Subscribe Us

கிளோ குடியிருப்பு விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது

நஸரத் - ஆக்கிரமிக்கப்பட்ட தென் ஜெரூசல நகரில் பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட

பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ குடியிருப்பு


நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ (Gilo) குடியிருப்பை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேலிய அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. டெல் அவிவாக இருந்தாலும் புனித நகரான ஜெரூசலமாக இருந்தாலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைப் பொறுத்தவரையில் தான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்று அது குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்குப் பதிலளித்துப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரியொருவர், ‘கிளோ குடியிருப்பானது ஐக்கிய ஜெரூசலத்தில் ஓர் இன்றியமையாத பகுதியாகும்’ என்றும், ‘அதன் விரிவாக்கப் பணி ஒரு வழமையான செயற்திட்டமாகவே அமையும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் என யெடிஒத் அஹ்ரனொத் (Yedioth Ahronoth) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் கிளோ குடியிருப்பின் கட்டுமானப் பணிகளுக்கான வரைவுத் திட்டத்தை அங்கீகரிக்கும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல்
முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறித்து அமெரிக்க நிர்வாகத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் (George Mitchell) இஸ்ரேலியப் பிரதமரின் ஆலோசகர் யிட்சாக் மொல்ச்சோ(Yitzhak Molcho)வுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்ததாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது.
மேற்படி குடியிருப்பு விரிவாக்கச் செயற்பாடானது பலஸ்தீன் அதிகார சபையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பின்னடையச் செய்யும் அபாயம் உள்ளது என மிச்சேல் தெரிவித்துள்ளார்.
நன்றி: PIC

0 Comments:

Post a Comment