Friday, March 26, 2010

முஸ்லிமாக மாறிய பெண் கைது

புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.

சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.

மூன்று மாத விடுமுறையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றிருந்த சாரா மாலினி அங்கிருந்து இந்த நூல்களில் சிலவற்றை வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை மூலமாக அனுப்புவதற்கு சென்றிருந்தபோது, அங்கு கடமையிலிருந்த பௌத்த தேசிய வாதக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்நூலைப் பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சாரா மாலினி கைது செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றின் பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான செயல்களில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

80களின் நடுப்பகுதியிலிருந்து வளைகுடா நாட்டில் சாரா மாலினி பெரேரா வசித்து வருவதாகவும் 1999ம் ஆண்டில் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூடவே இஸ்லாத்துக்கு மதம் மாறியுள்ளதாகவும் கல்ஃப் டெய்லி செய்தி கூறுகின்றது.

பெளத்த தேசியவாதம் தற்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில், பெளத்தவாதக்கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக் குழுவாக விளங்கும் முஸ்லிம்கள், அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.

ஆனால் அங்கு புத்த மதத்தவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Reactions:

11 comments:

 1. இஸ்லாம் தீவிரவாதத்தை பெருக்குகிறது என்ற உண்மையை உலகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை தான் மும்பை தாக்குதலும், இரட்டை கோபுர தாக்குதலும் முன் வகைக்கின்றன.

  உலகம் இஸ்லாமிய மக்களை மதிக்க மறந்து பயம் கொள்ள தொடங்கிருக்கிறது. இனி வரும்காலத்தில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தீவிரவாதிகவே பார்க்ப்படுவான். அவனை உலகம் புறக்கனிக்கும்.

  ReplyDelete
 2. இந்தக் கொடூரத்தில் இருந்து இஸ்லாமிய மக்கள் காத்துநிற்க அல்லாவின் பெயரில் நபிகள் கூறிய மக்களின் நல்வாழ்விற்காக அமைதியை விரும்ப வேண்டும். ஏ.கே 47 உலக நாடுகளில் இஸ்லாத்தை பரப்பலாம். ஆனால் அது நிலையாக இருக்க வாய்பில்லாமல் போய்விடும்.

  ReplyDelete
 3. //இஸ்லாம் தீவிரவாதத்தை பெருக்குகிறது என்ற உண்மையை உலகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை தான் மும்பை தாக்குதலும், இரட்டை கோபுர தாக்குதலும் முன் வகைக்கின்றன.//

  சகோதரன் அவர்களே! இது தங்கள் போன்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம் இல்லாதவர்களால் பரப்பப்படும் மாயை. நீங்கள் சொன்ன அந்த இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின் தான் அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  //உலகம் இஸ்லாமிய மக்களை மதிக்க மறந்து பயம் கொள்ள தொடங்கிருக்கிறது.//
  ஒரு சிறு திருத்தம். இஸ்லாமிய மக்களை மதிக்க மறந்து பயம் கொள்ள தொடங்கிருப்பது உலகம் அல்ல, உலக மக்கள் உண்மை இஸ்லாத்தைத் தெரிந்துக்கொண்டு அதன்பால் ஈர்க்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத தங்கள் போன்றவர்கள்தான்.

  //வரும்காலத்தில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தீவிரவாதிகவே பார்க்ப்படுவான். //
  இருக்கலாம், ஆனால் அதற்க்கு காரணம் தங்கள் போன்றவர்களின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும்.

  //ஏ.கே 47 உலக நாடுகளில் இஸ்லாத்தை பரப்பலாம்.//
  டாக்டர். பெரியார்தாசன் அவர்கள் எந்த ஆயுதத்தால் இஸ்லாத்தை ஏற்றார்?
  நீங்கள் இஸ்லாத்தை நோக்கி விடும் ஒவ்வொரு கத்தியும் உங்களுக்கு எதிராகவே திசைதிரும்பும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

  ReplyDelete
 4. யார் இந்த சகோதரன் ?தன் சொந்த பெயரில் எழுத தைரியம் இல்லை .இஸ்லாத்தை பற்றி எதாவது குற்றம் சாட்ட வேண்டும் ,என்ற எண்ணத்தோடு எதையாவது கிறுக்குவது ,தன்னை ஊர் அறிந்த கிருகனாக காட்டிகொல்வதற்கு சமம் . மக்கள் தெழிவாக உள்ளார்கள் .ஏன் முஸ்லிம்கள் கூட உம்மை போன்ற கிருமினல் இருப்பதை நன்கு அறிந்து நன்கு தெழிவாக உள்ளார்கள்

  ReplyDelete
 5. இஸ்லாத்தை பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி எல்லாம் தப்பான பதில்களை தருவார்கள் அதுலயும் இந்தியாவை பொருத்தவரை முஸ்லிம்களை தீவிரவாதிகலகத்தானே எல்லோரும் பார்க்கிறார்கள் இஸ்லாத்தை கண்டு பயப்புடும் ஒவ்வொருவனும் இப்படியான புரளியை கிளப்பிக்கொண்டுதான் இருப்பான் உலகை ஒருகாலத்தில் இஸ்லாம்தான் ஆளும்

  ReplyDelete
 6. சகோதரன்//இந்து வெறி பிடித்தவன் வேறு எப்படி எழுதுவான் அவன் வளர்ந்த விதம் அப்படி இருக்கும்

  ReplyDelete
 7. http://www.youtube.com/watch?v=jdbn5IjUXMM&feature=related சகோதரன்//இந்து வெறி பிடித்தவன் இவனை போன்றவர்கள் இந்த வீடியோவை பாருங்கள் ,இதில் யார் மனிதமிருகம் என்று தெரியும் .

  ReplyDelete
 8. கருத்துரையிட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி, சகோதரர் மகாராஜா அவர்களின் பின்னுட்டத்தில் இந்து என்ற சொல்லை நீக்கியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 9. இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வெளியில் இருபவர்கள் குறை சொல்லி கொண்டுதான் இருப்பார்கள் அவர்கள் இஸ்லாத்தின் உள் வந்து ஆய்வு செய்து பார்த்தல் கண்டிப்பாக அவர்களும் இஸ்லாத்தை ஏற்று கொள்வார்கள் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறியது ஓர் உதாரணம்.

  ReplyDelete
 10. சகோதரன்/.அன்பு சகோதரா! விஷயம் தெரிமல் பேசாதே ஜாக்கிரதை ......

  ReplyDelete
 11. அன்பின் சகோதரர்களுக்கு

  உலகில் முஸ்லிம்கள்தான் தீவிரவாதிகள் என்றால்
  ஜப்பானுக்கு அணுகுண்டு போட்டவர்கள்.....
  ஹிட்லர்......
  மெஸோலினி..............
  போர்த்துக்கேயர்......
  ஓல்லாந்தர்........
  ஆங்கிலேயர்.....
  காந்தியைக் கொன்றவர்கள் .....
  ரஜிவ் காந்தியைக் கொன்றவர்கள்........

  இவர்கள் அனைவரும் முஸ்லிம்களா ??????
  சிந்தித்துப் பாருங்கள் ....

  ReplyDelete