

மைக்கேல் ஜாக்சனின் மகன் என்று அவரைப் பற்றி கடந்த வாரம் தகவல் வெளியானது. மரபணு சோதனை மூலம் அவர் மைக்கேல் ஜாக்சனின் வாரிசாக நிரூபிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.இந்த நிலையில் உமர் பட்டி தான் மைக்கேல் ஜாக்சனின் மகன் இல்லை என்று அறிவித்துள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.அவர் கூறி இருப்பதாவது:-மைக்கேல் ஜாக்சன் என் தந்தை அல்ல. நானும் அவரும் நெருக்கமாக, ஆத்மார்த்த நட்புடன் பழகினோம். அவர் எனக்கு ஒரு நண்பராக இருந்தார்.மைக்கேல் ஜாக்சன் அடிக்கடி என்னை பார்த்து மகன் போல நினைக்கிறேன் என்று சொல்வார். அது எனக்கு கிடைத்த பெருமை. ஆனால் தேவை இல்லாமல் நான் மைக்கேல் ஜாக்சனின் மகன் என்று வதந்தியை பரப்பிவிட்டனர்.உண்மையான என் பெற்றோர் நார்வே நாட்டில் இருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பன் என்ற முறையில்தான் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் நான் முதல் வரிசையில் இருந்தேன். அதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.இவ்வாறு உமர்பட்டி கூறினார்.
0 Comments:
Post a Comment