Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம்

தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள்.



இந்த ஹார்மோன்களின் பணி என்ன?



இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை உருவாக்குவதாகட்டும், வளர்சிதை மாற்றமாக இருக்கட்டும், இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரு ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது மிக மிக மிக அவசியம். இது அதிகமானாலும், குறைவானாலும் உடல் பலவிதக் கோளாறுகளுக்கு ஆளாகிவிடுகிறது.



தைராய்டு உடலின் பல பணிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், இந்தத் தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? நம் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டும் Thyroid Stimulating Hormone (TSH) என்ற திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவம் தைராய்டு சுரப்பிக்கு மட்டுமேயானது. இது தைராய்டு திரவம் உருவாவதிலும் சுரப்பதிலும் நேரடிப் பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோனின் அளவு எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவை என்பன போன்றவற்றையெல்லாம் இந்தத் திரவம் கண்காணிக்கிறது.



தைராய்டு சரியான அளவில் இருப்பதற்கு அயோடின் மிகவும் அவசியம். ஏனெனில், தைராய்டு ஹார்மோன்கள் அயோடினை அடிப்படையாகக் கொண்டவை. உடலில் அயோடின் குறையுமானால், தைராய்டு சுரப்பி ஏறுக்குமாறாகப் பணிசெய்யத் தொடங்கிவிடும். எனவே உணவில் அயோடின் தேவையான அளவு இருக்கவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள நீர் மற்றும் நிலத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒருவேளை அப்பகுதியில் அயோடினின் அளவு குறையுமானால் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.



தைராய்டுக் கோளாறுகளின் வகைகள்:



தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமையால் ஏற்படும் கோளாறுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.




ஒன்று : முன் கழுத்துக்கழலை எனப்படும் காய்டர்(Goiter). கழுத்துப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பெரிதாகி (வீங்கி) பைகள் போல் தொங்கும். தைராய்டு சுரப்பி இரண்டு முதல் பத்து மடங்கு வரை பெரிதாகக் கூடும். கழுத்துப்பகுதியில் சிறிய அளவு வீக்கம் ஏற்பட்டால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரிவரக் கவனிக்காவிடில், இது புற்றுநோய்க்கும் வழி கோலிவிடக்கூடும்.



இரண்டு: தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை. இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படலாம். மிகவும் குறைந்த தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hypothyroidism) அல்லது மிகவும் அதிகமான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hyperthyroidism)

இரண்டுமே உடலின் வளர்சிதை மாற்றத்தில் பல விதமான குளறுபடிகளை ஏற்படுத்தக் கூடியவை.இவ்வகைக்கோளாறுகளை மிக எளிமையான இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து விடமுடியும். சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் பழைய இயல்பான நிலைமைக்கு வெகு விரைவில் கொண்டுவரவும் முடியும்.



தைராய்டுக்குறைவு நோய் (Hypothyroidism)



தைராய்டுக் கோளாறுகளில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுவது இந்த Hypothyroidism என்ற கோளாறால்தான். அதிகச் சுரப்பால் பாதிக்கப் படுபவர்களை விட குறைவான சுரப்பால் பாதிக்கப் படுபவர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாவார்கள். தைராய்டு சுரப்பி T3 மற்றும் T4 எனும் இரண்டு வகை திரவங்களைச் சுரக்கிறது என்று முன்பே கண்டோம். தைராய்டு சுரப்பி இத்திரவங்களைத் தேவைக்கு மிகக் குறைவாகச் சுரக்கும்பொழுது பல விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை மருத்துவர்களையே குழப்பிவிடக்கூடியவை. தைராய்டுக்கான பரிசோதனை செய்யாதவரை, இவை வேறு பல நோய்களுக்கான அறிகுறிகளாகக் கருதப் பட்டு மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால் தைராய்டுக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா என ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுவது நன்மை பயக்கும்.



அடிக்கடி மயக்கம் அல்லது தளர்ச்சி உண்டாகுதல், கைகால்களில் தசைப்பிடிப்பு, விரல்கள் நடுங்குதல், நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் தடுமாறுதல், தசைகள் வீக்கமடைதல், திடீரென அதிக அளவு எடை கூடுதல், தோல் வறண்டு விடுதல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லை, முகம் உப்புதல், மனச்சோர்வு, தொண்டை அடைப்பு,இதயத்துடிப்பு இயல்பை விடக் குறைதல், முடி கொத்துக்கொத்தாக உதிர்தல், தொண்டை வீக்கம், மலட்டுத்தன்மை அல்லது கருச்சிதைவுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் முதலியன தைராய்டு குறைவினால் தோன்றும் சில உடல் உபாதைகள்.



தைராய்டு அதிகம் சுரத்தல் (Hyperthyroidism)



தைராய்டு சுரப்பி அதிக அளவு தூண்டப்படும்பொழுது தேவைக்கு மிக அதிகமான ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன. இது Hyperthyroidism என்று அழைக்கப் படுகிறது. இதற்கான அறிகுறிகள் உடல் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி, சிறிதளவு கூட வெப்பத்தைத் தாங்க இயலாமை, உடல் எரிச்சல், எப்பொழுது பார்த்தாலும் பசித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுதல், தூக்கமின்மை, மூச்சு விட இயலாமை, எடை கன்னாபின்னாவென்று குறைதல், பலவீனம், ஈரமான சருமம், அதிக அளவு இதயத்துடிப்பு ஆகியவை.



தைராய்டுக்கோளாறுகள் பொதுவாக யாருக்கெல்லாம் வரக்கூடும்?



யார் வேண்டுமானாலும் தைராய்டுக்கோளாறினால் பாதிக்கப் படக்கூடும் என்றாலும் கீழ்க்கண்ட பிரிவினர் அதிக எச்சரிக்கையாக இருப்பதும் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.



1. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

2. சமீபத்தில் பிரசவித்தவர்கள்

3. அதிகமான கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள்

4. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கும் இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடை இழப்பு ஏற்பட்டவர்கள்.

5. அடிக்கடி உடல் தளர்ச்சி ஏற்படுபவர்கள்

6. குழந்தையின்மை மற்றும் மாதவிடாய்க்கோளாறுகளுக்கு ஆளாகியுள்ள பெண்கள்

7. ஏற்கனவே தைராய்டுக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்



இத்தைராய்டுக்கோளாறுகள் ஏன் உருவாகின்றன? இவற்றை எதிர் கொள்வது எப்படி? இவற்றுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன என்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில்........



- ஈழநேசன்

என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?


கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.


இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.

பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.

F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.


F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.


F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.


F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.


F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.


F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள


F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.


F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-


F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.


F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.


F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.


F12
எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள்.

The Forgotten Keyboard Function Keys And Their Uses

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?



சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.


சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.



ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.



ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.



ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.



வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.



வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.



பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.



சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.



அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.



மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

- தேன்தமிழ்

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, “கரு”வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது, அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) “இயற்கையே கடவுள்” என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
“பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது” என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.
இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் “அமீபா” என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றி, அது குரங்கு நிலைக்கு வந்து, அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன) தத்துவத்தை(?) நம்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். “அமீபா”விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்து, மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று, மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும். மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே டார்வினின் “இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன” என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.
மண்ணின் “மூல”சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்
மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது, எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்: பிராணவாய்வு, கால்சியம், பொட்டாசியம், உப்பு, கார்பன், ஹைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், சோடியம், நைட்ரஜன், குளோரின், மெக்கினீசியம், இரும்பு, செம்பு போன்றவைகளாகும்.)
ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
முதல் மனிதனும், குர்ஆனும்
மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.அல் குர்ஆன் 6: 2
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.அல் குர்ஆன் 30: 20
குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது “தீன்” (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், “துராப்” (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல. சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
“தீன்” என்ற வார்த்தையும், “துராப்” என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும். மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் “தீன்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் “துராப்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்” என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாது, களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டு, உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லை, பாத்திரங்கள், செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும், அதனால் தான் களிமண்ணில் பாத்திரம், செங்கள் செய்பவர்கள், வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது. காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)
இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான “மூல” த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை. மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7
இந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.
களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்து, எந்தந்த நிலையை அடைந்து, அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.
إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன்: 37:11
இது மனித படைப்பின் இரண்டாவது நிலை
பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறிய, தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல் குர்ஆன்: 15: 26
இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.
“ஹமஉ” என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். “மஸ்னூன்” என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண், களிமண், தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறி, துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறி, துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். அல் குர்ஆன்: 55:1
இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை
“ஸல்ஸால்” என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் “ஸல், ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு “ஸல்ஸால்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த “ஸல்ஸால்” என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 23:12
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. “குன்” என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் “ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும். அல் குர்ஆன்: 36: 82
எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும், எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண், களிமண், தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கி, அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.

இணையம்: தெரிந்ததும் தெரியாததும்

உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.
ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.
பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.
பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP / IP (Transmission Control Protpcol / Internet Protocol)எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிலிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.
இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்பட்டது.
தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்தவொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடல் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.
இணையம் சார்ந்த சில கலைச் சொற்களையும் அவற்றிற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
Asymmetric Digital Subscriber Line (ADSL) : : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.
Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஒன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்றதே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை Blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன.
Download : இணைய சேவைகளில் ஒன்றான உலகளாவிய வலைத் தளமான www ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம் : இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்.
Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும்.
Domain Name : இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணைய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக்கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.
Dial-up : இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைக்கப்படும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.
E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com என்னும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குaட்டால் பிரிக்கப்படும்.
Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.
FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக்கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.
File attachment : மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.
Firewall : இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுருவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.
Hyperling : இணைய தளமொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும் இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.
HTTP (Hypertext Transfer Protocol) உலகளாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி ஷி(சிகி!ழிu.
சிஹிணிழி HTML (Hypertext Mark\up Language வலைத்தளங்களை உருவாக்கப் பயனப்டும் ஒரு கணினி மொழி.
Home Page : ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது.
Hacker : ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கைதேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்) எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.
Instant Message (IM) : இணையத்தைப் பயன்படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்த்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாணரம் : யாஹ¥ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்
Internet Service Provider (ISP) : இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே யிஷிஜி எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.
IP (Internet Protocol) address : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரணம் : 169, 254, 222.1) ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்கும்.
யிஷிளினி ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.
Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணையத்தோடு தொடர்புபட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்கள் யாரும் இந்த வலையமைப்பை அணுக முடியாது.
Modem : என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இது டிஜிட்டல் வடிவிலுள்ள டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வடிவிலும் மாற்றுகிறது-
Offline :கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது.
Online : இணையத்தில் எமது கணினி இணைந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.
Password :ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் அணுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.
Portal : மின்னஞ்சல், தேடற்பொறி, போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணையதளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹ¥
Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்துகொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.
Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகளாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், ஷாஹ¥, பிங்
Sub Domain : டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.
Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயே எமது மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.
Top-level domains : டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது.
உதாரணம் .com, .gov, .edu. Uniform Resource Locator (URL) : (ஸிஞிழி) : உலகளாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உதாணரம் Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.
World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகளாவிய வலைத்தளம்) எனப்படுகிறது- இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.
Website : HTML சிஹிணிழி எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இணையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும்.
இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும். இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.



via Thinakaran news paper

பிரிட்டிஷ் ஹோட்டலில் மத நிந்தனை: இருவருக்கு சிறை

லண்டன், டிச. 08 (ஏ.எப்.பி.)
பிரிட்டிஷ் நட்சத்திர விடுதியில் ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணை இம்சைக்குள்ளாக்கிய இருவர் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்ட இரு வரும் ஹோட்டல் உரிமையாளர்களாவர்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர்கள் முஸ்லிம் பெண்ணிடம் சென்று மதநிந்தனை செய்தனர். உனது ஆடை (ஹிஜாப்) அடக்கு முறையின் வெளிப்பாடு.
முஹம்மது நபி யுத்தப்பிரியர் என அவர்கள் கூறினர். இது குறித்து முஸ்லிம் பெண்மணி கூறியதாவது,
எனக்கு அறுபதுவயது. என்னைப் பார்த்து நீ ஒரு பயங்கரவாதியா ஒரு கொலைகாரியா எனக் கேட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்தேன் என்றார். இப் பெண் கடந்த மார்ச்சில் இஸ்லாத்தை தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

A couple have gone on trial in Britain on Tuesday accused of verbally abusing a Muslim woman for wearing the hijab while staying at their hotel.
Ericka Tazi says she was subjected to an hour-long tirade by Benjamin and Sharon Vogelenzang, who are Christians, after emerging from her room on the morning of March 20 wearing the Islamic head covering and gown.
Tazi, who converted to Islam 18 months ago, was allegedly asked by Benjamin Vogelenzang if she was a terrorist. His wife said her dress "represented oppression and bondage", Liverpool Magistrates Court was told,
"It was my outfit that had triggered him," Tazi told the court, saying the hotelier had resembled "a whirling dervish".
"He asked me if I was a murderer, if I was a terrorist. I'm a 60-year-old disabled woman, I couldn't understand where it was coming from, it was shocking to me."
Benjamin Vogelenzang, 53, also called the prophet Mohammed a "warlord" and compared him to Adolf Hitler, prosecutor Anya Horwood told the court.
Tazi denied she had had robust arguments about religion with other guests during her stay at the hotel under questioning by defence lawyer Hugh Tomlinson.
The Vogelenzangs, who run a hotel in Aintree, Liverpool, deny a charge of using religiously aggravated threatening, abusive or insulting language.
Their trial is expected to conclude on Wednesday.