Subscribe Us

வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9 இன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.
அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால் தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசொப்ட் எதிர்பார்க்கிறது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மைக்ரோசொப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.
இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most Popular Sites என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணையத்தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.
அதேபோல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.
இவை மற்றவர்களுக்கு மைக்ரோசொப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காக் காத்திருப்போம்.
மீண்டும் ஆக்கிரமிக்கும் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்'
பிரபல கணனி இயங்குதளமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்' உலகளாவிய ரீதியில் அதிகமாக உபயோகிக்கப்படும் கணனி இயங்குதளமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி மற்றைய முன்னணி இயங்குதளங்களான 'மொஸிலா பயர் பொக்ஸ்' மற்றும் 'கூகுள் குரோம்' ஆகியவற்றை 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்' பின்தள்ளியுள்ளது.
மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8' தொகுப்பு விளங்குகின்றது.
புதிய இணைய அறிக்கைகளின் படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்' இன் இயங்குதள சந்தைப்பங்கு ஜூலை மாதமளவில் 0.42% வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி இயங்குதள சந்தையில் அதன் மொத்த பங்கு 60.74% வீதமாகவுள்ளது.
அதற்கு அடுத்த இடங்களிலுள்ள 'பயர்பொக்ஸ்' மற்றும் 'கூகுள் குரோம்' இயங்குதளங்களின் சந்தைப்பங்குகள் முறையே 0.9% மற்றும் 0.08% வீதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில் அப்பிளின் 'சபாரி' இயங்குதளத்தின் சந்தைப்பங்கு 0.24% வீதத்தினால் அதிகரித்துள்ளது.
அனைவரும் எதிர்பார்க்காதவகையில் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' இயங்குதளத்தின் உலகளாவிய பாவனை 0.98% வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு இதன் மொத்த உலகளாவிய பாவனை வீதம் 30% உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் நினைப்பதை முடிக்கும் கணனி
இணையத்தில் தேட வேண்டுமா, உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்aர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணனிகள்.
கணனி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மெளஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும்; எங்கள் கணனி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணனியை யன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரை படக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியியலாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின்படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.
கூகிள்ளின் ஆதிக்கம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஒன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில் Iup அறிக்கை தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சந்தையானது குறிப்பாக ஒன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன் லைன் கேமினை (Online Games)  முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,
01. சிறந்த ஒன் லைன் கேமினை (Online Games)  இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.
02. இந்த Games  களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.
03. இந்த Games  தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லாமை.
04. மிaசீலீ வடிவமைப்பாளர்கள், அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லாமை.
இதுபோன்ற பல காரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஒன்லைன் கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.
ஸ்டிக்கர் வடிவில் கீபோர்ட்
உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும். நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம். என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிaர்களா?
ஆம், கைடயக்க... இல்லையில்லை, உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில் "ஸ்டிக்கர்" வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, "ஸ்கின்புட்" என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு லெப்-டொப், கம்ப்யூட்டர், மொபைல், ஐபொட் ஆகியவற்றை இயக்க முடியும்.
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும். முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, "சிப்பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும், என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

1 comment:

  1. preview Platform Use பண்ணேன் பாஸ் ஒன்னும் புதுசா தெரியல
    பாக்கலாம்

    ReplyDelete