Subscribe Us

புதிய மூலகம்

ஆவர்த்தன அட்டவணையில் மீண்டும் ஒரு புதிய மூலகம்

ஆவர்த்தன அட்டவணையில் 112 வது மூலகமாக கொப்பர்நிசியம் (copernicium) என்ற இரசாயனப் பெயருடைய, Cp என்ற இரசாயனக் குறியீட்டைக் கொண்ட மூலகம் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.277 அணுத்திணிவு எண்ணைக் கொண்ட இம்மூலகம் 112 அணு எண்ணைக் கொண்டது ஆகும்.நாக (Zn) அயனை உச்ச வேகத்தில் ஆர்முடுக்கி ஈய (Pb)அணுவுடன் மோதவிட்டு கரு இயைபை (கலப்பை) (nuclear fusion) ஏற்படுத்தி அதன் மூலம் இந்த மூலகம் உருவாக்கப்பட்டிருகிறது.முன்னர் இதற்கு தற்காலிகப் பெயராக ununbium எனப் பெயரிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.13 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மூலகம் கண்டறியப்பட்ட போதும் தற்போதே IUPAC யால் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு குறித்த மூலகத்துக்கு, போலந்தைச் சேர்ந்த பழம்பெரும் வானியல் ஆராய்ச்சி நிபுணரும் சூரியனைக் கோள்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டுபிடித்தவருமான Nicolaus Copernicus இன் பெயரைக் கொண்டு பெயரிட்டு ஆவர்த்தன அட்டவணையில் சேர்த்துள்ளனர்.இதுவரை ஆவர்த்தன அட்டவணையில் மொத்தமாக 118 மூலகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நன்றி லாந்கசறி இணையம்

0 Comments:

Post a Comment