Subscribe Us

மர்மங்களைத் துலக்கும் கறுப்புப் பெட்டி

விமான விபத்து என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது கறுப்புப் பெட்டி. ஆனால் இந்த கறுப்புப் பெட்டியை சில விமானிகள் விரும்புவதில்லையாம்.

விமான விபத்து என்று கேள்விப்பட்டவுடன் நினைவில் வரும் ஒரு சாதனத்தின் பெயரே ‘கறுப்புப் பெட்டி’. இதன் பெயரைக் கேள்விப்பட்டுள்ள போதிலும், அதனை உச்சரித்து பழக்கப்பட்டுள்ள போதிலும் அதன் இயக்கம் பற்றி, சக்தி பற்றி, அவசியம் பற்றி அறிந்துகொண்டிருக்க மாட்டோம்.
இந்த சாதனம் கறுப்புப் பெட்டி என அழைக்கப்படுவதே வேடிக்கையானது. ஏனெனில் இதன் நிறம் கறுப்பு அல்ல. எங்கு இருந்தாலும் பளிச்சென தென்படும் செம்மஞ்சள் நிறம் கொண்டதே இந்த கறுப்புப் பெட்டி.
இது மிகவும் அற்புத அபார சக்திகள் வாய்ந்த ஒரு சாதனம். விமானத்தின் சேதம் குறைந்த பின்பகுதியிலேயே இது பொருத்தப்பட்டிருக்கும். எவ்வளவு பாரிய தாக்கமொன்றுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தீயினுள் சிக்குண்டாலும் எரிந்துபோகாத தன்மை கொண்டது. கடல் நீரிலே ஒரு மாத காலம் ஊறினாலும் பாதிக்கப்படாதது. சுமார் ஆறு கிலோ மீட்டர் ஆழம் உள்ள கடலினடியில் இது மூழ்கி இருந்தாலும் நூறு நாட்கள் வரை பழுதடையாமல், துருப்பிடிக்காமல் இருக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது.
ஆகாயத்திலிருந்து எவ்வளவு பலமான வேகத்தில் இது பூமியில் வீழ்ந்தாலும் இது உடையமாட்டாது. இது எங்கு வீழ்ந்தாலும் வினாடிக்கு வினாடி தான் இருக்கும் இடத்தை எலக்ட்ரோனிக் தகவல் மூலம் காட்டிக்கொண்டே இருக்கும். சுமார் ஒரு மாதகாலம் வரை இவ்வாறு அது தகவல் வெளியிட்ட வண்ணமே இருக்கும். விமானத்தின் எடை வேகம் என்பவற்றுக்கேற்ப மோதலின்போது சிதைவடையா வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சக்திவாய்ந்த கறுப்புப் பெட்டி உருவான இதிகாசமே அலாதியானது. இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் 1903ம் ஆண்டிலே றைட் சகோதரர்களின் முயற்சியால் உருவான முதல் விமானம் பறக்கத் தொடங்கிய ஆண்டாகப் பதிவாகியது. இந்தக் கறுப்புப் பெட்டியின் கால் கோளும் அன்றிலிருந்தே ஆரம்பமாயிற்று. அதனையும் றைட் சகோதரர்களே சாதித்தனர். விமானம் தொடர்பான தகவல்களைக் கண்டறிவதற்காக ஒரு மணிக்கூடு. ஒரு காற்றின் திசையறி கருவி, ஒரு வேகமானி, விமானத்தின் இயந்திர சுழற்சியைப் பதியும் கருவி என்பவற்றைத் தனித்தனியாக பாவித்து தகவல் சேர்க்கும் முறையொன்றினை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து 1927ம் ஆண்டு சார்லிஸ் வின்ட்பேக் என்பவர் இக் கருவிகளனைத்தையும் ஒன்று சேர்த்து இதனை மேலும் ஒரு படி முன்னேற்றி செயல்பட வைத்தார். 1954ம் ஆண்டிலே அவுஸ்திரேலிய விமான ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் வரான் என்பவர் விமானிகளின் பேச்சு ஒலிகளைப் பதியும் முறையை இதில் இணைத்தார். ஆனால் ஆராய்ச்சிக் கழகம் அதற்கு எதிராக கலகம் செய்தது. வரான் இதனை விட்டுக்கொடுக்க வில்லை. இந்தப் பதிவு இயந்திரம் விமானத்தில் இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி புரிய வைத்தார். பல நாடுகள் அவருக்கு பக்க பலமாகின. முயற்சி வெற்றி யளித்தது. இந்த சாதனத்தில் மற்றுமொரு முன்னேற்றம் 1955 ல் நிகழ்ந்தது. வில்லியம் பெனி, ஜிம் கீல்ஸ் ஆகிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக உருவான தொழில் நுட்ப சேர்வைகளோடு இணைந்த தற்போதைய கறுப்புப் பெட்டி தயாராக ஆரம்பித்தது. இதற்கென ஒரு விதிமுறை வரையறை என்பன கூட சட்டமாக்கப்பட்டன.



இதன் பிரகாரம் 1000 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் 30 நிமிடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் தன்மை, 20,000 அடி ஆழத்திலும் அமுக்க எதிர்ப்புச் சக்தி நிலவல், 3400 தடவைக்கு மேலான புவியீர்ப்பு எதிர்ப்புத் திறன், 30 நாட்களுக்கும் மேல் கடற்பரப்பில் மிதக்கும் விதத்திலான அமைப்பு என்பன போன்ற சக்தி கொண்ட கறுப்புப் பெட்டிகளே சட்ட ரீதியாக செல்லுபடியானவை என ஏற்று அங்கீகரிக்கப்படுகின்றன. இத்தகைய அங்கீகாரத்துக்குள்ளான கறுப்புப் பெட்டிகளே விமானங்களில் பொருத்தப்படுகின்றன.
1960ம் ஆண்டு முதல் ஆகாய விமானங்களில் இரு முக்கிய சாதனங்கள் இணைக்கப்படவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அவற்றுள் ஒன்று ‘ப்ளைட் டாட்டா ரெகோடர் மற்றையது கொக்பிட் வொய்ஸ் ரெகோடர் என்பதாகும். இவை குறியீட்டுப் பெயர்களால் முறையே பி.ளி.ஞி என்றும் வி.V. ஞி என்றும் அழைக்கப் படுகின்றன.
இந்த இரண்டு சாதனங்களும் இரு வகையான பணி களை மேற்கொள் கின்றன. பி.ளி.ஞி விமான த்தின் தொழில் நுட்ப தகவல்களை சேகரிக்கும் சாதனம். இது விமா னத்தின் வேகம் பறக்கும் உயரம், திசை, நாடு போன்ற பல்வேறு தகவல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கும். அதே சம காலத்தில் வி.V. ஞி என்றழைக்கப்படும் சாதனம் விமான மோட்டியின் அறையில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் ஓசைகளைப் பதிவு செய்த வண்ணம் இருக்கும். இந்த இரண்டு பதிவுக் கருவிகளும் விமானத்தில் வேவு பார்க்கும் ஒற்றர்களைப் போல் செயல்படும் அதி முக்கியமான இரு சாதனங்களாகும். இவற்றைத் தன்னுள் அடக்கி பாதுகாக்கும் சாதனமே கறுப்புப் பெட்டி.
ஒரு விமானம் எவ்வளவு கொடூரமான ஆபத்தை எதிர்கொண்டாலும் எந்த அதிர்ச்சியையும் தாங்க வல்லதான சக்தி வாய்ந்த இப் பதிவுக் கருவிகள் மூலம் விபத்துக்கான காரணத்தை தெளிவாக அறிய முடியும். உடைந்துபோகாத வலிமை மிக்க உருக்கினாலான சுமார் 6000 அடி நீளமான நாடாவொன்றிலேயே இது பதிவாகிறது.இதில் 25 மணிநேர நிகழ்வுகளைப் பதிவு செய்யக்கூடிய வசதி உண்டு. இருந்தபோதிலும் பதிவுக் கருவிகளில் காணப்படும் ஒரு விசேட தன்மை இறுதி அரை மணிநேர பதிவுகளையே நிலைக்கச் செய்கிறது.
விமானத்தின் இயக்கம் ஆரம்பித்த வினாடி முதல் அதன் இயக்கம் நிறுத்தப்படும் வினாடி வரை பதிவுகள் இடம்பெற்றாலும் அவை சுயமாகவே அழிந்து, அழிந்து இறுதி 30 நிமிட நேர பதிவுகளே நாடாவில் எஞ்சும். இது அந்த விமானத்தின் கடைசி 30 நிமிட செயற்பாடுகளை, கோளாறுகளை, காரணங்களை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும். விபத்து ஒன்று ஏற்பட்டு இயந்திரத்தின் இயக்கம் தடைப்படும் பட்சத்தில் இறுதி 30 நிமிட நேரப் பதிவுகளால் விபத்தின் காரணம் தெளிவாகும்.
அதி நவீன அற்புத கண்டு பிடிப்புகளாக விளங்கும் பி.ளி. ஞி மற்றும் வி.V. ஞி எனும் சாதனங்களை உள்ளடக்கிய துருப்பிடிக்காத இரும்பினாலான மிக வலிமைமிக்க பாதுகாப்பு கவசம் தான் கறுப்புப் பெட்டி எனப்படுகிறது. விமானத்தின் தரவுகளை, தகவல்களை, அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு தனக்கே உரிய இலட்சனங்கள் பலவற்றைக் கொண்டுள்ள கறுப்புப் பெட்டி மனித சக்தியின் மேன்மைக்கு, விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு.
ஆனால் கறுப்புப் பெட்டிக்கு இன்றும் எதிர்ப்பு இருக்கிறது என்றால் ஆச்சரியம் அல்லவா? அதுவும் விமானிகளிட மிருந்தே -ஜி கிளம்புகிறது என்றால் அதுவும் வியப் பல்லவா? ஆம். தமக்கு வேண்டியவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களும், விமானப் பணிப்பெண்களுடனான கொஞ்சல்களும் கூட இதில் பதிவாகிறதே என்ற ஒரு நினைப்பு தான்.
எனினும் கருப்புப் பெட்டியைக் கழற்றிவிட யாரும் தயாரில்லை. ஏனெனில் விபத்தை அனுமானிக்க இது ஒன்று தான் கை கொடுக்கிறது.
thinakaran

0 Comments:

Post a Comment