Subscribe Us

அமெரிக்கா வெளியிட்டது பின்லேடன் படம் அல்ல : ஸ்பெயின் எம்.பி.


சர்வதேச குற்றவாளியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் தற்போது எப்படி இருப்பான் என்று யூகித்து அமெரிக்க வெளியுறவு துறை ஒரு படத்தை உருவாக்கியுள்ளது. அதை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.




அதில் கடந்த 1998-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடனின் கடுமையான தாடியுடன் கூடிய படத்தையும், தற்போது புதிதாக உருவாக்கியுள்ள நரைத்ததாடியுடன் கூடிய ஒருபடத்தையும், தாடியில்லாத சற்று வயது முதிர்ந்த படமும் உள்ளது.



இந்த படம் பின்லேடனின் படம் அல்ல. அது எனது உருவபடம் என ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கஸ்பர் லா மஷர்ல் (52) என்ற எம்.பி. புகார் கூறியுள்ளார்.



பின்லேடனின் உருவம் சற்று என்னை போன்று உள்ளது. அதைபயன்படுத்தி உளவுத்துறையினர் கம்ப்யூட்டர் மூலம் வரைந்து வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.



இதற்காக அமெரிக்காவுக்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை அமெரிக்க உளவுத்துறை மறுத்துள்ளது. பின்லேடனின் வயதை கருத்தில் கொண்டு அவனது உருவத்தை மாற்றி வரையப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment