ஹேமந்த் கார்கரையைக் கொலை செய்தது யார்?
26.11.2008 இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள்தாம் என்பதை நிரூபிக்க எத்தனையோ முனைகளில் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நாளுக்கொரு புதிய முகம், மும்பைத் தாக்குதல்களோடு அறிமுகப் படுத்தப்படுகின்றன.
உண்மையைக் கூறுபவர்களை அமுக்க அல்லது அழிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் மராட்டிய காவல்துறை உயர் அதிகாரி முஷ்ரிஃப் ஐ.பி.எஸ். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இவர்தான் முன்னாளில் 3000 கோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடியைக் கண்டுபிடித்தவர். பல அதிகாரிகளைத் தண்டித்தவர்.
பயங்கர பரபரப்புடன் வெளிவந்த அந்த நூல் வேகமாக விற்பனையாகியும் வருகிறது.
இந்தப் புத்தகத்தில் எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், தரப்பட்டுள்ள விளக்கங்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என்பதற்காக இந்நூலை எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி சானல்களுக்கும் அனுப்பினார்கள்.
தொலைக்காட்சி சானல்கள் சில இந்த நூலைப் படித்திருக்கின்றன. அவை உடனேயே இந்த நூலை எழுதிய முஷ்ரிஃபி ஐ.பி.எஸ். அவர்களைப் பேட்டி கண்டன.
முஷ்ரிஃப் அவர்களும் காலையிலிருந்து மாலைவரை பேட்டிகளை வழங்கினார்கள். ஒரே நாளில் பத்துத் தொலைக்காட்சி சானல்கள் அவரைப் பேட்டி கண்டன,
பல பிரபல்யமான பத்திரிக்கையாளர்களும் அவரைப் பேட்டி கண்டார்கள். அனைவரும் அடுத்தநாள், அல்லது அதற்கடுத்த நாள் பேட்டி வெளிவந்திடும் என வாக்களித்தார்கள். பல நாட்கள் கழித்தும் பேட்டி வெளிவந்திடவில்லை.
இதில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தவர்கள் ஒரு சக்தி (அவர்கள் வெளிப்படையாகவே பிராமண சக்தி எனக் குறிப்பிடுகின்றார்) பலமாகப் பின்னணியில் வேலை செய்திருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடைந்திடாமல் தடுத்து விட்டன ஊடகங்கள்.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடைந்திட ஆவன செய்து வருகின்றோம் (இன்ஷா அல்லாஹ்).
இப்போது மிகவும் சுருக்கமான சில தகவல்கலை இங்கே இடம்பெறச் செய்கின்றோம்.
முஷ்ரிஃப் கூறுகின்றார்:
1. பாகிஸ்தானிலிருந்து வந்ததாகக் கூறப்படுவது பத்து பேர் அல்ல; எட்டுபேர் தான்.
(பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா? அல்லது குஜராத்திலிருந்து வந்தார்களா என்பது அப்போதே விவாதமான ஒன்று. "அம்ரேஷ் மிஸ்ரா" என்பவரின் கூற்றுப்படி இவர்கள் யூதர்களின் மும்பைத் தலைமையகமாகிய நரிமன் ஹவுஸ்-இன் தொண்டர்கள் ஆவர்).
2. வந்த எட்டுபேரில், ஆறுபேர் (பாய் பண்டார்கார் மாச்சி, மார்கேலோபி - Bhai Bhandarkar Machi, Mar Coloby) (near Bakhwar Park) என்ற பஹ்வார் பூங்காவிற்குப் பக்கத்தில் இறங்கி விட்டார்கள். இரண்டு பேர் இப்போது சர்ச்சையாக்கப்படும் ஹோட்டல் ஒபேராய்க்குப் பக்கத்தில் - இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் - வந்து இறங்கினார்கள்.
3. பஹ்வார் பூங்காவில் இறங்கிய ஆறு பேரும் ஹோட்டல் தாஜ் மஹாலில் லியோ ஃபோல்டு ஹோட்டல், நரிமன் ஹவுஸ் ஆகியவற்றில் கபளீகரங்களைச் செய்தார்கள். ஒபேராய் ஹோட்டலுக்குச் சென்றவர்கள் அங்கேயும் ஹோட்டல் திரிடெண்ட் என்ற ஹோட்டலிலும் கபளீகரங்களைச் செய்தார்கள்.
4. (CST. CAMA Hospital) காமா மருத்துவமனையிலும் ரங்கா பவன் தெருவிலும்(Lane) ஈவிரக்கமற்ற கொலைகளைச் செய்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து (படகில் வந்த) தீவிரவாதிகளல்லர். அவர்கள் உள்நாட்டு இந்துத்துவ தீவிரவாதிகள்.
5. காமா(CAMA) மருத்துவமனையிலும் ரங்காபவன் தெருவிலும் நடந்த கொலைகளைத் திட்டமிட்டவர்கள் நுணுக்கமாகச் செயல்படுத்தியவர்கள் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்த பிராமிணர்களும் இந்தியாவின் உளவுத்துறையில்(I.B. Intelligence Bureau) உள்ள அவர்களின் ஆட்களும்தான். இதன் ஒரே நோக்கம், ஹேமந்த் கார்கரே அவர்களைக் கொலை செய்வதுதான். காரணம் ஹேமந்த் கார்கரே, இவர்கள் செய்த பல குண்டுவெடிப்புகளைக் கண்டுபிடித்தார். இந்து தீவிரவாதத்தின் முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
மும்பையின் மொத்தத் தாக்குதலையும் இவர்கள் திட்டமிட்டதிலிருந்து செயல்படுத்தியதுவரை நடந்தவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
ஹேமந்த கார்கரே இந்துத்துவ தீவிரவாதத்தின் நாடியைப் பிடித்து விட்டார். இந்துத்துவ (பிராமிண) தீவிரவாதத்தின் முக்கியப் புள்ளிகளைக் கைது செய்வதற்குச் சில மணித்துளிகளே மீதமிருந்தது. அதில் நாட்டின் மிக முக்கியமான பிராமிணத் தலைவர்கள் கைது செய்யப்படவிருந்தார்கள். இவர்கள் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் இன்னும் இதுபோன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள். இவர்களையெல்லாம் சதா சர்வகாலமும் காப்பாற்றிக் கொண்டிருப்பது நமது உளவுத்துறை(I.B).
இந்த உளவுத்துறை இவர்களைக் காப்பாற்றிடப் பல்வேறு உத்திகளை ஆலோசித்து வந்தது.
இந்நிலையில்தான் இவர்களுக்கு அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவின் வெளிநாட்டு உளவு ஸ்தாபனமான 'ரா'(Raw) என்ற அமைப்பிலிருந்தும் மும்பையை நோக்கி பாகிஸ்தானிலிருந்து சில தீவிரவாதிகள் வருவதாகத் தகவல்கள் வந்தன. இதனை இவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிடப் பயன்படுத்தினார்கள்.
தகவல் கிடைத்தவுடன் உளவுத்துறையிலுள்ள இவர்கள் மும்பை காவல்துறையையும் மேற்கு கடற்கரை கப்பல் படையையும் 'உஷார்' படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் மராட்டிய மாநிலத்திலுள்ள தங்கள் எஜமானர்களையே உஷார்படுத்தினார்கள். மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கிடும்போதே, கார்கரேயைக் கொலை செய்யும் நோக்கத்தையும் நிறைவேற்றிடத் தயாராக இருக்கும்படிக் கூறினார்கள்.
மராட்டிய மாநிலத்திலுள்ள பிராமணர்கள் ஆறு முதல் எட்டு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த இளைஞர்கள் இந்துத்துவவாதிகளின் நாக்பூர், பூனா ஆகிய இடங்களிலுள்ள இராணுவக் கல்லூரியில் தீவிரவாதப் பயிற்சி பெற்றவர்கள்.
இந்த இளைஞர்கள், இரண்டிரண்டு பேர்களான குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் என்னென்ன, செய்திட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தந்தார்கள். இவர்களுக்கு விளக்கிச் சொன்னக் குழுவில் இவர்களின் பிராமணர்கள், ஓய்வுபெற்ற (I.B) இந்திய உளவுத்துறை அதிகாரிகள், இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றார்கள்.
செயல்படும் தளங்களை ஓர் வரைப்படத்தைக் கொண்டே விளக்கிச் சொன்னார்கள். (வைகறை வெளிச்சம் இதழில் வரைப்படம் தரப்பட்டுள்ளது).
இவர்களுக்கு விளக்கப்பட்ட திட்டங்களின்படி இவர்கள் மும்பைத் தாக்குதலுக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே (இவர்கள்) தயாராக இருந்திட வேண்டும்.
படகில் வந்தவர்கள் மும்பைத் தாக்குதல்கள் தொடங்கியவுடன், இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றிட வேண்டும். தாக்குதல்களை நடத்திட தயாராக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு (இந்துத்துவ தீவிரவாதிகளுக்குக்) காமா மருத்துவமனை எஸ்.பி. அலுவலகம் என இலக்குகள் அமைத்துத் தரப்பட்டிருந்தன.
அவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட செல்ஃபோன்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். இந்த செல்ஃபோன்கள் தங்களுக்கு வரும் உத்தரவுகளைக் கேட்டிடத்தானே தவிர பேசிட அல்ல. இந்த செல்ஃபோன்களைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கு உள்ளாலே கூடப் பேசிடக் கூடாது.
இந்த செல்ஃபோன்களின் சிம்கார்டு(Sim card)கள் (மராட்டிய மாநிலம்) சந்தரா 'Santra' வில், வாங்கப்பட்டவை.
இந்த இந்துத்துவ தீவிரவாதிகள் முதலில் மும்பை ரெயில் நிலையத்தையும் பின்னர் காமா மருத்துவமனையையும் தாக்கிட வேண்டும். இந்த இரண்டு தாக்குதல்களையும் அவர்கள் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளிக்குள் நடத்திட வேண்டும்.
ரெயில் நிலையத்தைத் தாக்கிடும் குழு, தாக்குதல் முடிந்தவுடன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டடம் வழி ரங்பவன் வீதிக்கு வந்து அங்கு நடக்கும் தாக்குதலில் உதவி செய்திட வேண்டும். ரங்காபவன் வீதியில் தாக்குதல் நடத்திட ஏற்கெனவே அனுப்பப்பட்டவர்கள், தங்கள் இலக்குகளை (கொலை) செய்திட இயலவில்லை என்றால் இவர்கள் (ரெயில் நிலையத்தைத் தாக்கி விட்டுச் செல்பவர்கள்) அதனைப் பக்குவமாகச் செய்து முடித்திட வேண்டும்.
எஸ்.பி. அலுவலகம், ரங்பவன் வீதி ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்ட (இந்துத்துவ) தீவிரவாதிகள், தாங்கள் கொலை செய்திட வேண்டிய அதிகாரிகள் (ஹேமந்த் கார்கரே உட்பட அதிகாரிகள்) வந்தவுடன் தாக்குதலைத் தொடங்கிட வேண்டும். கார்கரே தங்களுக்குப் பக்கத்தில் மிகவும் நெருங்கி வந்தபின்தான் இவர்கள் அவரைக் கொலை செய்திட வேண்டும்.
தாக்குதல், அதாவது ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்திடும் பணி வெற்றிகரமாக முடிந்தவுடன் அவர்கள் சமிஞ்சைகளை அனுப்பிட வேண்டும். உடனேயே எவ்வளவு விரைவாக முடியுமோ அத்துணை விரைவாக அவர்கள் தங்களுடைய தளங்களுக்குத் திரும்பிட வேண்டும்.
உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பணி:
(I.B) உளவுத்துறை தங்களது கையிலிருக்கும் தீவிரவாதிகளில் இரண்டு பேரை கொலைகள் நடந்த இடத்திற்குக் கொண்டு சென்றிட வேண்டும். அவர்களில் ஒருவரை எதிர்த் தாக்குதலில் கொலை செய்திட வேண்டும். மற்றொருவரை உயிருடன் பிடித்ததாகக் கூறுவதற்கும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவர்களின் திட்டங்களெல்லாம் நிறைவேறின. ஆனால், கடைசியில் சில குழப்பங்கள். இஃதொன்றும் பெரிய விவகாரமல்ல. காரணம் உலகில் தீட்டப்படும் போர் திட்டங்களெல்லாம் செயல்களத்தில் சில எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்தித்திடுவதுண்டு. அதுபோலவே இங்கேயும் அது நடந்தது. செயல் களத்தில் ஆயுதத்தோடு நின்ற இந்துத்துவ தீவிரவாதிகள் பல தவறுகளைச் செய்தார்கள்.
மும்பை ரெயில் நிலையத்தைத் தாக்கிட வந்த இந்துத்துவ தீவிரவாதிகள் தங்கள் மன அரிப்பை முஸ்லிம் வெறுப்பைக் கட்டுப்படுத்திட இயலாதவர்களாக இருந்தார்கள். இதனால் அவர்கள் அங்கு தாடி வைத்திருந்தவர்களையும் புர்கா அணிந்திருந்த பெண்களையும் அவர்களின் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கொலை செய்து விட்டார்கள்.
ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் திட்டமிட்டபடி டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகப் பாதையைக் கடந்து காமா மருத்துவமனைக்குச் சென்றிட இயலவில்லை. அங்கே நின்ற காவல்துறையினரே காரணம். இதனால் அவர்கள் மஸ்ஜித்பந்தர் வழியாக வெளியே சென்றிட வேண்டியவர்களானார்கள்.
எதிர்பாராத விதமாக (I.B) உளவுத்துறை கடத்திச் சென்ற இரண்டுபேரையும் Girgam Chawpatty கர்காம் சவ்பாத்தியில் எதிர்பட்டக் காவல்துறையினர் கொலை செய்து விட்டார்கள். இதனால் (I.B) என்ற உளவுத்துறை தங்களிடமிருந்த மூன்றாவது ஒருவரைக் கொண்டு வந்து உயிருடன் பிடித்ததாகக் காட்டிட வேண்டியதாயிற்று.
இப்படிப் பல தவறுகள் நடந்திருந்தாலும் சதிகாரர்கள் திட்டமிட்டபடி ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்து விட்டார்கள்.
இத்தனையையும் சொல்லி விட்டு, முஷ்ரிஃப் அவர்கள் நமது உளவுத்துறை வெளிநாட்டுத் தீவிரவாதிகளக் காப்பாற்றிக் கிடைத்த தகவல்களை உரியவர்களுக்குச் சொல்லாததின் மூலம் அதனைத் தங்களது எஜமானர்களைக் காப்பாற்றும் முகத்துடன் கார்கரேயைக் கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்பைப் பாழ்படுத்தி விட்டார்கள் எனக் கூறுகின்றார்கள்.
இந்த நூலை ஆய்வு செய்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செய்யித் ஷஹால்தீன் அவர்களும் இதையே கூறுகின்றார்கள்.
- Source : MI November 2009.
முஷ்ரிஃப் அவர்களின் ஜிஹாத்:
அநியாயத்தையும் அநீதியையும் அவற்றைச் செய்பவன் முன்னே பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி விடுவதே மிகப் பெரிய ஜிஹாத் எனக் கூறியுள்ளார்கள் இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள்.
அதை முஷ்ரிஃப் அவர்கள் ஆணித்தரமாகச் செய்திருக்கின்றார்கள்.
முஷ்ரிஃப் அவர்கள் (I.B) Intelligence Bureau என்ற உளவுத்துறையை பகிரங்கமாகவே குற்றம் சாட்டி இருக்கின்றார்கள்.
சாதாரண கடைநிலை காவல்துறையையே "விலகி நில்" என்று சொல்லிட முடியாத ஒரு நாட்டில் இப்படியொரு குற்றச்சாட்டை அவர் அச்சடித்து வெளியிட்டிருப்பது அவரது அஞ்சா நெஞ்சை மட்டுமல்ல, அவர் திரட்டி உள்ள தகவல்கள் அனைத்தும் அழுத்தமான உண்மைகள்; ஆதாரப்பூர்வமானவை என்ற அவரது நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகின்றன.
நூலை மொத்தமாக ஆய்வு செய்பவர்கள், மொத்த மும்பைத் தாக்குதலும் ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்தவர்களின் ஏற்பாடாக ஏன் இருக்கக் கூடாது என்றே எண்ணுவார்கள்.
பல கோணங்களிலிருந்தும் நமது உளவுத்துறையின் மீது குற்றச்சாட்டுகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பிலும் நாட்டு மக்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர்கள் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திட இயலாது. உளவுத்துறையில் புகுந்திருக்கும் கறுப்பாடுகளைக் களை எடுக்க வேண்டும்.
இந்த நூலின் பின்னணியில் இன்னொரு உண்மையும் வெளிச்சத்திற்கு வருகின்றது. அது,
2008 செப்டம்பர் திங்களில் மராட்டிய மாநிலம் மாலிகோனில் குண்டு வைத்த இந்துத் தீவிரவாதிகளுக்கெதிராக 2009- ஜனவரியில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி புரோகித், சன்னியாசி பிரக்யா சிங் ஆகியோருக்கும் நாட்டில் நடந்த இதர குண்டுவெடிப்புகளுக்கும் சம்மந்தமில்லை என்றொரு வரி இணைக்கப்பட்டிருந்தது. (விபரம் வைகறை வெளிச்சம் ஜனவரி - பெப்ருவரி 2009)
இந்த வரி அவர்களை "மோக்கா" என்ற மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புச் சட்டத்திலிருந்து காப்பாற்றியது. காரணம், "மோக்கா"வில் குற்றவாளிகளை வைத்திட வேண்டும் என்றால் அவர்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களில் வழக்கு இருந்திட வேண்டும். இங்கே அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டக் குற்றப்பத்திரிக்கையே. "அவர்களுக்கும் வேறு குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பில்லை" எனக் கூறியது.
ஹேமந்த் கார்கரேக்கு வழங்கப்பட்ட கவசம்:
(2008) 26/11 என்று அழைக்கப்படும் மும்பைத் தாக்குதல்களின் போதுதான் இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்த ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொலை செய்வதற்கு அவரை அழைத்துச் சென்றபோது, அவருக்கொரு புல்லட் புரூஃப் கவசத்தைத் தந்தார்கள். இந்தக் கவசம் போலியானது என இவர்களின் ஊடகங்களே 26.11.2009ல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சிகளின்போது தெளிவுபடுத்தின.
இந்த உண்மை அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்தான் தெரியவந்துள்ளது.
இந்த உண்மை, முஷ்ரிஃப் அவர்களின் நூலின் மதிப்பையும் உண்மைத் தன்மையையும் அழுத்தமாக்கி இருக்கின்றது.
ஹேமந்த் கார்கரேயின் மனைவி கவிதா கார்கரேயின் பெரும்போர்:
ஹேமந்த் கார்கரேயின் மனைவி கவிதா கார்கரே ஒரு வீரமங்கை. அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.
இவர் தன் கணவனின் கொலைக்கு நீதிகேட்டுப் போராடி வருகின்றார்.
26.11.2009 இல் தொலைக்காட்சிக்குப் பேட்டி தந்த அவர், தனக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனது போர் தொடரும் என உறுதியாகக் கூறினார்.
முன்னர் தன் கணவர் ஹேமந்த் கார்கரேக்கு விருதுகள் வழங்கிடும் விழாக்களுக்குச் சென்ற அவர், உங்கள் கணவரைக் கொலை செய்தது யார் எனக் கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார் என்பதையே நாம் இன்னும் தெரிந்திடவில்லையே" எனக் கூறியதை நாம் வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருந்தோம்.
ஊடகங்கள் - பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு
"ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்தது யார்?" என்ற நூல் குறித்து எழுதிய முஷ்ரிஃப்-ஐ பேட்டி எடுத்தவர்கள் பயங்கர வினாக்களை எழுப்பி இருப்பார்கள்.
இந்த வினாக்கள் அந்த நூல் ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கும் கோணத்திலேயே அமைந்திருக்கும். அத்தோடு நம் நாட்டின் முக்கிய உளவுத்துறைகளாகிய ஐ.பி என்ற உள்நாட்டு உளவுத்துறை , ரா (Reasearch and Analysis Wing) ஆகியவற்றின் மீதும் பழிகளைச் சுமத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் பற்றி கர்ண கொடூரமான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள், பத்திரிக்கையாளர்கள்.
இந்தக் கேள்விப் பதிலில் முஷ்ரிஃப் ஐ.பி.எஸ். தோற்றுப் போயிருந்தால், திணறியிருந்தால் அவருடைய பேட்டி அவசியம் வெளிவந்திருக்கும். முடிந்தால் அவரை அரசிடம் சிக்க வைத்திருப்பார்கள்.
நூலாசிரியர் முஷ்ரிஃப் அவர்களின் பேச்சு அழுத்தமானதாகவும் ஆதாரங்கள் நிறைந்ததாகவும் இருந்ததால்தான் பத்திரிகைகள் அவர் பேட்டியை வெளியிடவில்லை.
அவருடைய பேட்டி வெளியே வந்திருந்தால் நாட்டின் மிகப் பெரிய விவாதமாக அதுவே ஆகியிருக்கும். நூலும் பரபரப்பாக விற்பனையாகி இருக்கும்.
இப்படி ஊடகங்கள் முழு இருட்டடிப்பைச் செய்திருப்பதால் இந்த நூலைப் பரவலாக்கிடும் பொறுப்பை வைகறை வெளிச்சம் தமிழகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆகவே நூல் வேண்டுவோர் ரூபாய் 300-ஐ அனுப்பி தாருல் இஸ்லாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். முகவரி:
Darul Islam Foundation Trust
235 Peters Road, Royapettah
Chennai 600014