கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளிடு செய்யும் டேட்டாவை ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸருக்குத் துணை நிற்கிறது.
இந்த பிட்ஸ் கொண்டே ப்ரோஸெஸ்ஸரும் கணித்தல் செயற்பாடுகளை செய்கிறது. 32 பிட்டுகளைப் பயன்படுத்தும் ப்ரோஸெஸ்ஸர் 0லிருந்து 4,294,967,295 வரையிலான வெவ்வேறு பிட் சேர்மானங்களை உருவாக்கலாம். அவ்வாறே 64 பிட் பயன்படுத்தும் போது 0 லிருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும். ஆகவே 64 பிட் கணினி மூலம் அதிக எண்ணிக்கையிலான டேட்டாவைக் கையாள முடியும் என்பது வெளிப்படை.
அத்தோடு கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன. அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது. இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் முளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேசன்களுக்கே பொருந்தும்.
பெரிய அளவிலான கணிதற் செயற்பாடுகள் நடைபெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய, பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.
மேற்சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன்பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன்பாட்டில் பயன்தரலாம்.
32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற்திறன் வாய்ந்ததால், வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை.
ஒரு 64 பிட் இயங்குதளமானது (Operating System) என்பது 64 பிட் ப்ரோஸெஸ்ஸருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இயங்கு தளமாகும். விண்டோஸ் எக்ஸ்பீ விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பதிப்புக்கள் 32 பிட் 64 பிட் இயங்கு தளங்களுக்கென வேறு வேறாக உருவாக்கப்படுள்ளன.
ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன?
பிட் (bit) என்பது binary Digit என்பதன் சுருக்கம். அடிப்படையில் இந்த பிட் ஆனது கணினி எவ்வாறு டேட்டாவை தேக்கி வைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 எனும் பெருமானங்களை எடுக்கலாம். 1 மற்றும் 1 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானத்தை (100100100111) பைனரி கோட் எனப்படுகிறது.
அத்தோடு கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன. அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது. இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் முளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேசன்களுக்கே பொருந்தும்.
பெரிய அளவிலான கணிதற் செயற்பாடுகள் நடைபெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய, பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.
மேற்சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன்பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன்பாட்டில் பயன்தரலாம்.
32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற்திறன் வாய்ந்ததால், வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை.

64 பிட் மென் பொருட்களை 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்க முடியாது. எனினும் 32 பிட் மென்பொருள்களை 64 பிட் கொண்ட ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்கலாம். திணிளி நிறுவனத்தின் 64 பிட் ப்ரொஸெஸ்ஸர்கள் 32 மற்றும் 64 பிட் இயங்கு தளங்களை ஆதரிக்கின்றன.
அத்தோடு ப்ரிண்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா என கணினியில் பொருத்தும் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்கும் 64 பிட் கொண்ட ட்ரைவர் மென்பொருள்களையே நிறுவ வேண்டியிருக்கும். இது 64 பிட் ப்ரோஸெஸ்ஸ பயன்படுத்துவதிலுள்ள பாதக நிலையாகும். எனினும் AMD நிலைமை தற்காலிகமானதே. எதிர்காலத்தில் ட்ரைவர் மென்பொருள்களும் 64 பிட்டிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும்.
அதேவேளை 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக நினைவகத்தையும் ஆதரிக்க கூடியது என்பதால் நினைவகத்தின் அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கணினியின் செயற்திறன் மேலும் அதிகரிக்கும் 64 பிட்டின் உச்ச பயனைப் பெற 4 ஜீபி அளவிலான நினைவகமும் அவசியமாகும்.
உங்கள் கணினி 32 பிட் ப்ரோஸெஸ்ஸரா அல்லது 64 பிட் ப்ரோஸெஸ்ஸரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டொஸ் எக்ஸ்பீயில் Start a all Programs -> Accessories -> System tools °¼¡¸ System Information தெரிவு செய்யுங்கள் அப்போது தோன்றும் சிறிய விண்டோவில் Processor எனுமிடத்தில் கீ86 என இருப்பின் அது 32 பிட் ப்ரோஸெஸர் என உறுதி செய்து கொள்ளலாம்.
ia64 or AMD64 என இருப்பின் அது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆகும். அதேபோல் OS Name எனுமிடத்தில் Microsoft Windows XP Professional x64 Edition என இருப்பின் அது 64 பிட் ப்ரொஸெஸ்ஸரை ஆதரிக்கும் இயங்குதளம் என தெரிந்து கொள்ளுங்கள்.
மென்பொருள் தயாரிப்பு நிறுவங்கள் இன்னும் 32 பிட்டிலிருந்து 64 பிட்டுக்கு முழுமையாக மாறி விடாததால் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற இன்னும் சிறிது காலம் செல்லலாம். எனினும் எதிர்காலத்தில் 32 பிட் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக் கிடையேயான போட்டியில் சந்தேகத்திற்கிடமின்றி 64 பிட் ப்ரோஸெஸ்ஸரே வெற்றி பெறப் போவது உறுதி.
- Varamanchari