Wednesday, March 31, 2010

பெருவெடிப்பு சோதனை வெற்றி

இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

சில மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை.  இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது என்றால் செயற்கையாக அணு மோதலை ஏற்படுத்தி வெடிக்கச் செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.

ஐரோப்பாவின் அணு ஆராய்ச்சி மையம் சுவிட்சர்லாந்தில் உள்ள சேர்ன் அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனையை நடத்த திட்டமிட்டது.

80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து சென்ற வருடம் இம்முயற்சியில் இறங்கினார்கள்.

சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர்.

ஆனால் 2008 செப்டம்பர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.57 மணிக்கு பிக்-பேங் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்டதிரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. சோதனை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனர்.

கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெருவெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் கீழ்க்காணும் உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

அணுக்கள் மோதும் போது மாபெரும் ஆற்றல் அதில் இருந்து வெளிப்படுகிறது.
அந்த ஆற்றல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
பின்னர் விரிவடையும் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து விரிவடைந்த ஆற்றல் சுருங்கி வெடிப்பதற்கு முன் இருந்த நிலையை அது அடைகின்றது.

இது தான் இந்த சோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். பிரபஞ்சம் உருவாகக் காரணமான அணு ஆற்றலுடனும் இப்பிரபஞ்சம் உருவாக்குவதற்கான அணு மோதலுடனும் இதை ஒப்பிடவே முடியாது. பூமி உருண்டை என்பதைச் சொல்லிக் காட்டும் போது ஒரு கடுகை எடுத்துக் காட்டி இது போல் பூமி உருண்டையானது என்று சொல்வது போல் தான் இந்தச் சோதனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடுகுக்கும் பூமிக்கும் அளவில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது
நமக்குத் தெரிகிறது. இரயில் வண்டியின் செயல்பாட்டை பொம்மை ரயில் மூலம் விளக்குவது போன்றது தான் இந்தச் சோதனை இப்பிரபஞ்சம் உருவாகும் போது வெடித்த அணுவின் ஆற்றல் மற்றும் அதன் வெப்பம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த செயற்கை அணு மோதல் உதாரணம் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்குச் சிறியதாகும்.

இவர்கள் சோதித்த செயற்கை அணு மோதல் விரிவடைந்ததும் மீண்டும் சுருங்கி பழைய நிலைக்கு திரும்பியதும் சில நாட்களில் முடிந்து விட்டன. ஆனால் 14 பில்லியன் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட விரிவடைதல் இன்னும் நிற்கவில்லை. விரிவடைந்து கொண்டே உள்ளது. அதன் பின்னர் தான் விரிவடைதல் நின்று பழைய நிலைக்குத் திரும்பும். இதில் இருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.

இது குறித்து இன்றைய 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்

சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.
அனைத்து இணைந்திருந்தனவானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?திருக்குர்ஆன் 21:30

பிரபஞ்சம் விரிவடைகிறது)நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.திருக்குர் ஆன் 51:47

மீண்டும் சுருட்டப்படும்எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.திருக்குர் ஆன் 21:104

www.online pj.com

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.

இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.Superconducting magnets are cooled down using liquid helium

இதில் உணரப்பட்ட வெப்பநிலை 1.9 கெல்வின் (K)(-271C; -456F) ஆக இருக்கிறது. விண்வெளியில் ஆழமான பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 2.7 கெல்வின் ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The CMS detector will search for the Higgs boson - the so-called "God particle"உலகிலேயே பிரமாண்டமான பெளதீகவியல் பரிசோதனைக் கூடமாக விளங்கும் இந்த Cern lab இல் அமைக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) நடத்தப்படவிருக்கும் பரிசோதனையில், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் நேர் ஏற்றமுள்ள புரோத்திரன் (Proton)களை மோதவிட்டு அவை மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் துகள்கள் பற்றி ஆராய இருக்கின்றனர்.


இந்த புதிய துகள்களினை மற்றும் அவற்றின் தன்மைகளை அடையாளம் கண்டுவிட்டால் பிரபஞ்சத்தில் சடப்பொருட்களை ஆக்கியுள்ள அணுக்கள் கொண்டுள்ள உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள பிரதான அடிப்படைக் கூறை அல்லது கூறுகளை இனங்காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இவற்றையே அவர்கள் கடவுளின் துகள் அல்லது துகள்கள் என்று கருதுகின்றனர்.


இதற்கிடையே இந்தப் பரிசோதனையால் செயற்கையான கறுப்போட்டை அல்லது கருந்துளை (Black hole) ஒன்று பூமியில் செயற்கையாக உருவாக்கப்படக் கூடிய சூழல் இருப்பதால் அது பூமிக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


எதுஎப்படியோ European Organization for Nuclear Research (CERN) அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த LHC ஆய்வு கூடம் தனது கடவுளின் துளைத் தேடும் பரிசோதனையை செய்ய ஆரம்பித்துக் கொள்ள இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அதி குளிர் சூழல் உருவாக்கம் உணர்த்தி நிற்கிறது. இந்தப் பரிசோதனையின் போது மிகப் பெருமளவிலான சக்தி உருவாக்கப்படுவதோடு.. பெருமளவு வெப்பமும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்.. ஆழமான விண்வெளியில் உள்ளது போன்ற இந்த அதி குளிர் சூழல் என்பது இப்பரிசோதனைக்கு முக்கியமான ஒன்றாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Sunday, March 28, 2010

'மதமாற்றம் தவறல்ல'-சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள் _

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.

"சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு' என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வீரகேசரி

http://asfarmnm.blogspot.com/2010/03/blog-post.html

Friday, March 26, 2010

முஸ்லிமாக மாறிய பெண் கைது

புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.

சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.

மூன்று மாத விடுமுறையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றிருந்த சாரா மாலினி அங்கிருந்து இந்த நூல்களில் சிலவற்றை வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை மூலமாக அனுப்புவதற்கு சென்றிருந்தபோது, அங்கு கடமையிலிருந்த பௌத்த தேசிய வாதக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்நூலைப் பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சாரா மாலினி கைது செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றின் பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான செயல்களில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

80களின் நடுப்பகுதியிலிருந்து வளைகுடா நாட்டில் சாரா மாலினி பெரேரா வசித்து வருவதாகவும் 1999ம் ஆண்டில் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூடவே இஸ்லாத்துக்கு மதம் மாறியுள்ளதாகவும் கல்ஃப் டெய்லி செய்தி கூறுகின்றது.

பெளத்த தேசியவாதம் தற்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில், பெளத்தவாதக்கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக் குழுவாக விளங்கும் முஸ்லிம்கள், அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.

ஆனால் அங்கு புத்த மதத்தவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.