்டுள்ளனர்.எரிஷ் ஸ்கெர்ஃபென் 13 ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தில் அரசாங்க பாதுகாப்பு ஹெலிகாப்டர் பிரிவு உட்பட பணியாற்றியுள்ளார். அவர் முதல் வளைகுடா போரிலும் பங்கு பெற்றுள்ளார். பின்னர் அரசாங்க பாதுகாப்புத் துறையில் ஹெலிகாப்டர் விமானியாக பணி புரிந்தார். அவர் தமது அரசாங்க பணியிலிருந்து கண்ணியமான முறையில் விடுபட்ட பின்னர், Colgan Air Inc (கோல்கன் ஏர் இன்கோ) எனும் டெக்ஸாஸ் மாநிலத்தில் வட கிழக்கு பகுதியில் இயங்கும் ஒரு தனியார் விமான நிறுவனத்தினால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் கோல்கன் நிறுவனத்தினர், ஸ்கெர்ஃபென் அரசாங்க தீவிரவாதிகள் பட்டியலில் கண்காணிக்கப் பட்டு வருவதால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 1 ம் தேதிக்குள் அவர் தனது பெயரை இப்பட்டியலில் இருந்து அகற்றிட வழிவகை செய்யாவிட்டால் அவர் கட்டாய பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.“எனது பணியின் எதிர்காலம் முழுமையும் இந்த பட்டியலில் இருந்து பெயரை நீக்கிக் கொள்ள வேண்டியதைச் சார்ந்துள்ளது. இந்தச் சந்தேகக் கறையை என் பெயருடன் இணைத்துள்ள நிலையில் ஒருகால் எனக்கு உலகில் எங்குமே பணி கிடைக்காமல் போகலாம்” என்று எரிஷ் ஸ்கெர்ஃபென் அஞ்சுகின்றார்.அவருக்காகவும் அவர் மனைவியின் தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் அமெரிக்க சிவில் யூனியனின் (American Civil Liberties Union ) வழக்கறிஞர் விடோல்ட் வால்க்ஜாக், “அரசாங்கத்தின் இச்செயல் அநியாயமானது மற்றும் அநீதியானது” என்று கூறுகிறார்.“அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் பணி, வேலை வாய்ப்பு, மற்றும் தொழில் துறையில் எதிர்காலத்தை இழக்கும் சூழல் உள்ளதால், ஸ்கெர்ஃபெனின் பெயரில் உள்ள இக்களங்கத்தைக் களைந்திட அரசாங்கம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும்” என்று வால்க்ஜாக் கூறினார்.கடந்த வாரம் பென்ஸில்வேனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், “ஸ்கெர்ஃபென் மற்றும் அவர் மனைவி ருபீனா தரீன் ஆகிய இருவருடைய பெயரும், எல்லா வித தீவிரவாதிகள் பயண கண்காணிப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்” என்று முறையிடப்பட்டுள்ளது.“நான் ஏன் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளேன் என்பது எனக்கு தெரியவில்லை. அதிகாரபூர்வமாக என்னிடம் இதைபற்றி அவர்கள் ஏதும் கூறவுமில்லை” என்று ஸ்கெர்ஃபென் கூறினார். அமெரிக்க நீதித் துறையின் ஒரு அறிக்கையில் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, “தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இத்தம்பதிகளின் பெயர் இருப்பது பற்றி உறுதி படுத்தவோ மறுக்கவோ இயலாது” என்று கூறப்பட்டுள்ளது.நாங்கள் கண்ணியமாக அமெரிக்க அரசாங்கத்திற்காக பணிபுரிந்தோம்; நாங்கள் போரில் ஈடுபட்டும் சேவையளித்தோம்; ஆனால், அவர்கள் எங்களையே சந்தேகத்துடன் நோட்டமிடுகிறார்கள். இது தான் இன்றைய நிலையில் உண்மையிலேயே என்னை கவலைக்குள்ளாக்குகிறது” என்று ஸ்கெர்ஃபென் தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்.அமெரிக்கராகிய இவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார். அவருடைய மனைவி ருபீனா தரீன் தமது 17ம் வயதில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். அவர் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய குறுந்தகடுகள் வெளியிடும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி தொழில் செய்து வருகிறார்.மே மாதம் ஸ்கெர்ஃபெனும் அவருடைய மனைவியும் தேசிய பாதுகாப்புத்துறைக்கு சமர்பித்த கோரிக்கை மனுவில் இதிலிருந்து மீள உதவியை நாடினார்கள். அங்கிருந்து அவர்கள் பயண பாதுகாப்பு நிர்வாகத் துறையின் பயணிகள் பிரச்சனைத் தகவல் திட்ட (Transportation Security Administration’s Traveler Redress Inquiry Program) அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள பணிக்கப்பட்டனர். இந்த வாரம் அவர்களுடைய மனுவின் விபரங்கள் சம்பந்தமான தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோரிக்கை இது வரை கண்டு கொள்ளப்படவில்லைTSA (Transportation Security Administration) எனும் இந்தப் பயணிகள் பாதுகாப்பு நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர், “நாங்கள் இந்த தம்பதிகள் விஷயமாக ஒரு அர்த்தமுள்ள தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ளோம், ஆனால் அதற்கு ஏதும் கால வரம்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி கோல்கான் நிறுவனத்தை, “ஸ்கெர்ஃபெனின் வேலை நீக்கத் தேதியை அக்டோபர் 1ம் தேதி வரை ஒத்தி வைக்குமறு கேட்டுக் கொண்டார். அந்த விமான நிறுவனமும் இதை ஏற்றுக் கொண்டு ஸ்கெர்ஃபென்னுக்கு அக்டோபர் 1 வரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க அவகாசமளித்துள்ளது.“துரதிஷ்டவசமாக இந்தப் பிரச்சனை தீவிரவாதத்தோடு சிறிதும் தொடர்பற்ற, எண்ணற்ற பலரும் சந்தித்து வரும் ஒன்றாக உள்ளது; இவர்களுக்குத் தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை; இதர குற்றங்களிலும் சம்பந்தம் இல்லை. எனினும் அவர்களின் பெயர் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் உட்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது கவலைக்குரியது” என்று American Civil Liberties Union ஐச் சேர்ந்த வழக்கறிஞர் வால்க்ஜாக் கூறினார்.

புதிய மூலகம்

ஆவர்த்தன அட்டவணையில் மீண்டும் ஒரு புதிய மூலகம்

ஆவர்த்தன அட்டவணையில் 112 வது மூலகமாக கொப்பர்நிசியம் (copernicium) என்ற இரசாயனப் பெயருடைய, Cp என்ற இரசாயனக் குறியீட்டைக் கொண்ட மூலகம் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.277 அணுத்திணிவு எண்ணைக் கொண்ட இம்மூலகம் 112 அணு எண்ணைக் கொண்டது ஆகும்.நாக (Zn) அயனை உச்ச வேகத்தில் ஆர்முடுக்கி ஈய (Pb)அணுவுடன் மோதவிட்டு கரு இயைபை (கலப்பை) (nuclear fusion) ஏற்படுத்தி அதன் மூலம் இந்த மூலகம் உருவாக்கப்பட்டிருகிறது.முன்னர் இதற்கு தற்காலிகப் பெயராக ununbium எனப் பெயரிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.13 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மூலகம் கண்டறியப்பட்ட போதும் தற்போதே IUPAC யால் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு குறித்த மூலகத்துக்கு, போலந்தைச் சேர்ந்த பழம்பெரும் வானியல் ஆராய்ச்சி நிபுணரும் சூரியனைக் கோள்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டுபிடித்தவருமான Nicolaus Copernicus இன் பெயரைக் கொண்டு பெயரிட்டு ஆவர்த்தன அட்டவணையில் சேர்த்துள்ளனர்.இதுவரை ஆவர்த்தன அட்டவணையில் மொத்தமாக 118 மூலகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நன்றி லாந்கசறி இணையம்