Monday, August 31, 2009

ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கப் படைகள் ஆயத்தம்

ஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது. தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார். அமெரிக்கப் படைகளிடம் பிடிப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.ஈராக்கின் எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி, அவற்றை நிரந்தரமாக அமெரிக்காவின் பிடியில் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, அதன் துணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசே முறியடித்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக்கில் நிலைபெற்ற அமெரிக்க படைகள் மீது அந்நாட்டு தீ்விரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.ஈராக்கில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா கடந்த ஆறரை ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் 12 லட்சம் ஈராக்கியர்களே கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் 4,000 பேருக்கு மேல் பலியாகினர். இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவது என்று அமெரிக்க அரசு, ஈராக் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.அதன்படி, தனது படையணிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தாம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கப் படைத் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.ராடார்களில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 15 லட்சம் போர்க் கருவிகள் உட்பட ஒரு பெரும் படையை அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா கொண்டு செல்ல, பல நூற்றுக்கணக்கான கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வீரகேசரி

Monday, August 24, 2009

300 அடி பள்ளத்தில் குதித்து இளம் காதல் ஜோடி தற்கொலை

பதினெட்டு வயதுடைய இளைஞனும் பதினான்கு வயது டைய யுவதியும் கண்டி தவுலகல எனும் பிரதேசத்திலுள்ள சுமார் முந்நூறு அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர் களின் சடலங்கள் நேற்று முன்தினம் பொலிஸாரால் கண் டெடுக்கப்பட்டுள்ளன.
வாலிபர் ஹந்தஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த தினுஷ்க பண்டார (18) என்றும் யுவதி கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த சசிக்கலா சப்ரமாது (14) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இறந்து போன இளைஞரின் சகோதரியும் இறந்து போன யுவதியின் சகோதரனும் திருமணம் முடித்திருப்பதன் மூலமாக தற்கொலை செய்து கொண்ட இருவரும் குடு ம்ப அறிமுகத்தில் காதலராகினர்.
கந்தளாய் பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் அந்த யுவதி விடுமுறைக்காக தமது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
மரண பரிசோதனைக்காக கண்டி பெரியாஸ்பத்திரிக்கு சடலங்கள் கொண்டு வரப்பட்டன.
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் கடும் காயங்கள் ஏற்பட்டதனால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தினகரன்

Sunday, August 23, 2009

ஆபாச ஊடகத்ததால் வழிதவறிப் போகும் சிறுவர்கள்: 9 வயது சிறுவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது!


ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இடம்பெறும் ஆபாச நிகழ்ச்சிகளும் காட்சிகளும் சிறுவர்களையும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாக கீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் கைதான சிறுவன் என்ற நிலையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் இன்டோரா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
ஆம். ஒன்பதே வயதான அந்த சிறுவன், தன்னுடன் விளையாடிய 6 வயது சிறுமியை, வீட்டில் அவர்களின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மைனரான சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிணையில் விடுவித்துள்ளனர்.
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 376 (கற்பழித்தல்) பிரிவின் கீழ் அந்த சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்நிலையத்தில் ஒருநாள் இருந்த அவனை, சிறுவர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 10 வயதான மாணவர்கள் 3 பேர் சேர்ந்து, அவர்கள் படித்த பள்ளியைச் சேர்ந்த 4 வயதான மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஓரிரு தினங்களில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 9 வயதான சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக அமைந்துள்ளது.
இண்டோரா அருகே ஜலோரா மொஹல்லா என்ற இடத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளிக்கு ஒன்றாக வருபவர்கள். பல ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுபவர்கள்.
கடந்த ஞாயிறன்று இதேபோல சிறுமியின் வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.
அப்போது திடீரென்று அந்த சிறுவன் குளியலறைக்குள் சிறுமியை இழுத்து, அந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி மறுத்த போதிலும் அடித்து பணிய வைத்துள்ளான்.
சிறுமி, சிறுவனை எதிர்த்துப் போராடியதன் காரணமாக சிறுவைனின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பியதும், சிறுமி அழுது கொண்டிருப்பதை அறிந்து விசாரித்துள்ளனர். சிறுமிக்கு இரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவனையும், சிறுமியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே உனா என்ற இடத்தில் உள்ள சிறுவர்கள் நீதிமன்றத்தில் அந்த சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
பொதுவாக 5ஆம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைப் பருவம் மாறாத ஒரு சிறுவன், தன்னுடன் விளையாடும் சிறுமியை பாலியல்ரீதியில் துன்புறுத்தத் தூண்டியது எது?
பெற்றோரின் அலட்சியப் போக்கு என்பதுடன், அவர்கள் வாழும் சூழல், பார்க்கும் காட்சிகள், பழகும் நண்பர்கள் என்று எண்ணற்றவற்றைக் கூறலாம்.
அதற்கேற்ப இன்றைய வளர்ந்து விட்ட, தொலைக்காட்சி ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் காட்சிகளும் பிஞ்சு மனதில் ந்ஞ்சை விதைக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?
இதற்கு ஒரே தீர்வு ஊடகங்கள் ஆபாசத்தை நிறுத்த வேண்டும். அல்லது நம்குழந்தைகளை அதை விட்டு நாம் காக்க வேண்டும்.
வெப்துனியாவில் இடம் பெற்ற செய்திலியிருந்து…

Friday, August 21, 2009

67 இலட்சம் பெறுமதியான யூரோக்களுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது


உடம்பில் யூரோ நாணயத்தாள்களை கட்டிக்கொண்டு கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல முயற்சித்த இந்திய பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த இவர் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த சுமார் 67 இலட்சம் பெறுமதியான யூரோக்களை மீட்டனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரிகள் அவரிடமிருந்து மீட்கப்பட்ட யூரோக்களை அரசு உடமையாக்கியுள்ளனர்.

வீரகேசரி

Thursday, August 20, 2009

'உணவுக்கு சரியாக கஸ்டப்பட்டோம் கோதுப்பருப்பை தண்ணீரில் அவித்து பசியாறினோம்"

இறுதிக் கட்டப் போரில் சிக்கி உயிர்தப்பிய ஒரு பெண்மணியின் கண்ணீர்
'நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்." என இறுதிக் கட்ட போரில் உயிர்தப்பிய சிவராசா ரஞ்சனி தெரிவித்தார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கி வவுனியாவை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி தனது கசப்பான அனுபவங்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது அவரது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கையில், 'என்ர கணவர் சிவராசா. கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982ல் மணம் முடித்தோம். எங்களுக்கு 3 பிள்ளைகள். 2006ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து திரும்ப 'பாஸ்" கிடைக்கேல. கடந்த வருடம் யுத்தம் தொடங்கிட்டுது. வேறு வழியில்லாமல் இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் என ஆரம்பித்து புதுமாத்தளன் வரை 3 மாதங்கள், உடுத்த உடுப்போட நாடோடிகளாக அலைஞ்ச நாங்கள்"
புதுமாத்தளனில் உணவுக்கு கஸ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படியாக பொருட்களின் விலைகள் இருந்தன. கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியை ஆறினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை. அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வந்த ஆறுபேர் கால்களை இழந்தனர். நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16ம் திகதியன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்" என்றார். வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி தனது கசப்பான அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தார்.இவ்வாறு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மரண வேதனையான அனுபவங்கள் இருக்கின்றன. ஊடகங்கள் அனுமதிக்கப்படாததன் காரணமாக அவை இன்னும் அவர்களின் மனங்களில் புதைந்துபோயுள்ளன.
- லங்காநியுஸ்வெப்

Tuesday, August 18, 2009

லத்தீன் அமெரிக்கா பற்றிய அமெரிக்காவின் கொள்கைகளால் ஒபாமாவின் செல்வாக்கில் வீழ்ச்சி


* ஹொண்டுராஸ் தளத்தை மூடுமாறு கியூபா கோரிக்கை
* ரஷ்யாவிடமிருந்து யுத்த தாங்கிகளை வாங்க வெனிசூலா திட்டம்
* அமெரிக்காவின் செல்வாக்கு ஓங்குவதைத் தடுக்க முயற்சி
* பராக் ஒபாமாவின் கொள்கைகளில் சில நாடுகள் சந்தேகம்
* வீணான பதற்றத்தை தோற்றுவிப்பதாக சாவெஸ் குற்றச்சாட்டு
கரகாஸ், ஆக. 17 ராய்ட்டர்
லத்தீன் மெரிக்கா மீதான பராக் ஒபா மாவின் கொள்கைகளால் அமெரிக்க ஜனாதி பதியின் செல்வாக்கு சரிந்து விட்டதாக வெனி சூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் தெரிவித்தார். வாராந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சாவெஸ் அமெ ரிக்காவையும் அதன் தோழமை நாடுகளை யும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்திலி ருந்து வெளியேறுமாறும் கோரிக்கை விடுத்தார்.
கொலம்பியாவின் இராணுவத் தளங்க ளைப் பாவிக்க அமெரிக்கா ஆயத்தமா கின்ற வேளையில் சாவெஸ் இவ்வாறான கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
வெனிசூலாவின் எண்ணெய் வளத்தில் குறியாயுள்ள அமெரிக்கா கொலம்பியா வின் இராணுவத் தளங்களைப் பாவிக்க வும் ஹொண்டுராஸில் புரட்சியை உண்டு பண்ணி கைப்பொம்மை அரசாங்கமொன்றை நிறுவவும் எண்ணியுள்ளமை வெளிச்சத்து க்கு வந்து விட்டதாகவும் வெனிசூலா ஜனா திபதி சாவெஸ் குற்றம் சாட்டினார்.
கடந்த வாரம் ஹொண்டுராஸ் குறித்துக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி பராக் ஒபாமா ஹொண்டுராஸில் அமைதியை நிலைநாட் டும்படி தென் அமெரிக்க நாடுகள் எங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால் இதை இரண்டு வழிகளில் செய்ய முடியாது.
அமைதியைக் கொண்டு வரும் நிலைமை அமெரிக்காவிடம் இல்லை என்று கூறி லத்தீன் அமெரிக்க நாடுகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தார். இதற்குப் பதிலடி வழங்கும் வகையி லேயே சாவெஸின் கருத்துக்கள் அமைந் தன. ஹொண்டுராஸ் விடயத்தில் தலையி டாமல் அதனைச் சுதந்திரமாகச் செயற்பட விட்டாலே போதுமென்றும் சாவெஸ் குறிப்பிட்டார்.
கொலம்பியாவின் இராணு வத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டமையும், ஹொண்டு ராஸ் புரட்சியும் தென் அமெரிக்க நாடுகளை உசுப்பி விட்டுள்ளன. அமெரிக்காவின் இச் செயற்பாடுகள் லத்தீன் அமெரிக்க பிராந்திய த்தில் காலூண்டுவதற்கான நடவடிக்கைகள் என அந்நாடுகள் கருதுகின்றன.
ஹொண்டுராஸில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை மூடிவிடுமாறு கியூபா கேட்டுள்ளதும் ரஷ்யாவிடமிருந்து யுத்த டாங்கிகளைக் கொள்வனவு செய்ய வெனிசூலா திட்டமிட்டுள்ளமையும் தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் விழிப்படைந்துள்ள தைக் காட்டுகின்றன. தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வளர்ப்பதில் அமெரிக்கா அக்கறையுடன் செயற்படுவ தாக பராக் ஒபாமா கூறியுள்ளார்.

..தினகரன்

Monday, August 17, 2009

ஆபாசத்திற்கு எதிரான அரசின் நடவடிக்ைககைள வரேவற்ேபாம்

மலிவான பாலியல் உணர்வுகைளயும் ஆபாசத்ைதயும் தூண்டும் வண்ணம்இலங்ைகயின் கலாசார சூழல் மிக ேமாசமாக மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.ெபௗதீக சூழல் மாசைடதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்ைககள் அளவுக்குக்கூட, இக்கலாசார சூழல் மாசைடதைலக் கட்டுப்படுத்தும் நடவடிக்ைககள்ேபாதியளவு எடுக்கப்படாமேலேய இருந்து வந்தது.இலங்ைகயின் உயர் கலாசாரப் ெபறுமானங்கைள ேபணுவதில் அக்கைறெகாண்டிருந்த சக்திகள் இது குறித்து அடிக்கடி ேபசியும் எழுதியும்வந்திருக்கின்றன. எனினும், அைவ குறித்து நாட்டின் தைலைமேயா, அரசியல்தைலவர்கேளா, உ􀂾ய அதிகா􀂾கேளா ேபாதியளவு நடவடிக்ைகஎடுக்கவில்ைல. பல சந்தர்ப்பங்களில் இவற்ைறக் கண்டும் காணாதவைகயிேலேய இவர்கள் நடந்துெகாண்டனர்.இலங்ைக சமூகம் மிக ேவகமாக பண்பாடுகைளயும் உயர் ெபறுமானங்கைளயும் இழந்து, வழ்ீ ச்சிப் பாைதயில் ேவகமாக நைட ேபாட்டுக்ெகாண்டிருந்தது. இது குறித்து சமூக, சமயத் தைலவர்கள் மட்டுேம அக்கைறெகாண்டிருந்தனர்.ெபற்ேறார்கள் கூட என்ன ெசய்வது எனத் ெத􀂾யாது தடுமாறிக்ெகாண்டிருந்தனர். குறிப்பாக வள􀂾ளம் பருவ மாணவ, மாணவிய􀂾டம்ஆபாசமும் மலிவான பாலியல் உணர்வுகளும் மிக ேவகமாகத் ெதாற்றிக்ெகாண்டிருந்த ஒரு சூழலிலிருந்து, அவர்கைள எவ்வாறு மீட்பது எனத்ெத􀂾யாது குழம்பியிருந்த ெபற்ேறாருக்கு அரசாங்கம் அண்ைமக் காலமாகஎடுத்து வரும் நடவடிக்ைககள் மிகப் ெபரும் ஆறுதலாக அைமந்து வருகிறது.ஊடகங்களில் பாடசாைல மாணவ மாணவியர் குறித்த ஒரு சில விடயங்கள்மட்டுேம பகிரங்கமாகப் ேபசப்பட்டது. ஆனால், அந்தரங்கமாக இலங்ைகசமூகத்தின் எல்லா மூைல முடுக்குகளிலும் ஊடுருவியுள்ள இவ்வாறானநச்சு சூழைல எவ்வாறு தூய்ைமப்படுத்து வது என்பது குறித்து நன்கு அலசிஆராய ேவண்டும்.அரசு இப்ேபாது எடுத்து வரும் நடவடிக்ைககள் மிகவும் வரேவற்கத் தக்கைவ.ெவறும் ெபாருளாதார ஆதாயங்களுக்காகவும், ேவறுபல இழிந்தேநாக்கங்களுக்காகவும் இைளஞர் யுவதிய􀂾ன் கவனங்கைள ேவறு திைசேநாக்கித் திருப்பும் வைகயில் பல்ேவறு சக்திகள் இந்த ெவட்கக்ேகடானெசயல்களில் ஈடுபட்டு வந்தன. அவர்கைள ேகட்பார், பார்ப்பார் யாருமில்ைலஎன்ற ைத􀂾யத்தில் மனம் ேபான ேபாக்கில் அவர்கள் ெசயற்பட்டு வந்தனர்.இப்ேபாது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்ைககள் இவ்வாறான தவறானெசயல்கைளக் கட்டுப்பாட்டின் கீழ் ெகாண்டுவர உதவும். அேதேவைள,இவ்வாறான ெகடுபிடிகள் அதிக􀂾த்தால் இந்த சக்திகள் ேவறு மாற்று வழிகள்மூலம் தமது ெவட்கக்ேகடான ெசயல்கைள முன்ெனடுக்க முயலும். எனேவ,அவற்ைறயும் அறிந்து தைடெசய்வது அவசியமாகும்.சட்டங்களால் மட்டும் இவ்வாறான அசிங்கங்கைளத் தடுத்து நிறுத்தமுடியாது. இதைன ஒழிப்பதற்கான மன விருப்பேம எல்ேலா􀂾லும்வளர்க்கப்பட ேவண்டும். ஆதலால், இலங்ைக சமூகத்தில் உயர்ெபறுமானங்கைள ஊட்டி வளர்ப்பதற்கான ஆன்மீகக் கல்விக்கு ெபரும்முக்கியத்துவம் ெகாடுக்கப்பட ேவண்டும்.இன்று சர்வேதச அளவில் உயர் மனிதப் ெபறுமானங்கைள சிைதப்பதற்கானசதித் திட்டங்கள் அரங்ேகற்றப்பட்டு வருகின்றன. எவ்வாறான புதிய புதியவழிகள் மூலம் தமது ெகட்ட ேநாக்கங்கைள அைடந்துெகாள்ள முடியுேமாஅவற்ைறெயல்லாம் முடிந்தவைர பயன்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்தமுயற்சிகள் அரங்ேகறுகின்றன.இைணய வைலயைமப்பு உலகளாவிய தகவல் மற்றும் அறிவு வளர்ச்சிக்குப்ெபரும் பங்காற்றுவது ேபாலேவ, ஆபாச உணர்வுகைளத் தூண்டும் மலினமானேநாக்கங்களுக்கும் தீனி ேபாடுகிறது. ஆகேவ, சாதனங்கள், புதிய வழிமுைறகள்ஊடாக அைடயப் ெபறும் நன்ைமயான பக்கத்ைதேய நமது மக்களுக்கு நாம்வழங்க ேவண்டும். அழிவின் தூைத அவர்களிடம் ெகாண்டு ெசன்றுேசர்ப்பதால், வளரும் தைல முைற ஒன்ைற அதன் முைளயிேலேய கிள்ளிஎறியும் துேராகத்ைத ெசய்ததாகேவ மாறிவிடும்.உலகமயமாதலின் எதி􀂾ைடயான பக்கங்கைளப் பற்றிய ேபாதிய அறிவுஎமக்கு ேவண்டியுள்ளது. நவனீ சாதனங்கள் பற்றிய அறிவு ெபரும்பாலானெபற்ேறார்களிடம் இல்லாமல் இருப்பைத தவறான முைறயில் தமக்குவாய்ப்பாகப் பயன்படுத்தும் பிள்ைளகைள நாம் பரவலாகக் காண்கிேறாம்.ஆகேவ, மாற்றம் உள்ளங்களில் ஏற்படுத்தப்படுவது அடிப்பைடத்ேதைவயாகும்.அேதேபால புறச்சூழலும் இதற்கு சாதகமாக சிறந்த முைறயில்ஒழுங்கைமக்கப்பட ேவண்டும். இந்த வைகயில் அரசாங்கம் அண்ைமக்காலமாக ஆபாசத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்ைககள் மிகவும்வரேவற்கத்தக்கைவ. அதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி கூறக்கடைமப்பட்டுள்ேளாம்.
மீல்பர்வி

Thursday, August 06, 2009

கே.பி என்கிற குமரன் பத்மநாதன் பாங்கொக்கில் கைது தாய்லாந்து அரசு தெரிவிப்பு


The new self appointed LTTE leader and chief arms dealer Kumaran Pathmanathan also known as KP has been arrested in Bangkok, Thailand the government information department said.

FACTS
Born - April 6, 1955 (1955-04-06) (age 54)

Alias(es)-Selvarasa PathmanathanKumaran Pathmanathanand many others

Motive - Sri Lankan Tamil nationalism Charge(s) - Criminal conspiracy, arms smuggling and for the violation of the Indian Terrorist Act and the Indian Explosive Act. Assassination of Rajiv Gandhi.

Status - Arrested on August 6th, 2009

Occupation - Leader of LTTE

Wednesday, August 05, 2009

உயிர்காக்கும் ஓசோன் (OZONE)

On the importance of the Van Allen Belt, Dr. Hugh Ross says:
In fact, the Earth has the highest density of any of the planets in our Solar System. This large nickel-iron core is responsible for our large magnetic field. This magnetic field produces the Van-Allen radiation shield, which protects the Earth from radiation bombardment. If this shield were not present, life would not be possible on the Earth. The only other rocky planet to have any magnetic field is Mercury—but its field strength is 100 times less than the Earth's. Even Venus, our sister planet, has no magnetic field. The Van-Allen radiation shield is a design unique to the Earth.


மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..
மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் என கி.மு. 434ல் கூறிய அனக்ஸாகரஸ் (Anaxagoras 500-428 B.C.)எனும் அறிவியல் சிந்தனையாளர் மூட நம்பிக்கையாளர்களால் சித்திரவதைக்குள்ளாகிய வரலாறுகள் இந்த பூமியில் நிகழ்ந்த பின்னும் சத்தியத் திருமறையாம் தூய குர்ஆன் மூட நம்பிக்கையாளர்களின் கடவுளைப்(?) பற்றித் தெள்ளத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கிறது.

சூரியனையும் சந்திரனையும் அவனே படைத்தான. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 ஸூரத்துல் அன்பியாவின் 33வது வசனத்தின் ஒரு பகுதி)

அவைகளில் சூரியனை விளக்காகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கியிருக்கிறான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 71 ஸூரத்துந் நூஹ் - ன் 16வது வசனம்)

மேலும் சூரியனையும், சந்திரனையும் அவை (தவறாமல்) தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் (மானிடர்களாகிய) உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 14 ஸூரத்துல் இப்ராஹிம் 33வது வசனம்)

மேற்கண்ட வசனங்கள் சூரியனைப் படைக்கப்பட்ட பொருள் எனக் கூறுவதால் சூரியன் படைப்பாளன் (கடவுள்) இல்லை: அது ஒரு படைப்பினமே எனக் கூறுகிறது. மேலும் சூரியனை விளக்கு என்று கூறுவதால் அது ஓர் எரியும் பொருள் எனக் கூறுகிறது. அத்துடன் சூரியன் தன்னுடைய இயற்பியல் விதியிலிருந்து இம்மியும் பிசகாமல் இயக்கப்படுவதால் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி வளமும் வலிமையும் பெற்றுவரும் மனித சமுதாயத்திற்குத் தான் சூரியன் வசப்படுத்தப் பட்டுள்ளதேயன்றிச் சூரியனுக்கு வசப்பட்டவர்களாக மனிதர்கள் இல்லை எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகின்ற சூரியன் சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் தகவல்கள் யாவும் உண்மையென்றால் இதற்குப் பிறகும் கடவுளுக்குரிய இடத்தில் சூரியனை வைத்துப் பார்ப்பது கடவுளை நிந்திக்கும் செயலாகும். அத்துடன் தமக்கு வசப்பட்டிருப்பதற்கு மட்டுமே சக்தி பெற்ற ஒன்றைத் தாமே வழிபடுவது என்பது தம்மைத்தாமே நிந்தனை செய்யும் செயலாகவும் அமைந்து விடுகிறது.

தம்மைத் தாமே நிந்தனையில் தள்ளும் ஒருவர் மதிக்கப்படல் சாத்தியமா?

நவீன வானியல் விஞ்ஞானம் சூரியன் என்பது அதற்குரிய இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஓர் எரியும் கோளம் எனக் கூறுவதை அறியாதோர் யாரும் இந்த நூற்றாண்டில் இருக்க மாட்டார்கள். பதின்மூன்று இலட்சத்துத் தொள்ளாயிரம் கி.மீ.விட்டமும், பூமியைப் போன்று முப்பது இலட்சத்து முப்பதாயிரம் மடங்கு எடையும் (பூமியின் எடை 5,974,000,000,000,000,000,000 டன்கள்) கொண்ட இப்பொருளின் உள்ளே நமது கடல் மட்டத்தில் காணப்படும் அழுத்தத்தைக் காட்டிலும் நூறு கோடி மடங்கு அழுத்தமும் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட படுபயங்கரமான அழுத்தத்தின் கீழ் சூரியனுடைய உடலின் பெரும்பகுதியாகிய ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக (Heleum) மாறி வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் மையத்தில் 1.5 -, 2 ஆயிரம் கோடி சென்டிகிரேட் வெப்பமும் புறப்பரப்பின் மீது ஆறாயிரம் டிகிரி வெப்பமும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளாக இரசாயண மாற்றம் அடைந்து வெப்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சூரியனில் நடைபெற்று வருவதால் இயற்பியல் அடிப்படையில் சூரியன் ஓர் எரியும் பொருள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அணு உலையாம் சூரியனிலிருந்து விண்ணெங்கும் பாய்ந்தோடி வரும் அதன் ஒளிக்கதிர்களில் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பதும் ஒன்று. இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்குமே பெரும்கேடு விளைவிக்கக் கூடியவையாகும். இக்கதிர்கள் நேராக பூமியை அடையுமானால் இப்பூலகின் மீது மனிதர்கள் மட்டுமின்றிப் புற்பூண்டுகள் முதற்கொண்டு அழிக்கப்பட்டு உயிரின் சுவடே இல்லாத ஒரு கோளாக இந்த பூமி ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பூமியன் மீது பலகோடி வருடங்களாக அழிவைத் தரும் இக்கதிர்களால் எவ்விதப் பாதிப்புமின்றி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன! இது எப்படி சாத்தியமாயிற்று!?.

ஒருகால்..'அந்தோ பரிதாபம்! நமது புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே அக்கதிர்களில் எதையும் நாம் பூமிக்கு அனுப்பக் கூடாது'. எனக் கருதி, சூரியன் தானே தன் அழிவுக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் விலகிக் கொண்டதா? அதனால்தான் மானிடர்களில் பலர் இன்னமும் இதனை கடவுளாய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்களா?.

அப்படியெல்லாம் எதுவுமில்லை! ஒரு மைக்ரோ செகண்ட் (ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கூட ஓய்வின்றித் தன் அழிவுக் கதிர்களை நமது பூமியின் மீது வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்த நெருப்புக் கோளம் எனக் கூறுகிறார்கள் நவீன அறிவியல் வல்லுனர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இந்த இடத்தில் நாம் ஒரு கணமாவது சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம். கணமும் தப்பாமல் சூரியனுடைய அழிவுக் கதிர்கள் மடையுடைத்த வெள்ளமாய் நம்மீது கொட்டப்படுகின்றன. ஆனால் நாமோ பல்லாயிரம் வருடங்களாக அதன்கீழ் அழிவின்றி வாழ்ந்து வருகிறோம். உண்மைநிலை இதுவென்றால் சிந்தனைத் திறனை உலகப் பேரரங்கில் அடகு வைக்காத அறிவியல் அன்பர்களே! நீங்கள் கூறுங்கள்! நம்மீது படாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும் அதியற்புதத் தடுப்பொன்று நமக்கு மேல் இருக்க வேண்டுமா வேண்டாமா?

சிந்தனைத் திறம் பெற்றவர்களே! அறிவுசார், அறிவியல் சார் அன்பர்களே! நம்மீது பாய்ந்து வரும் இந்த அழிவுக்கதிர்கள் நம்மீது விழா வண்ணம் தடுக்கும் கூரையொன்று நமக்கு மேல் இல்லாவிடில் நம்மால் இங்கு வாழ முடியுமா? இதற்கு மேலும் சத்தியத் திருமறையின் கூற்றாம்:

'வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைத்தோம். எனினும் அவர்கள் (நிராகரிப்போர்) அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணிக்கின்றார்கள்.' (அல்-குர்ஆன் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியா - 32வது வசனம்) எனும் ஜீவ வசனத்தை ஒருவர் மறுத்து, பூமிக்குக் கூரை கிடையாது எனக் கூறத் துணிவார்?. அப்படிக் கூறினால் குர்ஆனை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் காரியத்தால் 'அவர் பத்தும் சொல்வார்;. போகட்டும்' என அவரைக் கண்டு கொள்ளாமல் அறிவியல் உலகம் விட்டுவிடும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இப்படிப்பட்ட காரியத்தை எந்த அறிவியல் வாதியும் செய்யத் துணிய மாட்டார்.

சூரியப் பேருலையிலிருந்து ஓயாது பாய்ந்து வரும் இப்புற ஊதாக் கதிர்களை எங்கள் மீது விழா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் கூரையே! நீ எங்கிருக்கிறாய்? மெய்யான உன் படைப்பாளனின் வார்த்தைகள்தாம் குர்ஆன் என்பதற்கு நீ வழங்கிக் கொண்டிருக்கும் சாட்சியமெங்கே!?.

இதோ..! ஓசோன் (OZONE) என்பதே இக்கூரைக்கு அறிவியலாளர்கள் சூட்டியிருக்கும் பெயர். உயிரினங்களின் ஜீவகவசமாகிய இப்பொருள் நமது கூரையின் மொத்த உருவமாகிய காற்று மண்டலத்தின் ஒரு மெல்லிய கீற்று (அடுக்கு) ஆகும். இப்பொருள் நமக்கு மிகவும் அறிமுகமான பிராண வாயுவின் (Oxygen) வேறொரு வடிவமாகும். இதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.

எந்த ஒரு பொருளையும் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே சென்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில்; அதை வெட்ட முடியாத நிலையை அடையும். கட்புலணாகாத இப்பொருளை மூலக்கூறு (Molecule) எனக் கூறலாம். மிக நுண்மையான இப்பொருளைத் தேவையான ஆற்றல் செலுத்தி மேலும் தனித் தனிப் பொருட்களாக பிரிக்கலாம். இவ்வாறு பிரியும் அந்த மிக, மிக நுண்ணிய பொருட்கள் அணு (Atom) எனப்படும். (அதை மேலும் பிரிக்க ஏராளமான ஆற்றல் தேவை) ஒரு பொருளைத் தனித்தனி அணுக்களாகப் பிரித்து அவைகளைச் சுதந்திரமாக விட்டுவிட்டால் அவைத் தொடர்ந்து அணுக்களாகவே இருந்து விடாது. அவை உடனே மூலக் கூறுகளாக இணைந்து விடும். இப்படிப்பட்ட மூலக் கூறுகளின் தொகுப்புகளே பொருட்களாகும்.

நமது பிராணவாயு என்பதும் மூலக்கூறுகளின் தொகுப்பேயாகும். மூலக்கூறுகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களின் தொகுதிகளாகும். பிராணவாயுவைப் பொருத்தவரை அதனுடைய மூலக் கூறில் இரண்டு அணுக்கள் இருக்கும். சில காரணங்களால் பிராணவாயு அதன் மூலக் கூறில் மூன்று அணுக்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு பிராண வாயுவின் மூன்று அணுக்கள் அதன் மூலக் கூறில் இடம்பெற்றால் அதன் பிறகு அது பிராண வாயுவின் குணத்திலிருந்து மாறுபட்ட பொருளாக மாறும். இதுவே ஓசோனாகும். ஓசோன் என்னும் இந்த வாயுப் பொருள்தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழ விடாமல் உட்கிரகித்துப் பூமிக்கு கூரையாக செயல்பட்டு வருகிறது எனக் கூறி 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தூய குர்ஆன் மெய்யான இறைவேதம் என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன.

இவ்வாறு பூமிக்குக் கவசமிட்டு நிற்கும் கூரையைப் பற்றித்தான் சத்தியத் திருமறை அது ஒரு பாதுகாக்கப்பட்ட பொருள் எனக் கூறுகிறது. எனவே நமது கூரையாக செயல்படும் ஓசோன் படலத்துக்கும், ஏதோ பிரச்னை என்றும், அப்பிரச்னையிலிருந்து அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் இந்த வசனத்திலிருந்து இப்போதும் விளங்குகிறது. அப்படியானால் ஓசோனுக்கும் பிரச்னையுண்டா?.

ஓசோனுக்கும் பிரச்னையுண்டு எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். ஓசோன் என்பது பிராணவாயுவின் இரண்டு அணுக்களுக்குப் பதிலாக (O2) அதன் மூன்று அணுக்களால் (O3) ஆன மூலக்கூறு எனக் கண்டோம். அதே நேரத்தில் மூலக்கூறு (O2) ஓசோனாக (O3) மாற்றம் அடையும் போது பிராண வாயுவைப் போன்று (O2) நீடித்து நிற்கும் (Stability) தன்மையை இழந்து விரைவில் சிதைந்து தனித் தனி அணுக்களாக மாற்றமடைந்து மீண்டும் பிராணவாயுவாக (O2) ஓசோன் (O3) மாறிவிடுகிறது.

ஓசோனுடைய இந்த குறுகிய ஆயுள் காரணமாக இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுவே ஓசோன் படலத்தில் காணப்படும் பிரச்னை என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

பிரச்னை என்றால் இஃதன்றோ பெரும் பிரச்னை! எங்கள் இறைவா! என்னென்ன பிரச்னைகள் எங்களைச் சூழந்து நிற்கின்றன! கோடிக்கணக்கான வருடங்களாய் உயிரினங்கள் வாழ்ந்து வரும் இப்பூவுலகுக்குக் கூரையாய் அமைந்து நிற்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? ஒரு கணமும் ஓய்வின்றி நீ எங்கள் கூரையைப் புதுப்பித்துக் கொண்டிராவிடில் நாங்கள் இங்கு உயிர் வாழ்வது எங்ஙனம்? ஆகவே நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே கூரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என நீ கூறியதற்கு நிறைவான ஆதாரமாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்கூட சுக சுந்தரமாக நீ எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உன்னை மறுத்துரைக்க எப்படித்தான் அறிவு இடம் கொடுக்குமோ?

சூரியனுடைய புற ஊதாக் கதிர்களை உட்கிரகித்தவாறு ஓயாமல் சிதைந்து கொண்டிருக்கும் ஓசோன் படலம் பாதுகாக்கப்பட்டு வரும் மர்மம்தான் என்ன?

அன்பார்ந்த நண்பர்களே! இதற்குரிய விடையான அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தெரிந்து கொண்ட ஒருவர் இத்தூய குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவரை வியப்படையச் செய்யும் வசனம் ஒன்றை அவர் கண்ணுறுவார். குர்ஆன் கூறுகிறது:

அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலை காட்டுவதும் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 30வது அத்தியாயம் ஸூரத்துர் ரூம் - 24வது வசனம்)

இந்த வசனத்திலிருந்து இறந்து கிடக்கும் பூமியை உயிர்ப்பிப்பதில் மழை, மின்னல் என இரு நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் உள்ளடங்கியிருப்பதாக நம்மால் காண முடிகிறது. நீரின்றி உயிரினம் இல்லை என்பதால், இதில் மழையின் செயற்பாடு என்ன என்பதை நாம் எளிதில் விளங்குகிறோம். ஆனால் இந்த வசனத்தில் உயிர்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலும் இடம்பெறுவதாக காண முடிகிறதே? மின்னலுக்கும் உயிரினத்திற்கும் என்ன தொடர்பு?

மின்னல் என்பது பிரதானமான ஒளி (மின் ஒளி), ஒலி (இடியோசை), மின்சாரம் என மூன்று கூறுகளை உள்ளடக்கியது. (இம்மூன்று வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாக 'இடிப்புயல்' எனும் வார்த்தையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.) இப்படிப்பட்ட இந்த மின்னல் நாம் அச்சப்படவும், ஆசைப்படவும் ஏற்றது எனவும் இந்த வசனம் கூறுகிறது. மின்னலைப் பார்த்தவுடன் நாம் கண்களை மூடுவதும், காதுக்குள் விரலூன்றுவதும் மின்னலால் நமக்கு அச்சம் எற்படுவதால்தான். எனவே மின்னல் அச்சப்படத்தக்கது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் நாம் ஆசைபடத்தக்க விஷயம் என்ன இருக்கின்றது?.

ஆனால் மின்னல், மழை, உயிர்ப்பித்தல் என இம்மூன்று விஷயங்களையும் சிந்தித்துணரும் சமூகத்தவருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன என உத்திரவாதம் தருகிறது ஒப்பற்ற இறைவேதமாம் மாமறை குர்ஆன்! எனவே நாம் இப்போது இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் சமூகத்தைத்தான் அணுக வேண்டியுள்ளது.

சத்தியத்திருமறையின் சட்டங்களை அறிந்தோ, அறியாமலோ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் சிந்தனையாளர்களே! உங்களுக்குத்தான் எவ்வளவு கண்ணியத்தை இந்தச் சத்தியத் திருமறை வழங்கிக் கொண்டிருக்கிறது! உங்கள் ஆய்வுகளிலிருந்து நீங்கள் சிந்தித்துணர்ந்த விஷயங்களில் மின்னலுக்கும், உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஏதேனும் தொடர்பா? ஏராளமான தொடர்பு உண்டு! உயிரினங்களை வாழ வைக்கும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில்கூட மின்னல் பங்கேற்கிறது எனக்கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் விஞ்ஞானிகள்!

பிராண வாயுவின் அணுக்கள் பிளக்கப்பட்டு அவை மும்மூன்று அணுக்களாக இணைந்தால்தான் ஓசோன் உற்பத்தியாக முடியும் என முன்னர் கண்டோம். இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தேவையான ஆற்றல் பெறப்பட வேண்டும். ஓசோனால் உட்கிரகிக்கப்படும் சூரியனுடைய புற ஊதாக் கதிர்களுக்கே அந்த ஆற்றல் உண்டு. எனவே ஓசோனை உற்பத்தி செய்வது சூரியனுடைய செயல்பாடுதான் என விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் தரவில்லை. ஓசோன் படலத்தினுடைய செறிவு, இரவு (சூரிய ஒளி பெறப்படாத நேரம்), பகல் (சூரிய ஒளி பெறப்படும் நேரம்) என்ற வித்தியாசமின்றி பாதிக்கபட்டு வந்ததை அவர்களுடைய ஆய்வுகளில் கண்டனர். எனவே சூரியச் செயல்பாட்டுக்கும். ஓசோனுடைய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த விஞ்ஞானிகளுக்கு ஓசோனுடைய உற்பத்தி ஒரு புதிராகவே காணப்பட்டது. ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டதன் விளைவாக அண்மையில் இப்புதிருக்கு விடை கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் நமது பூகோளத்தின் மீது ஒட்டு மொத்தமாக 1 கோடியே 60 லட்சம் இடிப்புயல்கள் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் பரவுகின்றன. ஒவ்வொரு வினாடியிலும் இப்புவி பரப்பின் மேல் குறைந்த பட்சம் 100 முறை மின்னல் மின்னும். உடனே அவ்வளவு முறை இடியோசை ஏற்படும். இதன் காரணமாக எந்த ஒரு நேரத்திலும் இப்புவியின் மொத்த பரப்பின் மேல் 1800 இடிப்புயல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி இடைவிடாது எற்பட்டுக் கொண்டிருக்கும் இடிப்புயல்களிலிருந்து உருவாகும் அளவிடற்கரிய ஆற்றல்தான் நமது ஓசோன் படலத்தை ஓயாது புதுப்பித்துப் பாதுகாத்து வருகின்றன எனக் கூறுகின்றன அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகள்.

இடி, மின்னலுடன் கூடிய மழைக்குப் பின் நமது சுவாச இயக்கம் எளிதாகி விடுவதை உணர்கிறோமே அதற்குக் காரணம்கூட ஓசோன் உற்பத்தியால் வளி மண்டலம் தூய்மையடைவதே எனவும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

அச்சம் தரத்தக்க மின்னலில் ஆசைப்படத் தக்க காரியங்களும் இருக்கின்றன எனக் கூறிய திருமறையின் வசனத்தை மெய்ப்பித்து நிற்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா? ஓசோனை உற்பத்தி செய்யும் இடிப்புயலின் வெளியீடாகிய மின்னலில் நாம் ஆசைப்படத்தக்க காரியம் உண்டா இல்லையா?.

ஓசோன் இல்லையேல் பூமியல் உயிரினம் இல்லை எனக் கூறும் விஞ்ஞானிகள், வளி மண்டலத்தில் ஓசோன் உற்பத்தியான பிறகே உயிரினம் தோன்றியது என அறுதியிட்டுக் கூறுகிறார்கள். உயிரினத் தோற்றுவாயில் ஓசோனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டெனில் அந்த ஓசோனையே உருவாக்கும் மின்னல் உயிரினத் தோற்றுவாயின் மிக முக்கிய பங்காளியல்லவா? உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் நீருடன் மின்னலையும் இணைத்துக் கூறப்பட்ட திருமறை வசனத்தை மெய்யான இறைவேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா?

உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளும், இத்தூய திருமறையை மானிட சக்திக்கு அப்பாற்பட்ட இறைவேதம் என நிரூபிக்கும் பொருட்டு அரங்கேறியிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவை வேறு தலைப்புகளில்.

அன்பார்ந்த நண்பர்களே! பூலோக வாசிகளாகிய நமக்கு ஆகாயம் ஒரு கூரையாகவும், அந்தக் கூரை பாதுகாக்கப்பட்ட பொருளாகவும் இருக்கிறது எனக் கருத்துணர்ந்த திருமறை வசனத்திற்குரிய அறிவியல் ஆதாரங்களாக நாம் இதுவரை பரிமாறிக்கொண்ட விஷயங்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நவீன வானியல் விஞ்ஞானத்தில் கரை கண்ட ஒருவராலன்றி, ஆகாயம் பாதுகாக்கப்பட்ட கூரையாக இருக்கிறது எனக் கூறியிருக்க முடியுமா? நிச்சயமாக- மிக- மிக நிச்சயமாக- முடியவே முடியாது என்பதுதான் நேர்மைத் திறனுடன் பதில் தரும் ஒருவரது கூற்றாக இருக்க முடியும். அப்படியானால் இன்றிலிருந்து 1400 வருடங்களுக்கு முன் அப்படிப்பட்ட ஓர் அதிசய மனிதர்(?) இப்பூமியில் எங்கேனும் தோன்றியிருக்க இயலும் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

குறைந்த பட்சம் செயற்கைத் துணைக் கோள்கள் இல்லாத காலத்தில் ஒருவர் இதைக் கூற வேண்டுமானால் அவர் இறக்கைகளுடன் பிறந்தவராக இருக்க வேண்டும். கிட்டப் பார்வைகளையும், தூரப்பார்வைகளையும் சரி, தூரப்பார்வைகளாக மாற்றும் கண் கண்ணாடிகளைக் கூடக் கண்டறியாத காலத்தில் இதை ஒருவர் கூற வேண்டுமானால் அவருடைய கண்களில் போலே மீட்டர்கள் (Bolometers) பிரிலியோ மீட்டர்கள் (Pyrheliometers) எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscopes) ரேடியோ தொலை நோக்கிகள் (Radio Telescopes) போன்ற நவீன கருவிகளெல்லாம் முளைத்திருக்க வேண்டும். இப்படிக் கூடவா ஒரு மனிதர் இருந்திருக்க வேண்டும்?

நிச்சயமாக அப்படியெல்லாம் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது நமது பதிலாக இருக்கும்போது குறைந்தபட்சம் இப்படிப்பட்ட ஒரு மனிதரால் மட்டுமே 1400 வருடங்களுக்கு முன்னால் கூற முடியக் கூடிய நவீன உலகின் அறிவியல் கண்டு பிடிப்புகளெல்லாம் - சத்தியத் திருமறையாம் அல்-குர்ஆனில் எப்படி இடம் பெற்றன?

நாம் சிந்திக்க வேண்டாமா?

காரண காரியங்களோடு நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் நமது சிந்தனை களஞ்சியங்களில் இப்பேரண்டம் ஒரு குருட்டாம்போக்கு செயல் இல்லை: மாறாக இது ஒரு பரிபூரணமான திட்டமிட்ட பணியின் (An absolute frame work) உருவம் என்பதை ஐயத்துக்கிடமின்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திட்டமிட்ட பணியின் திட்டங்களை வகுத்தளித்தவன் ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய திட்டமே பணிகளை நடத்துகிறது: அப்படிப்பட்டவன் யாரோ அவனிடமிருந்தே இச்சத்தியத் திருமறை வழங்கப்பட்டுள்ளதால் அது காலங்கடந்த காரியங்களையும் தன்னுள் கொண்டிலங்குகிறது என நம்மால் மிக மிக எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!

எனவே இத்தூய மறைக்குப் பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் முற்றுப் புள்ளிகளை காற்புள்ளிகளாக மாற்றி மேலும் உங்களுடைய சிந்தனையைத் தொடருங்கள்! உண்மை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்கும் பண்புடையவர்களல்லவா நீங்கள்!.

Monday, August 03, 2009

ஓரினச்சேர்க்கையும்-இஸ்லாமும்!

ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி, இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு காரணம், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறும் 377 வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்ததுதான். இந்த சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டதும், அதையொட்டி மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி இந்த சட்டப்பிரிவை நீக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதும் நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரிவு சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள நிலையில், இந்த ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத் அலைஹிஸ்ஸலாம் எனும் நபியை அனுப்பி வைத்தான்.

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?" [7:80]

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்." [7:81 ]
இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.

وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ

நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ] அழிக்க வந்த அமரர்களையும் [வானவர்கள்] 'அனுபவிக்க' நினைத்த பாவிகள்;
ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.

وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]

قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ

அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79) قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ

அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)

மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன;

لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ

நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72) فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ

ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)

فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ

பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)

மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இந்த இழிவான ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அங்கீகாரமும் இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். அதிலும் குறிப்பாக லூத் நபியவர்களின் வழிவந்த நாம் இந்த தீமையை ஒழித்திட கடும் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்த சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். வழக்கம் போல முஸ்லீம் அமைப்புகள் ஆளுக்கொருநாள் என்று பந்தி வைத்து பரிமாறியது போல் போராட்டம் நடத்தாமல் ஒருங்கிணைந்து அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராடவேண்டும். மேலும், முஸ்லிமல்லாத மற்றும் ஒத்த கருத்துடையவர்களையும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கசெய்து இந்த இழிவான கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
முகவை எஸ்.அப்பாஸ்

Saturday, August 01, 2009

அணுகுண்டு வீச்சின் நோக்கம் ஜப்பானைப் பணிய வைப்பதல்லஅணுகுண்டு வீச்சின் நோக்கம் ஜப்பானைப் பணிய வைப்பதல்ல
1945 ஓகஸ்ட் 6ந் திகதி. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானமான இனோலா கே (Enola Gay) உலகின் முதலாவது அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது போட்டது. இக்குண்டுக்கு சின்னப் பையன் (Little Boy) எனப் பெயரிட்டிருந்தார்கள். இந்தச் சின்னப் பையன் செய்த வேலையோ மிகவும் கொடுமையானது. அழகான ஒரு நகரத்தைச் சாம்பல் மேடாக மாற்றியது. ஹிரோஷிமா மீது குண்டு போட்டு மூன்று நாட்களின் பின்- ஓகஸ்ட் 9ந் திகதி அமெரிக்கா இரண்டாவது குண்டை நாகஸாகி நகரில் போட்டது. இரண்டு குண்டு வீச்சுகளிலும் உடனடி யாக இறந்தவர்களினதும் கதிர்வீச்சுத் தாக்கத்தால் பின் னர் இறந்தவர்களினதும் மொத்த எண்ணிக்கை இரண் டரை லட்சத்துக்குக் கூடுதலா னது. உடனடியாக இறந்தவர்க ளில் பலர் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியிருந்தனர். கதிர்வீச்சுத் தாக்கத்தால் இன்று வரை பல ஜப்பானியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அணுகுண்டு வீச்சை நினைவூட்டும் பல சான்றுகள் ஹிரோஷிமாவிலுள்ள சமாதான ‘மியூஸியத்தில்’ வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கல்லொன்றில் கறுப்பு நிறத்தில் ஒரு உருவம் வரையப்பட்டிருப்பது போலக் காணப்படுகின்றது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட வேளையில் அரை மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு கல்லில் அமர்ந்திருந்த மனிதன் கருகி இறந்த நினைவுச் சின்னமே அது. அரை மைல் தூரத்துக்கு அப்பால் இருந்த மனிதன் கல்லோடு கல்லாகக் கருகிப் போனான் என்றால் குண்டு வீசப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்தவர்களின் கதியைச் சொல்லத் தேவையில்லை.

ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா ஏன் குண்டு போட்டது என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. ஜப்பானைப் பணிய வைப்பதற்காகவே அக்குண்டுகள் போடப்பட்டன என்ற அமெரிக்காவின் உத்தியோகபூர்வ காரணம் ஏற்கக் கூடியதல்ல. ஹிரோஷிமா இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தெற்கு ஜப்பானின் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவப் பிரிவின் தலைமையகம் அங்கே இருந்தது. அதே போல நாகஸாகியும் முக்கியமான நகரம். அது யுத்தோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரம். இக் காரணங்களுக்காகவே இரு நகரங்களிலும் அமெரிக்கா குண்டு போட்டது எனக் கூற முடியாது.

அமெரிக்கா குண்டு போட்ட நேரத்தில் ஜப்பான் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. பல நாடுகளில் மோசமான யுத்தக் கொடுமைகளைப் புரிந்த ஜப்பான் 1945ம் ஆண்டின் பின்னரைப் பகுதியின் ஆரம்ப காலத்தில் தோற்றுப்போன நாடு என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஜூன் மாத நடுப்பகுதியில் நடந்த ஒக்கினாவா சமரில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் வீரர்களை ஜப்பான் இழந்தது. 1945 ஜுலை 26ந் திகதி நேசநாடுகள் வெளியிட்ட ‘பொட்ஸ்டாம்’ பிரகடனத்தில் ஜப்பான் சரணடைவதற்கான நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. தோல்வியடைந்து சரணடையும் நிலையில் ஜப்பான் இருந்ததாலேயே அது சரணடைவதற்கான நிபந்தனைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டன.

ஜப்பான் நேச நாடுகளிடம் 1945 ஓகஸ்ட் 14ந் திகதி சரணடைந்தது. அதாவது ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்ட ஒன்பதாவது நாள். ஜப்பான் சரணடைவதற்கு அமெரிக்காவின் குண்டு வீச்சு காரணம் எனக் கூற முடியாது. குண்டு போடப்படாவிட்டாலும் ஜப்பான் நிச்சயமாகச் சரணடைந்திருக்கும். அந்த அளவுக்கு அது பலவீனப்பட்டிருந்தது. அந்த நாட்களில் வெள்ளை மாளிகையில் படையணித் தலைவராக இருந்த வில்லியம் லீஹி இதை உறுதிப்படுத்துகின்றார். தனது நினைவுக் குறிப்புகளில் அவர் இவ்வாற கூறியுள்ளார்.

“இந்த மோசமான ஆயுதத்தை ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் பாவித்தமை ஜப்பானுக்கு எதிரான எங்கள் யுத்தத்தில் எவ்வித பலனையும் தரக்கூடியதல்ல. ஜப்பானியர்கள் ஏற்கனவே தோல்வியடைந்து சரணடைவதற்குத் தயாராக இருந்தனர்.”

பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்த டுவைற் ஐசனோவர் இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஐரோப்பாவில் நேச நாடுகளின் தளபதியாகப் பணியாற்றியவர். அணுகுண்டை அந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தக் கூடாதென யுத்த அமைச்சர் ஹென்றி ஸ்ரிம்சனிடம் தான் ஆட்சேபனை தெரிவித்ததாக அவர் பின்னர் கூறினார்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, ஜப்பானைப் பணியவைக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் வேறு நோக்கத்துக்காகவே ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா அணுகுண்டு போட்டது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. அந்த வேறு நோக்கம் என்ன?

அமெரிக்காவின் முதலிரு அணுகுண்டுகளே ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் போடப்பட்டன. நேச நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகியவற்றின் தலைவர்கள் பங்கு பற்றிய ‘பொட்ஸ்டாம்’ மகாநாடு 1945 ஜுலை மாத பிற்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே வெற்றிகரமாக அணுகுண்டு பரீட்சிக்கப்பட்ட செய்தி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானில் குண்டு போடுவதற்கான உத்தரவை அவர் அங்கிருந்தே பிறப்பித்தார். தோற்றுப் போயிருக்கும் ஜப்பானில் குண்டு போடுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது.

ரஷ்யாவிடமும் பிரித்தியானியாவிடமும் அப்போது அணுகுண்டு இருக்கவில்லை. இவ்விரு நாடுகளிடமும் இல்லாத முக்கிய ஆயுதம் தன்னிடம் இருப்பதையும் அதனால் பேரழிவை உண்டாக்க முடியும் என்பதையும் இரண்டு நாடுகளுக்கும் நிரூபித்துக் காட்டி அவற்றை மறைமுகமாக அச்சுறுத்தும் நோக்கத்துடனேயே அமெரிக்க ஜனாதிபதி குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். யுத்தத்துக்குப் பிந்திய சமாதான காலத்தில் அமெரிக்காவிடம் வாலாட்டினால் இதுதான் நடக்கும் என்ற எச்சரிக்கை அதில் அடங்கியிருந்தது.

தோற்றுப்போய் சரணடைவதற்குத் தயாராக இருந்த ஜப்பான் மீது குண்டு போட்டு நேச நாடுகளை மறைமுகமாக அச்சுறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி மோசமான மனிதப் பேரழிவையே ஏற்படுத்தியது.

sunday thinakaran