Subscribe Us

புஷ் மீது ஷ¥க்களை வீசியவர் சுவிசில் அடைக்கலம் கேட்கிறார்

ஈராக் நாட்டு நிருபர் முண்டாசர் அல் சேய்தி. இவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தன் பதவிக்காலத்தின் கடைசிக்காலத்தில் ஈராக் நாட்டுக்குசென்று இருந்த போது, அவர் மீது ஷ¥க்களை வீசினார். இதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் சமீபத்தில் தான் விடுதலை ஆனார்.
அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று விரும்புகிறார்.
அவர் ஒரு டி.வி.சனலுக்கு அளித்த பேட்டியில் கூறி யிருப்பதாவது,
சுவிட்சர்லாந்து நாடு நடுநிலையான நாடு. அது ஈராக்கை ஆக்கிரமித்ததை ஆதரிக்கவில்லை. 2003ம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமி ப்பை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது போர் குற்றங்களுக்காக வழக்கு தொடர்வேன். ஆக்கிரமி ப்பை ஆதரித்த அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு தொடர்வேன்.
ஷ¥ வீசியதற்காக என்னை சிறையில் அடைத்த போது, அதிகாரிகள் சிறையில் என்னை கொடுமைப் படுத்தினார்கள்.
இவ்வாறு முண்டாசர் அல் சேய்தி தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment