
சர்ச்சைக்குரிய 'கப்டன் அலி' கப்பலில் உள்ள பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த கப்டன் அலி கப்பல் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்தவண்ணமிருந்தன.இந்நிலையில், மெனிக்பாம் நிவாரண முகாமின் நான்காம் வலயத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்களை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இலங்கைக் கிளையின் நிர்வாகத்தினர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்," 'கப்டன் அலி' கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வழங்கியது. அதன்படி அந்த கப்பலை வவுனியாவுக்கு அனுப்பி மக்களுக்கு நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்" எனத் தெரிவித்தார்.
virakesari
0 Comments:
Post a Comment