Subscribe Us

அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரிட தலீபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது

அமெரிக்க தலைமைத் தளபதி
வாஷிங்டன், செப். 23-
அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரிடுவதற்கு தலீ பான்களுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உதவி செய்து வருகிறது என்று அமெரிக்க இராணுவத் தலைமை தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ்டைல் குற்றஞ் சாட்டினார்.
ஆய்வு அறிக்கை
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதியில் போர் நிலைமை குறித்து ஆய்வு நடத்தி தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ் டைல் வெள்ளை மாளிகைக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.
தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவன மான ஐ.எஸ்.ஐ. வெளிப்படையாகவும் தெள்ளத் தெளிவா கவும் உதவி அளித்து வருகிறது. குவாட்ஸ்போர்சஸ் என்ற ஈரானிய உளவு நிறுவனமும் தலீபான்களுக்கு உதவி அளி த்து வருகிறது.
போர்க்களத்தில் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரி ட்டு வருபவர்கள் ஆப்கானிஸ்தானியர் தான். அவர்களை பாகி ஸ்தானில் உள்ள மூத்த ஆப்கானிஸ்தான் தலைவர்களால் வழிநடத்துகிறார்கள். பாகிஸ்தானில் இருந்தபடி அவர்கள் தலீபான் அமைப்பில் சேர்க்கப்படும் புதியவர்களுக்கு ஆயுதங்களை அனுப்பி வைப்பதிலும் பாகிஸ்தானில் உள்ள மூத்த தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள தலீபான் மூத்த தலைவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள். ஈரான் உளவுத்துறை அதிகாரிகளும் உதவி செய்து வருகிறார்கள்.

0 Comments:

Post a Comment