* ஹொண்டுராஸ் தளத்தை மூடுமாறு கியூபா கோரிக்கை
* ரஷ்யாவிடமிருந்து யுத்த தாங்கிகளை வாங்க வெனிசூலா திட்டம்
* அமெரிக்காவின் செல்வாக்கு ஓங்குவதைத் தடுக்க முயற்சி
* பராக் ஒபாமாவின் கொள்கைகளில் சில நாடுகள் சந்தேகம்
* வீணான பதற்றத்தை தோற்றுவிப்பதாக சாவெஸ் குற்றச்சாட்டு
கரகாஸ், ஆக. 17 ராய்ட்டர்
லத்தீன் மெரிக்கா மீதான பராக் ஒபா மாவின் கொள்கைகளால் அமெரிக்க ஜனாதி பதியின் செல்வாக்கு சரிந்து விட்டதாக வெனி சூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் தெரிவித்தார். வாராந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சாவெஸ் அமெ ரிக்காவையும் அதன் தோழமை நாடுகளை யும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்திலி ருந்து வெளியேறுமாறும் கோரிக்கை விடுத்தார்.
கொலம்பியாவின் இராணுவத் தளங்க ளைப் பாவிக்க அமெரிக்கா ஆயத்தமா கின்ற வேளையில் சாவெஸ் இவ்வாறான கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
வெனிசூலாவின் எண்ணெய் வளத்தில் குறியாயுள்ள அமெரிக்கா கொலம்பியா வின் இராணுவத் தளங்களைப் பாவிக்க வும் ஹொண்டுராஸில் புரட்சியை உண்டு பண்ணி கைப்பொம்மை அரசாங்கமொன்றை நிறுவவும் எண்ணியுள்ளமை வெளிச்சத்து க்கு வந்து விட்டதாகவும் வெனிசூலா ஜனா திபதி சாவெஸ் குற்றம் சாட்டினார்.
கடந்த வாரம் ஹொண்டுராஸ் குறித்துக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி பராக் ஒபாமா ஹொண்டுராஸில் அமைதியை நிலைநாட் டும்படி தென் அமெரிக்க நாடுகள் எங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால் இதை இரண்டு வழிகளில் செய்ய முடியாது.
அமைதியைக் கொண்டு வரும் நிலைமை அமெரிக்காவிடம் இல்லை என்று கூறி லத்தீன் அமெரிக்க நாடுகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தார். இதற்குப் பதிலடி வழங்கும் வகையி லேயே சாவெஸின் கருத்துக்கள் அமைந் தன. ஹொண்டுராஸ் விடயத்தில் தலையி டாமல் அதனைச் சுதந்திரமாகச் செயற்பட விட்டாலே போதுமென்றும் சாவெஸ் குறிப்பிட்டார்.
கொலம்பியாவின் இராணு வத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டமையும், ஹொண்டு ராஸ் புரட்சியும் தென் அமெரிக்க நாடுகளை உசுப்பி விட்டுள்ளன. அமெரிக்காவின் இச் செயற்பாடுகள் லத்தீன் அமெரிக்க பிராந்திய த்தில் காலூண்டுவதற்கான நடவடிக்கைகள் என அந்நாடுகள் கருதுகின்றன.
ஹொண்டுராஸில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை மூடிவிடுமாறு கியூபா கேட்டுள்ளதும் ரஷ்யாவிடமிருந்து யுத்த டாங்கிகளைக் கொள்வனவு செய்ய வெனிசூலா திட்டமிட்டுள்ளமையும் தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் விழிப்படைந்துள்ள தைக் காட்டுகின்றன. தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வளர்ப்பதில் அமெரிக்கா அக்கறையுடன் செயற்படுவ தாக பராக் ஒபாமா கூறியுள்ளார்.

..தினகரன்
0 Comments:
Post a Comment