Sunday, October 25, 2009

இஸ்லாத்தை ஏற்ற கிரீஸ் நாட்டு யுவதி

நான் கிரீஸிலுள்ள ஏதன்ஸ் நக ரில் பிறந்தேன். எனது பெற்றோர் கிரேக்கப் பூர்வீகத்தைக் கொண்டவர் கள். எனது தந்தையின் குடும்பம் துருக் கியில் வசித்தது. எனது தந்தை பிறந்த தும் வளர்ந்ததும் அங்கே தான். அவரின் குடும்பத்தினர் செல்வந்தர் களாகவும் கல்வி கற்ற வர்களாகவும் பாரம்பரிய கிறிஸ்தவ மதத்தைப் பின் பற்றுபவர்களாகவும் வாழ்ந்தார்கள்.
துருக்கிய அரசாங்கம் திடீரென்று அங்கு வாழ்ந்த கிரேக்கப் பூர்வீகக் குடி மக்களை வெளியேற்றியதுடன் அவர் களது சொத்துக்கள் வியாபாரம் போன் றவற்றையும் அபகரித்துக் கொண்டது. எனவே, எனது தந்தையின் குடும்பத் தினர் வெறுங்கையுடன் கிறீஸுக்குத் திரும்பினார்கள். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வெறுத்தனர்.
எனது தாயின் குடும்பம் கிரீஸுக் கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையில் அமைந் திருந்த தீவொன் றில் வாழ்ந்து வந்தது. இத்தீவையும் துருக்கியர்கள் ஆக்கிரமித்ததோடு அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகளையும் எரித்தனர். இதனால் அம்மக்கள் கிரீஸுக்குத் திரும்பினார்கள். அவர் களும் முஸ்லிம்களையும் இஸ்லாத் தையும் வெறுத்தார்கள். கிரீஸை சுமார் 400 வருடங்கள் துருக்கியர்கள் தமது பிடியில் வைத்திருந்தனர். அவர்க ளுக்கு எதிரான துருக்கியர்களின் நடவடிக்கைகளினால் இஸ்லாம் பற் றிய தவறான விளக்கங்கள் எமக்கு கற் பிக்கப்பட்டன.
உண்மையில் இது கிரீஸ் பாரம் பரிய தேவாலயத்தின் விரிந்த திட்ட மாக இருந்தது. அதன்மூலம் முஸ்லிம் களை வெறுக்கக் கூடியவர்களாகவும், தமது மார்க்கத்திலிருந்து மக்கள் இஸ் லாத்திற்கு மாறுவதை தடுக்கவும் முயற்சித் தார்கள். எனவே, பல நூற் றாண்டுகளாக எமது வரலாறு பாடத் திலும் சமய பாடத்திலும் இஸ்லாத்தை வெறுக்கவும் கேலி செய்யவுமே கற்பிக்கப் பட்டோம்.
எங்களுடைய புத்தகங்களில் இஸ் லாம் என்பது உண்மையில் ஒரு மார்க் கம் அல்ல. முஹம்மத் (ஸல்) அவர் கள் ஒரு தூதர் அல்ல. அவர் விவேக மான ஒரு தலைவராகவும் கிறிஸ்தவ யூத மதங்களிலிருந்து சட்டங்களை ஒன்றுசேர்த்த அரசியல்வாதியாகவும் அவரது சில சொந்த சிந்தனைகளாலும் இந்த உலகத்தை அடிமைப்படுத்தினார் என்றே எழுதப்பட்டிருந்தது.
பாடசாலையிலும் நாங்கள் அவரை வைத்தும் அவரது மனைவி மார்கள் நண்பர்களை வைத்தும் கேலி செய்பவர்களாக இருந்தோம். இன்று ஊடகங் களில் வெளியிடப்படுகின்ற கேலிச் சித்திரங்கள் கார்டூன்கள் என்பவையே எமது பாட அத்தியாயங் களாகவும் பரீட்சைகளாகவும் இருந் தன.
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் இஸ்லாத்தை வெறுப்பதிலிருந்தும் எனது உள்ளத்தைப் பாதுகாத்தான். முஸ்லிம்கள் அல்லாஹ் தூதர்களை அனுப்பு வதன் மூலம் அவர்களுக்கு நேர்வழிக் காட்டினான் என்பதை நம்பினார்கள். ஆதம், நூஹ், இப்றா ஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மூஸா அலைஹி முஸ்ஸலாம் போன்ற நபி மார்கள் அனுப்பப்பட்டார்கள். அவர் களில் இறுதியாக முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி னான்.
எனது பெற்றோர் இருவரும் மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்காமை எனக்கு உதவியாக அமைந்தது. அவர்கள் மிக அரிதாகவே மத வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதேபோன்று திருமணங்கள் அல்லது மரணம் போன்றவற் றிற்கு மட்டுமே தேவாலயத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள்.
எனது தந்தை கிறிஸ்தவ பாதிரிமார் கள் செய்த குற்றங்களை அறிந்தார். அவர்கள் தேவாலயத்தின் பணத்தை திருடினார்கள் அதன்மூலம் அவர்க ளுக்கென பெரிய மாளிகைகளையும் நவீன கார்களையும் வாங்கினார்கள். அத்தோடு ஓரின பாலுணர்வையும் பரப்பினார்கள். இவர்கள் எவ்வாறு ஒரு மார்க்கத்தின் சட்டங்களை மதிக் கின்ற பிரதிநிதிகளாக, எங்களுக்கு வழிகாட் டுபவர்களாக இருக்க முடியும் என்று எனது தந்தை சிந்தித்தார். அதன் விளை வாக அவர் மனமுடைந்து ஒரு நாஸ்திகராக மாறினார். கிறிஸ்தவத் தில் பாதிரியாக வருவதென்பது மிகச் சிறந்த இலாபகரமான தொழிலாகும். இதனால் அதிகமான இள வயதினர் இந்த மார்க்கத்தைவிட்டும் வெளி யேறி வேறேதேனும் மார்க்கத்தைத் தேடுகின்றார்கள்.
நான் இளவயதை சேர்ந்தவள் என்றவகையில் அதிகமாக வாசிப் பதற்கு விரும்பினேன். ஆனால், கிறிஸ் தவ சமயப் புத்தகங்களில் எனக்கு நம்பிக் கையும் திருப்தியும் ஏற்பட வில்லை. நான் இறைவன் இருக்கின் றான் என்பதை ஏற்றுக் கொண்டேன். அவனுக்கு பயந்தேன். அவன் மீது அன்பு கொண்டேன். என்றாலும் எனக்கு எல்லாம் குழப்பமாகவே இருந்தது. நான் எல்லாப்பக்கமும் தேடலானேன். ஆனால், நான் இஸ் லாத்தைப் பற்றி தேடவில்லை. எனது ஆரம்பக் காலத்திலிருந்தே அதற்கெ திராக எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தமை அதற்கு காரணமாக இருக்கலாம்.
என்றாலும் அல்ஹம்துலில்லாஹ், அருளாளனான அவன் எனது பிரச்சி னையை தீர்ப்பதற்கு வழிகாட்டி னான். இருளிலிருந்து ஒளியை நோக் கிச் செல்வதற்கும் நரகத்திலிருந்து சுவனத்திற்குச் செல்வதற்கும் அவன் வழிகாட்டினான்.
அவன் எனக்கொரு பிறப்பிலே முஸ்லிமான ஒரு கணவனை தந்தான். எங்கள் இதயங்களிலே அன்பின் விதை களை விதைத்தான். நாங்கள் எமது மத வேறுபாடுகளை கவனத்திற்கொள்ளா மலே திருமணம் செய்தோம். எனது கணவர் எனது எல்லாக் கேள்விகளுக் கும் அக்கறையுடன் பதிலளித்தார். அவர் எவ்வித தாழ்வுமனப்பான் மையும் கொள்ளவில்லை. அத்துடன் என்மீது எவ்வித அழுத்தத்தையும் பிர யோகிக்காததுடன் என்னை மதம் மாறுமாறும் கேட்கவில்லை.
நாங்கள் திருமணம் முடித்து மூன்று வருடங்களுக்குப் பின்னால் இஸ்லாத் தைப் பற்றி அதிகமாக அறிவ தற்கும் அல்குர்ஆனை வாசிப்பதற்கும் சந்தர்ப் பம் கிடைத்தது. அத்தோடு ஏனைய மத புத்தகங்களையும் வாசிப் பதற்கு சந் தர்ப்பம் கிடைத்தது.
முஸ்லிம்கள் அல்லாஹ் ஒரே இறைவன் என்பதையும் அவன் வணக்கத் திற்கு தகுதியானவன் என்பதையும் அவனுக்கு பிள்ளைகளோ அவனுக்கு இணையானவர்களோ இல்லை என்றும் நம்புகின்றனர். வணங்குவ தற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் நம்பு கின்ற னர். அவனது தெய்வீகத் தன்மை களை அவர் கள் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. அல்லாஹ் அல்குர் ஆனில் அவனைப்பற்றி அவனே பின்வ ருமாறு கூறுகின்றான்: (112: 01-4)
நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதனை எனது குடும் பத்தி னரோ நண்பர்களோ அறியாது பல வருடங்கள் பாதுகாத்துக் கொண்டேன். நான் எனது கணவருடன் இஸ் லாத்தை செயற்படுத்துவதற்கு முயற்சித் தேன். ஆனால், அது மிகவும் கஸ் டமானதாகவும் சாத்தியமற்றதாகவும் இருந் தது. எனது பிறந்த நகரில் எவ் வித மஸ்ஜித்களோ அல்லது இஸ்லா மிய கற்கைகளுக்கான வாய்ப்போ அல் லது தொழுகின்ற மனிதர்களோ அல் லது நோன்பு நோற்கின்ற மனிதர் களோ அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களோ இல்லை.
மாற்றமாக சில வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இருந்தனர். அவர் கள் மேற்கத்தேய வாழ்க்கை முறை யிலே வாழ்ந்தனர். அவர்களும் மோசடிகளில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அவர்களையோ அல்லது அவர்களது மார்க்கத் தையோ பின்பற் றுபவர்கள் எவரும் இருக்கவில்லை.
நானும் எனது கணவரும் கலண்ட ரைப் பார்த்துதொழுதோம். நோன்பு நோற் றோம். எங்களுடைய செவிக ளால் அதான் ஓசையைக் கேட்க வில்லை. இஸ்லாமிய சமூகம் எங்க ளுக்கு உதவவில்லை. அதனால், நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் எமது பழைய வாழ்க்கை நோக்கித் திரும்பிக் கொண் டிருந்தோம்.
எங்களுக்கு மகள் கிடைத்தபோது நாம் ஒரு தீர்மானத்தை எடுத்தோம். எங்களுடைய பிரச்சினைகளையும் எமது மகளின் பிரச்சினையையும் கவ னத்திற் கொண்டு நாங்கள் ஓர் இஸ்லா மிய நாட்டிற்கு இடம்பெயர்வதற்கு முடிவெடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ். அவன் எங்களுக்கு ஓர் இஸ் லாமிய நாட்டிற்கு இடம்பெயர்வதற் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந் தான். அங்குதான் நாம் இனிமையான அதானின் வாசகங்களை செவிமடுத் தோம். எமது அறிவை அதிகரித்துக் கொண்டோம். அல்லாஹ்வையும் எமது அன்பிற்குரிய தூதரையும் நேசிக் கக் கற்றுக் கொண்டோம்.
islamonline.net
தமிழில்: பௌஹானா நுஸைர்
Reactions:

0 comments:

Post a Comment