Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

உண்மையை சொல்வது துரோகமல்ல

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்


அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார்.



தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.



தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.



இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.
..........BBC tam

'மதமாற்றம் தவறல்ல'-சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள் _

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.

"சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு' என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வீரகேசரி

http://asfarmnm.blogspot.com/2010/03/blog-post.html

முஸ்லிமாக மாறிய பெண் கைது

புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.

சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.

மூன்று மாத விடுமுறையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றிருந்த சாரா மாலினி அங்கிருந்து இந்த நூல்களில் சிலவற்றை வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை மூலமாக அனுப்புவதற்கு சென்றிருந்தபோது, அங்கு கடமையிலிருந்த பௌத்த தேசிய வாதக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்நூலைப் பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சாரா மாலினி கைது செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றின் பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான செயல்களில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

80களின் நடுப்பகுதியிலிருந்து வளைகுடா நாட்டில் சாரா மாலினி பெரேரா வசித்து வருவதாகவும் 1999ம் ஆண்டில் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூடவே இஸ்லாத்துக்கு மதம் மாறியுள்ளதாகவும் கல்ஃப் டெய்லி செய்தி கூறுகின்றது.

பெளத்த தேசியவாதம் தற்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில், பெளத்தவாதக்கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக் குழுவாக விளங்கும் முஸ்லிம்கள், அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.

ஆனால் அங்கு புத்த மதத்தவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது- ராஜினாமா கடிதத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது. அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையை வெளிக்காட்டுகின்றது என்று முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாத அதேவேளை பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலைமை எதிர்காலத்தில் மற்றுமொரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பாதுகாப்பு செயலர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய இந்தத் திடீர் முடிவுக்கான 16 காரணங்களை சரத் பொன்சேகா தெளிவுபடுத்தியிருந்தார்.இவ்வாறு அவரால் குறிப்பிடப்பட்ட அந்த 16 காணரங்களும் பின்வருமாறு :
01. இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வரையில் நான் இராணுவத் தளபதியாக நீடிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆயினும் அது அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டமாக அமையும் என்று கூறி சில சக்திகள் உங்களை திசை திருப்பியதால் எனது கோரிக்கையைத் தட்டிக் கழித்தீர்கள். அத்துடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று விட்ட நிலையில் இராணுவத் தளபதி பதவியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் பின்னணியில் என்ன சதித்திட்டம் இருக்கின்றது என்பது இராணுவத்தினருக்கு நன்றாகத் தெரியும்.
02. யாழ்.கட்டளையிடும் அதிகாரி சேவையை கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டு வந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை என்னையடுத்து இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை கவனத்திற் கொள்ளாது, 'ஹோல்டிங் போமேஷன்' என்ற வகையிலான கட்டளையிடும் அதிகாரியாக மட்டுமே இறுதிக் கட்டப் போரில் கடமையாற்றியவரும், ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவருமான ஒருவரை எனக்கு பதிலாக நியமித்தீர்கள்.
03. நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைத் திசை திரும்பும் வகையில், எந்தவொரு அதிகாரமும் இல்லாத, அதேநேரம் தொடர்பாடல் எனும் பொறுப்பை மாத்திரம் கொண்டதும் இராணுவத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவிக்கு என்னை நியமித்தீர்கள். இராணுவ வெற்றியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே இராணுவத் தளபதி என்ற பதவியை துறக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனக்கு கட்டாயப்படுத்தினார். அந்த வகையில் இரண்டு மாதங்களுக்குள் நான் இந்த பதவியிலிருந்து விலகுவேன் என்று ஜனாதிபதியாகிய உங்களிடம் வாக்குறுதி அளித்தேன். இருப்பினும் எனக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக என்னால் யுத்த வெற்றிக்கு காரணமாகவிருந்த இராணுவ வீரர்களுக்கான உதவிகளைக் கூட வழங்க முடியாமல் போனது.
04. அதேவேளை எனக்கு வழங்கப்பட்ட இந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவியானது என்னை தட்டிக்கழிப்பதற்காக வழங்கப்பட்ட பதவியாகும். இந்தப் பதவியில் பல்வேறு அதிகாரங்கள் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், நான் பதவிக்கு வந்ததன் பின்னர் பாதுகாப்பு செயலாளரினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றில், எனது பதவி இராணுவத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டது என்றும் அதனையும் மீறிய அதிகாரம் எனக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் எனக்கு அதிகாரங்களை வழங்க நீங்களும் அரசாங்கமும் விரும்பவில்லை என்பதையும் என் மீது உங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
05. இராணுவ உயர் அதிகாரிகளினுடனான பாதுகாப்பு செயலாளர் முப்படைகளையும் உள்ளடக்கிய அதிகாரம் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படுமாயின் அது இக்கட்டான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று தெரிவித்தார். இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் கூறப்பட்ட இக்கருத்தினால் நான் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளானேன்.
06. இராணுவ வெற்றி கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இனித் தேவைப்படாது என்றும் தேவைக்கதிகமான இராணுவ பலமொன்று நாட்டில் இருப்பதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியாகிய உங்களால் தெரிவிக்கப்பட்டது. இராணுவ வெற்றி தொடர்பில் பெருமைப்பட்டுக் கொண்ட நீங்கள், இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்தமை மட்டமான ஒரு விடயமாகும். எப்பொழுதுமே பெறமுடியாதென கருதிய வெற்றியை ஒரு வாரத்திற்குள், உங்களுக்கே சாதகமான இராணுவத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட நிலையிலும் அந்த இராணுவத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளீர்கள் என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் உணர்ந்து கொண்டேன்.நான் இராணுவ தளபதியிலிருந்து விலகிய நிலையிலும் நீங்கள் இந்தக் கருத்தினை மற்றுமொரு தடவை முன்வைத்தீர்கள். இந்தக் கருத்து எனக்கு அருவருப்பை ஏற்படுத்தியதுடன் யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் அமைந்தது.
07. தற்போதைய இராணுவத் தளபதி பதவியேற்றதன் பின்னர் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியாக செயற்பட்ட எனது மனைவி மற்றும் அவருடனிருந்த கனிஷ்ட பிரிவு அதிகாரிகளைக் கூட இடமாற்றம் செய்தார். இது அதிகாரிகளின் நடுநிலையான தன்மைக்கு சவால் விடுப்பதுடன், என்னுடைய தலைமைத்துவம் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி இராணுவ அதிகாரிகளை தைரியமற்ற தன்மைக்கு கொண்டு செல்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
08.தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது.இந்நிலைமை என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. பயங்கரவாத இயக்கமொன்றை தோற்கடிக்கக் கூடிய திறமையினையும் தொழில்வல்லமையையும் கொண்ட இலங்கை இராணுவத்தின் கீர்த்தி இதனால் சர்வதேசத்தின் முன்னிலையில் தலைகுனிய நேரிட்டது. வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த என்னுடைய தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரின் நடவடிக்கையே இந்த சந்தேகத்திற்கு வழிவகுத்தது.
09.தனிப்பட்ட சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு கடந்த அக்டோபர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரையில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். இந்தக் காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்த சிங்க ரெஜிமென்டின் வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு வேறு ரெஜிமென்ட்களைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த 4 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்டிருந்த மேற்படி வீரர்கள் ஒரேஇரவில் பாதுகாப்பு செயலரின் எண்ணத்திற்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டமையானது வருந்தத்தக்க விடயமாகும்.
10. பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கமைய கஜபா ரெஜிமண்டின் வீரர்கள் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்தில் சேவைக்கு அமர்த்தப்பட்டமையானது இராணுவத்தின் நடுவுநிலைமை சிதைவடைந்ததை எடுத்துக்காட்டியது. அத்துடன் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதும் இதன்மூலம் வெளிப்படையாகியது. இந்த நடவடிக்கைக்கு இராணுவத் தளபதி ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வெளிப்படையான உண்மையாகும்.
11. எமது நாட்டின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட ரீதியிலான ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ளாது, என்னையொரு தேசத்துரோகியாக காண்பிக்கும் வகையில் அரசின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பொய்ப்பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளித்தமை என்னை விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
12. நான் வெளிநாடு சென்றிருந்த போது எனது கடமையை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு பதில் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. இதனால் நான் வகிக்கும் பதவி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருப்பதாக பல தரப்புகளிலும் பேச்சு அடிபட்டது. இதுவே உண்மை நிலையுமாகும்.
13. சாதாரண மட்டத்தில் இருந்து தரமுயர்த்தி, என்னால் பெரும்பாடுபட்டு கட்டிக்காக்கப்பட்ட இராணுவ சேவையிலிருந்து நான் தற்போது புறந்தள்ளப்பட்டமையானது கவலைக்குரிய விடயமாகும்.
14. யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை மென்மேலும் வருத்துகின்றது. அவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் வாழ வைப்பதற்காக, விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து மீட்கும் முயற்சியில் இராணுவ வீரர்கள் பலரும் உயிர்த் தியாகங்களைச் செய்தனர். இருப்பினும் அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையைக் குறித்துக் காட்டுகிறது. தங்களுடைய பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வரையில் அந்த மக்களின் உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அம்மக்களுக்கு இடமளிக்க வேண்டும்.
15. என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் உங்களுடைய அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாமையானது, பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருவதற்கு சமமானது. அத்துடன் எதிர்க்காலத்தில் மற்றுமொரு போராட்டம் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் முடிவில் அனைத்து இன மக்களும் எதிர்ப்பார்த்திருந்த சமாதானத்தின் பிரதிபலன், இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அழிவும் வஞ்சகமும் மென்மேலும் தலையெடுத்துள்ளது. ஊடக அடக்குமுறை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எமது தாய் நாட்டுக்கு சமாதானத்தையும் சமரசத்தையும் கொண்ட யுகத்தை ஏற்படுத்திக் கொடுக்க எம்மால் முடியுமானால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரின் முயற்சி மற்றும் தியாகங்கள் வீண் போகாது.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18990

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை : இந்தியச் செய்திகள் தகவல்


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வருகின்றார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில் பிரணாப் இலங்கை வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இதுவரை கொழும்பு செல்லாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்பு செய்வதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.பிரணாப் முகர்ஜி, நாளை டில்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் சென்னை வந்து, பின்னர் 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார். முதல்வருடன் சந்திப்பு சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மேலும், ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.ராஜபக்ஷ - பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் செல்வதாகவும் ஒரு கூற்று உள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கவை காங்கிரஸ் கட்சி டில்லிக்கு அழைத்து ராஜபக்ஷவுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.சரத் பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவர் சீனா மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, சமீப காலமாக சீனா, பாகிஸ்தானுடன் படு தோழமையாக உள்ளது இலங்கை. இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்று தெரிகிறது." இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
virakesari

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவும் பண்பாடுகளும்

இலங்கை முஸ்லிம்கள், தென்பகுதி சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக, இன ஐக்கியத்தைப் பேணி வாழ்ந்து வந்தது போலவே, தொன்றுதொட்டே வடக்கு, கிழக்கில் தமிழர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு தமிழர்களுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுக்குப் போதியளவு முக்கியத்துவம் அளிக்கப்படாதிருப்பது ஒரு குறையாகும்.
இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் அரபிகளது வழித்தோன்றல்களாக இருந்தும் அரபைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை. சுமார் 70% முஸ்லிம்கள், சமூக தொடர்புகளுக்கான பிரதானமான மொழியாக சிங்களத்தைக் கொள்ளும், வடக்கு கிழக்கு தவிர்ந்த, வெளிமாவட்டங்களில் வாழ்ந்த போதிலும், அந்த சிங்களம் அவர்களில் பெரும்பாலானவர்களது தாய் மொழியாக இல்லை.
அவர்களும் பெரும்பாலும் தமிழையே தாய் மொழியாகக் கொள்கிறார்கள். இதிலிருந்து முஸ்லிம்களுக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குமிடையேயுள்ள உறவின் பலத்தை ஊகிக்க முடியும். சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தை தமது மொழியாகக் கொள்ளாதிருப்பதால் பல சிரமங்களையும் நெருக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தொடர்பாடல், அரசியல் போன்ற பல துறைகளில் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூட அதனைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். தமிழை தமது தாய்மொழியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்குக் கூட முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துவருவதோடு, இன்பத் தமிழ் என அதனை கூறுகிறார்கள்.
தமிழை அரபு எழுத்துக்களில் ‘அரபுத்தமிழ்’ என்ற பெயரில் எழுதி, தமது சமய போதனைகளை அதனூடாகச் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ‘அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என அதனைப் போற்றினார்கள்.
மொழி ரீதியில் நோக்கும் போது முஸ்லிம்களும் தமிழர்களும் சகவாழ்வைப் பேணிவந்தமையை இது குறித்து நிற்கிறது. இரு இனங்களையும் இணைக்கும் பிரதான பாலமாக தமிழ் மொழி அமைந்தது.
இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள்; மதத்தால் முஸ்லிம்கள்’ என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் கூறுமளவுக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் பல்வேறுபட்ட ஒற்றுமைகளோடு வாழ்ந்து வந்திருகிறார்கள்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தென்பகுதியைப் போலவே மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சிறுபான்மையாக வாழும் அவர்களது கிராமங்கள், தமிழ் கிராமங்களுக்கு அருகருகே அமைந்துள்ளன.
வியாபாரம், கலாசாரம், அரசியல், சமூக உறவுகள் போன்றன இருசாராரையும் ஒருங்கிணைத்து வந்துள்ளன. அண்மைக்கால இனவாத சூழல் உருவாகும் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்ததாகக் கொள்ள முடியும். வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் பல்வேறுபட்ட விகிதாசாரங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணத்துக்காக சில பிரதேசங்களது புள்ளிவிபரங்களை மாத்திரம் இங்கு நோக்கலாம்.
மன்னார் முஸ்லிம்கள்
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாந்தோட்டத் துறைமுகத்துடனான அரபிகளது தொடர்பு மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
12ம் 15ம் நூற்றாண்டு காலத்தில் இப்பிரதேசங்களுடனான (அவர்களது) தொடர்பு பன்மடங்காகியது. சேர் அலேக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் கருத்துப்படி இக்காலகட்ட மன்னார் பிரதேசம் முஸ்லிம்களின் வர்த்தக மையம் (Emporium of Trade) ஆகக் காணப்பட்டது. மாந்தோட்டத் துறைமுகம் இவர்களது கப்பல் இறங்கு துறையாகவும் வர்த்தக பண்டகசாலையாகவும் விளங்கியது. முஸ்லிம்களால் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் ஓங்கி வளர்ந்தது.
மன்னார் பகுதி முஸ்லிம்கள் ஏற்றிறக்குமதியில் மட்டுமன்றி, முத்துக்குளிப்பது, சங்கு எடுப்பது, படகோட்டுவது போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
காலனித்துவ ஆட்சியாளர்கள் இவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார்கள். இருப்பினும் முத்துக்குளிப்பிலும், சங்கு குளித்தலிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்பட்டமைக்கு அத்தொழிற்துறை சார்ந்த அம்மக்களது தேர்ச்சிதான் காரணமாகும்.
1902ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, மன்னார் மாவட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் செறிவைக் கொண்ட 29 குடியிருப்புக்களில், மாந்தை- நானாட்டான் பிரதேசத்தில் மட்டும் 11 குடியிருப்புக்கள் இருந்தன.
ஆனால், இப்பிரதேச முஸ்லிம் கிராமங்கள் கத்தோலிக்க அல்லது இந்து சமய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலில் அமையப்பெற்றுள்ளன. இன்னொரு விதத்தில் பார்த்தால் முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடொன்று புவியியல் ரீதியாகத் தொடர்பற்றிருந்தன.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேச முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் தமிழர்களுடன் அதிக தொடர்புகளை வைத்திருந்தார்கள். வயல் வேலைகளில் இவ்விரு இனத்தவரும் பரஸ்பரம் உதவி செய்தார்கள்.
கொடுக்கல் வாங்களில் மிகவுமே கெளரவமாக நடந்து கொண்டதோடு பிணக்குகளின் போது பிரச்சினை முற்றிவிடாது. அப்பிரச்சினையை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை வழிகளைக் கொண்டிருந்தனர்.
ஒருவரது சுகதுக்கங்களில் மற்றவர் மிகச் சரளமாகப் பங்குபற்றினர். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உறவுப் பதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள். ஒரு சமயத்தவரின் விருந்தோம்பல்களில் மற்றவர் எவ்வித சங்கடமுமின்றி பங்கேற்கும் வழமை இப்பிரதேசத்தில் காணப்பட்டது. (4)
யாழ்ப்பாண முஸ்லிம்கள்
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்துவந்தார்கள். எம். எஸ். அப்துல் ரஹீம் என்பவர், இலங்கையில் முஸ்லிம்கள் தென் பகுதிக்கு முன்னர் வட பகுதியில்தான் முதன் முதலில் குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.
‘கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் தமிழர் ஆதிக்கம் இலங்கையின் தென்பகுதி, மேற்குப் பகுதிகளில் குறைவாகவே இருந்திருக்கிறது. வட பகுதியே காலத்துக்குக் காலம் நிகழ்ந்த தென்னிந்தியப் படையெடுப்புக்களாலும் குடியேற்றங்களாலும் தமிழர் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இங்கு முதலில் முஸ்லிம்கள் குடியேறி அங்குள்ள மக்கள் மத்தியில் அடைந்த செல்வாக்கக் காரணமாக ஏற்கனவே குடிகொண்டிருந்த இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு இலக்கானதன் காரணத்தால் உயர் குடியிற் பிறந்த நல்லொழுக்கமுடைய இந்துப் பெண்மணிகள் இஸ்லாத்தை ஒப்புக்கொண்டு இவர்களுக்குத் துணைவியராகும் வாய்ப்பைப் பெற்றனர்.
’ இப்படியாக தமிழ்ப் பெண்களை அராபியர் மணந்ததனாலேயே அவர்களின் தாய்மொழி தமிழாக இருக்கிறது. முதற் குடியேற்றம் சிங்கள மக்கள் சூழவுள்ள பேருவளையில் நிகழ்ந்திருந்தால் முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக இருந்திருக்க வேண்டும்.
அத்துடன் சிங்களவரின் பண்பாட்டு அம்சங்களும் நிறைந்திருக்க வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் பண்பாட்டு அம்சங்களில் தமிழர் பண்பாட்டின் செல்வாக்கு விரவியிருத்தலை நன்கு அவதானிக்க முடியும்.
போர்த்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தில் இருந்த பள்ளிவாசல்கள், கட்டிடங்கள் யாவற்றையுமே சிதைத்து அந்தக் கற்களைக்கொண்டே பறங்கியத் தெருப் பகுதியில் கட்டிடங்களை நிர்மாணித்தபடியால் எந்தவிதமா வரலாற்றுச் சான்றுகளும் பெறமுடியாது போய்விட்டன.” என அப்துர் ரஹீம் எழுதுகிறார். இக்கூற்று ஆய்வுக்குரியதாகும்.
யாழ்ப்பாணம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும் நுகரைப்பற்று எனும் பகுதியில் முழுக்க முழுக்க முஸ்லிம்களே (துலுக்கர்) வாழ்ந்தார்கள் என்றும் சான்றுகள் கூறுகின்றன. 13ம் நூற்றாண்டில் துலோத்துங்க என்பான் யா¡ப்பாகுவையை அழித்த வேளை யாவுகர்களை (முஸ்லிம்களை) சிறைபிடித்தான். சாவகச்சேரியில் அவர்களைக் குடியேற்றினான்.
யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினார் தீவு, மண்டைதீவு, மண்கும்பான், காரைதீவு எனும் தீவுகளிலும் பரந்து வாழ்ந்துள்ளனர்.
இன்றும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகள் சோனகன் வடவி, சோனக வெளி, சோனக வாடி, சோனக அடி, சோனகரடைப்பு என்னும் முஸ்லிம்களின் தனிப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன. இவை போன்ற பலவற்றையும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகளது தாய் உறுதிகளிலிருந்து பெறலாம்”
மிருசுவிலில் உள்ள உசன், சாவகச் சேகரிக்கும் சங்கத்தானுக்குமிடையிலுள்ள சோனகன் புலவு போன்ற இடப்பெயர்கள், அப்பிரதேசங்கள் முஸ்லிம்களது குடியிருப்புக்களாக இருந்தமைக்கான சான்றுகளாகும். நல்லூர் கந்தசாமிக் கோயிலை அடுத்துள்ள பகுதியில் சோனகன் தோப்பு என்ற பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தார்கள். அங்கு தற்போதும் ஒரு ஸியாரம் காணப்படுகிறது.
இவ்வாறு முஸ்லிம்கள் யாழ் குடாநாட்டிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் தமிழ் சமூகத்துடன் சகவாழ்வைப் பேணி வாழ்ந்தனர். 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வட பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது எனலாம்.
முல்லைத்தீவுப் பகுதி
வட மாகாணத்தின் மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால், மொத்த மாவட்ட சனத்தொகையில் 5% ஐக் கொண்ட முஸ்லிம்கள், பெரும்பான்மைத் தமிழர்களோடும், சிறுபான்மைச் சிங்களவர்களோடும் கலந்து வாழ்ந்து வந்தார்கள். 1921ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி மரிடைம் பற்று உதவி அரச அதிபர் பிரிவில் முஸ்லிம்கள் 6.5% ஆகவும், முல்லைத்தீவு நகரில் 7.5% ஆகவும் வாழ்ந்தார்கள்.
முல்லைத்தீவுப் பகுதியில் முஸ்லிம்கள் 1800ம் ஆண்டு முதல் வாழுகிறார்கள் என்பதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன என கலாநிதி ஹஸ்புல்லாஹ் கூறுகிறார்.
அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வாய்மொழி ஆதாரங்களே உள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போர்த்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த மூன்று கிராமங்களான தண்ணீரூற்று,
நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பவற்றின் வரை படத்தைப் பார்த்தால் முஸ்லிம் பள்ளிவாசல், இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் இப்பிரதேசத்தில் அருகருகே அமைந்திருப்பது இப்பிரதேசத்தின் நீண்டகால இன ஐக்கியத்திற்குச் சான்றாகும்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்திலும் கூட முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர்களது சகவாழ்வு மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். உதாரணமாக, மட்டக்களப்புப் பகுதியில் கி. பி. 5ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் கிழக்குக் கடலில் பயணம் செய்த அரபிகளில் ஒரு சாரார் பூநொச்சிமுனையில் குடியேறி வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் காத்தான்குடிப் பகுதிக்கும் வந்ததாகவும் இவர்களிடமிருந்தே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் தோற்றம் பெற்றதாகவும் பி. ஆர். சிற்றம்பலம் கூறுகிறார்.
அதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட ‘முக்குவர்’ எனும் ஒரு சாரார் அங்கிருந்து மட்டக்களப்புப் பகுதிக்கு வந்த போது அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த திமிலர்கள் அவர்களது வருகையை விரும்பாததால் அவர்களைத் துரத்தியடிப்பதற்கு நாடினர். அப்போது, முக்குவர்கள் அரேபியரது உதவியை வேண்டி நின்றனர்.
அவ்வாறு அந்த அரபிகள் அந்த திமிலர்களை துரத்தியடித்தனால் அந்த அரபிகள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு, நெருக்கம் அதிகரித்து அவர்களுக்கு மிகுந்த கெளரவம் கொடுத்தனர். தற்காலத்தில் குருமண்வெளி இந்துக் கோவிலில் தொப்பி அணிந்த ஒரு சிலை காணப்படுகிறது.
மேலும், ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலில் உள்ள குலவிருது பற்றிய பாடலில், முஸ்லிம்கள் அணியும் தொப்பி பற்றிக் கூறப்படுகிறது. முக்குவர்கள் சவக்குலி ஏலம் விடும் போது ‘முக்குவர்களைக் காத்த பட்டாணியர் போற்றி’ என்று அதனை முடிக்கிறார்கள். இவற்றை அவதானிக்கையில் முக்குவர் - முஸ்லிம்கள் உறவு பற்றிக் தீர்மானிக்க முடியும் என மஹ்ரூப் கரீம் என்பார் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பிற்கு துலுக்கர்களும் பட்டாணிகளும் (முஸ்லிம்களும்) வந்து போன விபரங்களை தமிழர்களின் பூர்வீக சரித்திரத்தைக் கூறும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தெளிவாக்குகிறது. ‘காட்டான், பட்டாணி, சுல்தான், சிக்கந்தர், வேடரோடு வர்த்தகம் செய்வதற்காகச் சில துலுக்கக் குடும்பங்களுடன் மண்முனைக் கடுக்கப்பாளையம் போட்டு வர்த்தகம் செய்தனர். என அந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
முக்குவர்கள் தமக்கு உதவி செய்த முஸ்லிம்களிடம் கைமாறாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்றுமாறு கேட்டபோது, முஸ்லிம்கள் முக்குவர்களின் பெண்களை அடைந்து, இரத்த உறவைப் பலப்படுத்தினர். முஸ்லிம்கள் முக்குவர்களுடன் இணைந்து போரிட்டதனால் அவர்கள் முன்னர் குடியேறத் தடுக்கப்பட்டிருந்த ஏறாவூரில் குடியேறி வாழ அனுமதிக்கப்பட்டனர். வாழைச்சேனையில் குடியேறிய முஸ்லிம்களும் பெரும்பாலும் கத்தான்குடியிலிருந்தே வந்தனர்.
தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் ஊர்களைப் பொறுத்தவரையில், அங்கும் கூட அரபிகளும் இந்திய வியாபாரிகளும் தமது வியாபார நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதிலும் உள்நாட்டுக்கு அவசியமான பொருட்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் அதிகமாகப் பங்கெடுத்தனர். வேடுவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வர்த்தக நீதியான உறவுகள் இருந்து வந்தன. வியாபாரத்துக்காக இலங்கை வந்த பல முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கினார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை ‘மட்டக்களப்பு முஸ்லிம்கள்’ என்றே அண்மைக்காலம் வரை ஏனைய பிரதேசத்தவர்கள் அழைத்து வந்திருப்பதால் இவ்விரு பிரதேசங்களும் வரலாற்று ரீதியாக ‘மட்டக்களப்பு’ என்றே நோக்கப்படுகிறது. கண்டிப் பகுதியுடன் வர்த்தக தொடர்பைப் பேணி வந்த முஸ்லிம்கள், கண்டி மலைப் பிரதேசத்தையும் கிழக்கிலிருந்த துறைமுக பிரதேசத்தையும் இணைத்துக் கொடுத்தார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு அருகருகே தமிழ், சிங்கள கிராமங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. 1971ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் (48.3%) இருக்க, சிங்களவர் (28.2%), தமிழர் (23.2%) ஆகியோர் அதற்கடுத்த நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
1981ம் ஆண்டின் கணிப்பீட்டின் படி அக்கரைப்பற்றில் 12439 தமிழர்களும், 22941 முஸ்லிம்களும், கல்முனை பட்டின சபை எல்லைக்குள் இந்துக்கள் 4779 பேரும், முஸ்லிம்கள் 15940 பேரும் வாழ்ந்தார்கள். இவ்விரு இனங்களும் ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாத அளவுக்கு வியாபாரத்திலும் உறவுகளிலும் ஒன்றில் மற்றையது தங்கியிருக்கின்றன.
எனவே, ஆய்வாளர் ரமீஸ் அப்துல்லாஹ் பின்வருமாறு எழுதுகிறார். ‘(முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான) இவ்வுறவு வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றியிருந்தது. கிழக்கு மாகாண வரலாற்றிலிருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
கிழக்கு மாகாணத்தின் வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழ, தெற்குப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழுகிறார்கள். பொதுவாக ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள், அதற்கடுத்த கிராமத்தில் தமிழர்கள் என கிழக்கு மாகாணம் முழுவதிலும் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்தே வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லிம் ஆண்கள்’முக்குவர்’ சாதிப் பெண்களை மணந்ததால், தமிழர் முஸ்லிம்களிடையே இரத்த உறவுகளும் உள்ளன. இதனால், தமிழர்களின் சாதி முறை மரபுகளும் முஸ்லிம்களும் உரித்தாளிகளாகின்றனர்.
இங்குள்ள முஸ்லிம் சமூகத்தில் சாதி முறை முக்கியத்தும் பெற்றுள்ளதோடு அது மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது முஸ்லிம் சமய ரீதியானதல்ல. மேலும், இங்கு தாய்வழி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழ் பாரம்பரியமே காரணமாகும்.
மணமகனின் காலைக் கழுவி, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, தாலிகட்டி, ஆராத்தி எடுத்து, பால் பழம் கொடுக்கும் சடங்குகள் முஸ்லிம் திருமணங்களிலும் நிறைவேற்றப்படுகின்றன.
கிழக்கில் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் சமயம், சடங்குகள் என்பவற்றை மதித்து கெளரவப்படுத்துகின்றது. கல்முனை ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ்வின் பள்ளி விழா, பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோயில் தீ மிதிப்பு விழா போன்றவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி இரு சமூகத்தவர்களும் கலந்துகொள்கின்றனர். காரைதீவில் பகீர் சேனைத் தைக்கா, அட்டப்பள்ளயத்தில் அவுலியா தர்ஹா போன்ற முஸ்லிம் சமயத் தலங்கள் உள்ளன.
திருவாளர் பாலசுந்தரம் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :-
‘இங்கு (மட்டக்களப்பில்) வாழும் தமிழ் இனத்தவருடன் சகோதரத்துவ மனப்பான்மை பூண்டு, நட்புறவுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையோரான இந்துக்களும் இஸ்லாமியரும் மத அடிப்படையில் வேறுபட்டிருப்பினும் வாழ்க்கை முறைகள், பண்பாட்டு அம்சங்களில் ஒன்றுமைகள் உள்ளன.’ முஸ்லிம்கள் நான்கு திருமணம் செய்ய அனுமதி இருந்தும் செய்யாதிருப்பதற்குக் காரணம் தமிழ் மக்களுடன் அவர்கள் முன்னைய காலங்களில் ஏதோ வழிகளில் ஒன்றுபட்டிருந்திருக்கிறார்கள் என்று கூறுவதில் தவறில்லை.’ என ஆய்வாளர் சித்தீக் கூறுகிறார்.
மேற்படி கூற்றுக்களிலிருந்து முஸ்லிம் சமூகம் தனது நம்பிக்கைக் கோட்பாடு, வழிபாடுகள், வாழ்வு முறை போன்ற அம்சங்களில் இந்துக்களது சமூகத்துடன் சிலபோது ஒன்றித்து விட்டமையைக் கூடக் காண முடிகிறது. அது இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற சகவாழ்வாக அமையமாட்டாது. தனித்துவம் காத்த நிலையில் சகவாழ்வைப் பேணுவதனையே இஸ்லாம் அங்கீகரிக்கும் என்பதனையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்காயினும் ஏனைய பிரதேசங்களாயினும் பொதுவாக முஸ்லிம் - தமிழ் உறவு பற்றி எழுதும் சித்தீக், ‘தமிழ் மொழியை இருசாராரும் பேசுவதால், ஒன்றுபட முடியும். தமிழை முஸ்லிம்கள் தாய் மொழியாகக் கொண்டிருப்பது இரு சமூகங்களுக்கிடையே இறுக்கமான வராற்றுறவு இருந்திருப்பதைக் காட்டும்.
தமிழ் – முஸ்லிம் மக்கள் மொழியில் மட்டுமல்லாது கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு பாரம்பரியம், திருமணச் சடங்குகள் போன்ற சிலவற்றில் சில அம்சங்களிலும், சிலவற்றில் முழுவதுமாக ஒருமைப்பட்டுக் காணப்படுகின்றனர்.
இவ்வம்சங்களிலான ஒருமைப்பாடுகள் பல தனிச் சிங்களப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்கிடையேயும் காணப்படுவதானது, முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் சிங்கள மக்களுடன் அல்லாது தமிழ் மக்களுடனேயே கூடுதலான உறவுகளை வைத்துள்ளனர் என்று நம்பச் செய்கிறது’ என்கிறார். ‘முஸ்லிம்களது சில பெயர்கள் தமிழர்களின் சில பெயர்களது திரிபுகளாகவும் ஒத்தவையாகவும் உள்ளன.
உதுமாநாச்சி, மெளலாமக்காம் நாச்சியா, சின்னராசா, சந்திரா போன்ற பெயர்களைப் பார்க்கும் போது, முன்னைய காலங்களில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை அந்நியர்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.’ என்றும் அவர் கூறுகிறார்.
சிங்களப் பகுதி முஸ்லிம்கள் கூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதற்கும், தமிழ் மக்களின் சில பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதற்கும் காரணம் கூறும் ஐ. எல். எம். அப்துல் அkஸ் அவர்கள், அராபியர்கள் இலங்கைக்கு வந்து முதன் முதலில் குடியேறிய போது, அவர்களைத் தமிழர்களே வரவேற்றனர் என்றும், அடைக்கலம் கொடுத்து ஆதரித்தனர் என்றும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே தமது குடும்ப உறவுகளையும், வர்த்தக உறவுகளையும், திருமண உறவுகளையும் பெருமளவில் வைத்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இதில் பெரியதோர் உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
வடபகுதியில் மட்டுமன்றி, தென்பகுதி முஸ்லிம்களும் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொள்வதற்கு பின்வரும் காரணமும் கூறப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்டது. இக்காலப் பிரிவில் சோள மண்டலக் கரையை (விoroசீலீntal விost) ஒட்டி நடைபெற்ற வணிகத்தில் தமிழ் மொழி முக்கிய இடம்பெற்றது.
அதேவேளை, தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோள மண்டலக் கரையிலுள்ள ‘மஃபர்’ பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும் கலாசாரப் பண்பாட்டு மொழியாகவும் கொள்ளும் வரலாற்றுச் சூழ்நிலையை உருவாக்கியது என ஆய்வாளர் கலாநிதி சுக்ரீ அபிப்பிராயப்படுகிறார்.
எனவே, ஐ. எல். எம். அப்துல் அkஸ் கூறும் காரணத்திலிருந்து கலாநிதி சுக்ரீ கூறும் நியாயம் வித்தியாசப்பட்ட போதிலும், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவுக்கு மேற்படி இரு காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தமாக நோக்கின், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்தது. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் முஸ்லிம்கள் சகவாழ்வைப் பேணி காலாகாலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். பழக்கவழக்கங்கள், சமூக உறவுகள், மரபுகள், வாழ்வு முறை என்பவற்றிலும் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. சிங்கள சமூகத்தவரை விட தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ்ந்தமை அதிகம் என்று கூறுவது கூட பிழையாக இருக்க முடியாது.
அண்மைக் காலத்தில் சில அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இவ்விரு சாராரும் சில கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொண்ட போதிலும் கிட்டிய அண்மைக்காலம் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்தே வந்திருக்கிறது.
சகவாழ்வின் அவசியம்
இரு தரப்புக்குமிடையில் மனந்திறந்த கலந்துரையாடல்கள், சுமுகமான சூழலில் இடம்பெறுமாயின் மீண்டும் பழைய நிலையைக் கட்டியெழுப்புவது சிரமமான காரியமல்ல.
இவ்விடயத்தில் இரு தரப்பைச் சேர்ந்த புத்தி ஜீவிகளது பங்கு மிகவுமே அவசியப்படுகிறது. சுமுகமாக நிலவிவந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அவை மென்மேலும் தொடராதிருப்பதற்கு திடசங்கற்பம் பூணுவது அவசியமாகும்.
மாறாக கடந்தகால தவறுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துவதோ, இடம்பெற்ற தவறுகளை நடக்கவில்லை என்று கூறுவதோ அல்லது அவற்றிற்கு நியாயம் கூறி தப்பிக்க விழைவதோ இதய சுத்தியுடனான சுமுகமான தீர்வுகளைக் காண தடையாக அமையும்.
முஸ்லிம்களோ தமிழர்களோ நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் இடங்கள், அவர்கள் தமக்கென அமைத்துக்கொண்ட வணக்கஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், நிலபுலன்கள், குடியிருப்புக்கள் என்பன அவர்களுக்கே உரியவை. கசப்புணர்வு தொடர்ந்தால் அவற்றிலிருந்து அவர்கள் விலக நேரிடும்.
இது சாத்தியமில்லை. தமக்கென பழக்கப்பட்ட சூழலிலேயே அவர்கள் வாழுவது இலகுவாகவும் உசிதமாகவும் இருக்கும்.
‘தேங்காய்த் துருவலும் பிட்டும்போல்’ ஒருவருக்குள் ஒருவராக பக்கத்துப் பக்கத்து வீடுகளிலும், கிராமங்களிலும் தொழில் துறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிர்ப்பந்தமாக ஒட்டியுறவாடும் முஸ்லிம் - தமிழ் இனங்கள் இனியும் கசப்புணர்வுகளுடன் வாழ்வது மேலும் பேராபத்துக்களையே தரும். எவரும் எவரையும் துரத்துவது பல இன்னல்களுக்கே வழிவகுக்கும். எனவே, சுமுகமாக வாழ்வதற்கும் சக வாழ்வைக் கடைப்பிடிப்பதற்குமான வழிவகைகளைத் தேடுவது உடனடித் தேவையாகும்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பbல் (நZமி)B. A. (Hons) M. A
நன்றி : இஸ்லாமிய சிந்தனை (2008 ஜனவரி - மார்ச்) இதழ்ஜாமிஆ நZமிய்யா வெளியீட்டுப் பணியகம்

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களும் தமிழ் அரசியல் சமூகமும்


செப்டம்பர் 07, 2009 அன்று ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சந்திப்பு, கூட்டமைப்பின் அரசாங்கம் தொடர்பான நடத்தையில் முக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக மாற்றமடைந்துள்ள புதிய அரசியல் சூழலிலேயே இது நிகழ்ந்துள்ளது.
ஏனைய விடயங்களைப் பேசியதற்கு மத்தியில் 1990ல் புலிகளால் பலவந்த மாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீள்குடி யேற்றம் பற்றியும் அவர்கள் பேசி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களது விவகா ரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக முன்னெடுத் திருப்பது இதுவே முதன் முறை யாகும்.
வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீளத் திரும்பும் உரிமையை பகிரங்கமாக அங்கீகரிப் பதற்கும் அவர்களது விடயத்தை அனுதாபத்துடன் நோக்குவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் அங்கத்துவக் கட்சிகளுக்கும் 19 நீண்ட வருடங்கள் தேவையாய் இருந்திருக்கிறது.
வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் கவனமெடுத்திருப் பதற்கு, அதன் ஒரே யொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான ஆர். எம். இமாமின் அழுத்த மும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பின ரான என். சிறிகாந்தா அதற்களித்த ஆதர வுமே முக்கிய காரணம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிகாந்தா பாராளுமன்ற உறுப்பினராக ஆவதற்கு சந்தர்ப்பமாய் அமைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்; வெளியேற்றப்பட்ட வட க்கு முஸ்லிம்கள் மீது நீண்டகால மாக அனுதாபமுள்ளவராக இருந்து வந்தார். வெளியேற்றப் பட்ட வட புல முஸ்லிம்கள் கடந்த 19 வருடங் களாக துன்பத்திற்கு உள்ளாகி வசித்து வரும் புத்தளம் அகதிமுகாம்களுக்கு இதுவரை விஜயம் செய்தி ருந்த ஒரேயொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர் ரவிராஜ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தைக் கையிலெடுத்தி ருப்பது வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தில் எந்தவொரு திடீர்த் திருப்பத்தை யும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளி யேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்க ளது கிராமங்களை நோக்கி கொஞ் சம் கொஞ்சமாக செல்லத் தொடங்கி விட்டனர்.
அவர்களுக்கு முன்னே பல சவால்கள் உள்ளன. தேவாலயங் களும் அதிகார வர்க்கத்தினரும் மன்னாரின் சனப் பரம்பலை மாற்றி யமைப்பதற்கு அல்லும் பகலுமாக உழைத்து வருகின்றனர். வெளியேற் றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடி யேறினாலும் இந்த சனப் பரம்பல் பெரியளவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக உள்ளனர்.
ஜனாதிபதியுடனான கூட்டமைப் பினரின் சந்திப்பின்போது கலந்து கொண்ட மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூட இனச் சுத்திகரிப்பின் பாதிப்புக்குள் ளானவர்தான். அனைத்து அகதி களையும் மீள்குடியேற்றும் பொறுப்பு அவருக்குத்தான் வழங்கப்பட்டி ருக்கிறது. கூட்டமைப்பு எம்.பி.யான இமாம் கூட இனச் சுத்திகரிப் பின் பாதிப் புக்குள்ளானவர்தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ரின் வடக்கு முஸ்லிம்கள் சார்பான இந்தக் குரலை, அம்மக்கள் பற்றிய அவர்களது அக்கறையாகவும் ஆதர வுக் குரலா கவுமே முஸ்லிம்கள் பார்க்கின்றனர். புலிகள் அழிக்கப் பட்டதன் பின்னர் கடைசியில் ஒருவாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களது மீள்குடி யேற்றத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளது. ஆனால், சில புகலிடத் தமிழர்களும் ஈ.பி.டி.பி., புளொட் தவிர்ந்த தமிழ்த் தலைவர் களும் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத் திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக் காமல் உள்ளனர்.
அகதிகள் தொடர்பாக எங்கு, எப்போது பேசினாலும் தமிழ் அகதிகள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் பற்றிய அனுதாபத்தை யேனும் அவர்கள் வெளிப்படுத்த வில்லை.
இவ்வருடம் ஜூலை மாதம் புகலிடத் தமிழர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து வன்னி அகதி முகாம்களுக்கும் சென் றது. அவர்கள் அங்கும் கிழக்கிலும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சந்தித்துப் பேசினர். அவர்களால் புத்தளத்திலோ அனுராதபுரத்திலோ உள்ள அகதி முகாம்களுக்குச் செல்ல முடியவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத் தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தக் குறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புகலிடத்தில் வாழும் தமிழர்கள் ஆகியோர் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ் லிம்கள் தொடர்பாக மௌனமான போக்கையே கடை பிடிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்த இனச் சுத்திரிப்பின் காரண கர்த்தாக்களான புலிகள் செயற் பட்டுக் கொண்டிருந்ததால், இந்த மௌனத்தை அவர்கள் நியாயப் படுத்த அது ஒரு வசதியான காரண மாக இருந்தது.
ஆனால், தமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, தமது சக சமூகத்தி னருக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் காட்டுவதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாகும். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவது இந்த வகையில் பொருத்தமானது.
meelparvi

பராக் ஒபாமாவுக் கெதிராக அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம்


கொமினிஸத்தை நோக்கிச் செல்வதாகவும் கண்டனம்
வாஷிங்டன், செப்டம்பர். 13 ஏ. எப். பி.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கெதிராக ஆர்ப் பாட்டம் நடந்தது.
கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சுதந்திர வேலைகளுக்கான அடிமட்ட அமைப்பு ஏற்பாடு செய்தது. அமெரிக்காவின் நாலா பக்கங்களிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாஷிங்டனை நோக்கி வந்தனர்.
இதில் கலந்து கொண்டோரின் சரியான தொகையைக் கூற முடியாதெனப் பொலிஸார் கூறினர். இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரையிலான பொது மக்கள் இந்த ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாள ர்கள் முன்னர் அறிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பராக் ஒபாமாவின் புகைப்படங்களைத் தாங்கியபடி கோஷமிட்ட னர். வரி விதிப்பைக் குறை, பொருளாதார சுதந்திரத்தை தா, கருக்கலைப்பு சுகாதாரத்துக் குப் பாதுகாப்பானதல்ல, நாட்டை கொமினிஸ த்தை நோக்கி நகர்த்தாதே என்று பல கோஷ ங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
ஜனாதிபதி பராக் ஒபாமா கருக்கலைப்புக்கு ஆதரவானவர். சனத் தொகையைக் கட்டுப் படுத்த இத் திட்டம் அவசியம் எனக் கருதும் ஜனாதிபதி பராக் ஒபாமா அரசாங்கத்தில் இதற்கான விசேட ஏற்பாடுகளையும் செய்யவுள்ளார்.
இவற்றைக் கண்டிக்கும் பொருட்டே பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். பெயர் கூறவிரும்பாத ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முழு நம்பிக் கையுடன் கடந்த ஜனவரியில் ஒபாமாவுக்கு வாக்களித்தேன். அவை அனைத்தும் அர்த்த மற்றுப் போயுள்ளது. ஒபாமாவின் செயற்பாடு கள் கொமினிஸ நாட்டைப் போல் அமெ ரிக்காவைப் பாதிக்க வைத்துள்ளதென்றார்.
இதே போன்ற பல கருதுக்களை வெளியிட்டனர். இறந்தோருக்கு வரி வழங்கல், பிறப்புச் செலவு இலவசம் என அறிவி க்கப்பட்ட ஒபாமாவின் திட்டங்கள் செயலுரு பெறாததற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பராக் ஒபாமாவைக் கேலி செய்யும் பல சித்திரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கி நின்றனர். ஒபாமா துரோகி என்றும் ஆர்ப் பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.

சே குவேராவின் பொலிவிய டயறி



சேயின் பொலிவிய டயறி’ (Diary of Che in Bolivia) 1968 ஆம் ஆண்டு யூன் மாதம் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வெளியிடப்பட்டது. இந்த டயறிக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. சீ. ஐ. ஏ யின் முயற்சி தோல்வி கண்ட கதை.
கொங்கோவில் கெரில்லாப் போராட்டத்துக்காக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சே குவேரா சிறிது காலம் சோர்வுற்ற மனோ நிலையுடன் இருந்தார். இந்த நிலை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. அவரது அடுத்த போராட்டக் களமாக பொலிவியாவைத் தேர்ந்தெடுத்தார்.
சே குவேரா 1966 நவம்பர் மாதத்தில் பொலிவியாவுக்குள் அடியெடுத்து வைத்தார். கியூபாப் போராட்டத்திலும் கொங்கோப் போராட்டத்திலும் அவருடன் இணைந்திருந்த சிலரும் கியூபாவில் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் அவருடன் செயற்பட்ட சிலரும் கூடச் சென்றனர். பொலிவியாவில் ‘மேஜர் றமோன்’ என்ற பெயரிலேயே சே செயற்பட்டார்.
அக்காலத்தில் பொலிவியா சீ. ஐ. ஏ யின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தது. சகல அமைச்சுகளிலும் சீ. ஐ. ஏ ஏஜன்டுகள் இருந்தனர். ஜனாதிபதியும் பல முக்கிய அமைச்சர்களும் சீ. ஐ. ஏயின் கொடுப்பனவுப் பட்டியலில் இருந்தனர். இராணுவம் ஏறக்குறைய சீ. ஐ. ஏ யின் கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டது.
சேயின் பொலிவிய டயறியில் முதலாவது பதிவு 1966 நவம்பர் 7ந் திகதி செய்யப்பட்டது. “இன்று ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகின்றது. இரவு நேரத்தில் நாங்கள் கால்நடைப் பண்ணையை வந்தடைந்தோம்” என்று அதில் சே குவேரா எழுதியிருந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்புகள் எழுதப்பட்டன. எழுதுவதற்கு விசேடமாக எதுவும் இல்லாத நாட்களில் ‘ஒன்றுமில்லை’ என்று எழுதியிருந்தார்.
சே குவேரா பொலிவியாவில் நன்காஹ¤வாஸ¤ என்ற இடத்தில் கெரில்லாத் தளமொன்றை அமைத்துச் செயற்பட்டார். அது செவ்விந்தியர்கள் வாழும் பகுதி. அவர்களிடமிருந்து சே குவேராவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்க வில்லை. இதற்கு இரண்டு காரணங்க ளைக் கூறலாம். அவர்களுக்கு ஸ்பானிய மொழி தெரியாதது ஒரு காரணம். வெள் ளையர்கள் அனைவரையும் எதிரிகளாகப் பார்க்கும் சுபாவம் அவர்களிடம் இருந்தது இன்னொரு காரணம்.
பொலிவியாவில் சேயின் பணி இலகுவானதாக இருக்கவில்லை. அவரது படையணி பொலிவிய இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டே படிப்படியாக முன்னேறியது. 1967 ஒக்டோபர் 8ந் திகதி எல் ஜுரோ பள்ளத்தாக்கில் கெரில்லாப் படையணியைச் சுற்றி வளைத்த இராணுவம் சே குவேராவையும் வேறு சிலரையும் கைது செய்தது. கைது செய்யப்படுவதற்குச் சில மணித்தியாலங்களுக்கு முன் சே குவேரா தனது கடைசி டயறிக் குறிப்பை இவ்வாறு எழுதியிருந்தார்.
“ஐந்து மணியளவில் நாங்கள் புறப்பட்டோம். மிகக் குறைவான சந்திர ஒளி மாத்திரம் இருந்தது. பயணம் மிகவும் சிரமமானது. பள்ளத்தாக்கில் பல சுவடுகளை விட்டுவிட்டு வந்தோம். சற்றுக் களைப்பாறிச்செல்வதென இரண்டு மணியளவில் தீர்மானித்தோம். ஆனால் தொடர்ந்து செல்வதில் ஒரு அர்த்தமும் இல்லையெனப் பின்னர் தீர்மானித்தோம்”.
சே குவேராவின் கொலை:
கைது செய்யப்பட்ட சே குவேராவை ஹிகுரா என்ற கிராமத்திலுள்ள ஒரு பாடசாலையில் தடுத்து வைத்திருந்தார்கள். இராணுவத் தலைமையகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. எட்டாவது படையணியின் தளபதி கேர்ணல் ஜோக்கின் ஸென்ரெனோ ஹிகுரா கிராமத்துக்குச் செல்வதற்காக 9ம் திகதி காலை ஆயத்தமாகிய போது, கப்டன் பீலிக்ஸ் றமோஸ் அவருடன் இணைந்து கொண்டார். இருவரும் ஹெலிகொப்டர் மூலம் ஹிகுராவுக்குச் சென்றனர்.
கப்டன் பீலிக்ஸ் றமோஸ் ஒரு அமெரிக்கர். சீ. ஐ. ஏ ஏஜனட். இவருக்கும் இன்னொரு சீ. ஐ. ஏ ஏஜன்டான எடுவார்டோ கொன்ஸலெஸ் என்பவருக்கும் பொலிவிய இராணுவத்தில் கப்டன் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
சே குவேராவைத் தடுத்து வைத்திருந்த பாடசாலையில் ஸென்ரெனோவும் றமோஸ்ஸ¤ம் அவரை நீண்ட நேரம் விசாரித்தார்கள். எல் ஜுரோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து இராணுவ நடவடிக்கை இடம்பெற்றதால் ஸென்ரெனோ பாடசாலையிலிருந்து வெளியேறி அங்கு சென்ற பின் றமோஸ் தனியாக சேயை விசாரித்தார். அவ்வேளையில் சே குவேராவை றமோஸ் சுட்டுக் கொன்று விட்டார்.
சேயிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயறியின் எல்லாக் குறிப்புகளையும் றமோஸ் படம்பிடித்த பின் அந்த டயறியை எல் ஜுரோ பள்ளத்தாக்கிலிருந்து திரும்பிய கேர்ணல் ஜோக்கின் ஸென்ரெனோவுக்குக் கொடுத்தார். அவர் தலைநகருக்குத் திரும்பியதும் இராணுவத் தளபதியிடம் டயறியைக் கையளித்தார்.
அமைச்சரின் இரட்டை வாழ்க்கை:
இக்காலத்தில் பொலிவியாவின் சக்திமிக்க உள்துறை அமைச்சர் பதவியை வகித்தவர் அன்ரோனியோ ஆர்குவெதஸ். பொலிவியாவின் விமானப் படையில் கப்டன் பதவி வகித்த ஆர்குவெதஸ் அறுபதுகளின் முற்பகுதியில் பிரதி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இளமைக் காலத்தில் இவர் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததை அறிந்த சீ. ஐ. ஏ இராஜினாமா செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதற்குப் பணியாமலிருக்க அவரால் முடியவில்லை.
ஆர்குவெதஸ்ஸை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக சீ. ஐ. ஏ பெருவுக்குக் கூட்டிச் சென்றது. பெருவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ‘பொய் அறியும்’ கருவி இருந்ததாலேயே அங்கு கூட்டிச் சென்றனர். நான்கு நாட்களாகக் கடுமையான விசாரணை நடைபெற்றது. இப்போதும் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா, மொஸ்கோவின் ஏஜன்டா அல்லது ஹவானாவின் ஏஜன்டா என்பன போன்ற கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டார்கள். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற துன்புறுத்தல் காரணமாக ஆர்குவெதஸ் மிகவும் மனம் உடைந்திருந்தார்.
கம்யூனிஸ்ட் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த சீ. ஐ. ஏ ஆர்குவெதஸ்ஸை உள்துறை அமைச்சராக நியமிக்கும்படி ஜனாதிபதிக்குச் சிபார்சு செய்தது. உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற பின் சீ. ஐ. ஏ சொல்வதைச் &:v@ரிவி!8’ரி அவர் இருந்தார். சீ. ஐ. ஏ அவரை ஆட்டி வைத்தது எனக் கூறலாம். இந்த வாழ்க்கை சந்தோசமானதாக இருக்கவில்லை. பெருவில் நடத்திய விதம் காரணமாக ஏற்கனவே சீ. ஐ. ஏ மீது கொண்டிருந்த வெறுப்பு இப்போது அதிகரித்தது. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
காஸ்ட்ரோவிடம் டயறி
சே குவேரா கொலை செய்யப்பட்டு நாற்பது நாட்களின் பின் அவரது டயறியின் புகைப்படப் பிரதியொன்றை அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த ஹியூகோ முறே என்பவர் ஆர்குவெதஸ்ஸிடம் கொடுத்தார். ஆர்குவெதஸ் அதைப் படம் பிடித்து நெகடிவ்களை வைத்துக் கொண்டு பிரதியைப் பத்திரமாக வைத்திருப்பதற்காக உதவியாளரிடம் கொடுத்தார். சீ. ஐ. ஏயைப் பழிவாங்குவதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.
கம்யூனிஸத்தையும் கியூபாவையும் இழிவுபடுத்தும் வகையில் சே குவேராவின் டயறியைத் திரிவுபடுத்தி வெளியிடும் முயற்சியில் சீ. ஐ. ஏ ஈடுபட்டிருந்ததென்பது ஆர்குவெதஸ்ஸ¤க்குத் தெரியும். இத்தகவலுடன் டயறியின் நெகடிவ்களை 1968 யூன் 14ந் திகதி பிடெல் காஸ்ட்டோவுக்கு அனுப்பினார். இரண்டு வாரங்களுக்குள் ‘Diary of Che in Bolivia’ ஹவானாவில் வெளியிடப்பட்டது. சீ. ஐ. ஏ யின் முயற்சி பலிக்கவில்லை.
அன்ரோனியோ ஆர்குவெதஸ் நாட்டை விட்டு வெளியேறிச் சிலியிலும் லண்டனிலும் சிறிது காலம் வாழ்ந்த பின் பொலிவியாவுக்குத் திரும்பி விசார ணைக்கு முகங்கொடுத்தார். விசாரணை யில் சீ. ஐ. ஏ பற்றிய பல விடயங்கள் அம்பலத்துக்கு வரத் தொடங்கியதால் அது இடைநடுவில் கைவிடப்பட்டது. மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய ஆர்குவெதஸ் மெக்சிகோவில் அரசியல் தஞ்சம் பெற்றார்.
கேவியெஸ் thinakaran

இலங்கைக்கு ஐ.நா. நிதியுதவிகள் நீடிக்காமல் போகலாம்: ஐ.நா. பிரதிநிதி எச்சரிக்கை

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே தங்கியிருந்தால், ஐ.நா. நிதியுதவிகள் நீடிக்காமல் போகலாம்: ஐ.நா. பிரதிநிதி எச்சரிக்கை
இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவி வழங்குவதை ஐக்கிய நாடுகள் சபையினால் தொடர முடியாது என்று இலங்கைக்கான ஐ. நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
முகாம்களிலே தங்கியிருப்பவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் இன்னமும் தொடருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இந்த முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பச் செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. தலைமைச் செயலரிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை அவர்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று நீல் பூனே தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்கள் என்று அரசாங்கம் கூறும் பத்தாயிரம் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்படாதது குறித்தும் ஐ.நா. பிரதிநிதி தனது விமர்சனத்தை வெளியிட்டார்.
தவிர இலங்கையைச் சேர்ந்த ஐ.நா.வின் இரு பணியாளர்கள், கடந்த ஜூன் மாதம் முதல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து நியூயோர்க்கில் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் கடுமையான விசனத்தை தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளால் அவர்கள் தவறான முறையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

67 இலட்சம் பெறுமதியான யூரோக்களுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது


உடம்பில் யூரோ நாணயத்தாள்களை கட்டிக்கொண்டு கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல முயற்சித்த இந்திய பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த இவர் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த சுமார் 67 இலட்சம் பெறுமதியான யூரோக்களை மீட்டனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரிகள் அவரிடமிருந்து மீட்கப்பட்ட யூரோக்களை அரசு உடமையாக்கியுள்ளனர்.

வீரகேசரி

'உணவுக்கு சரியாக கஸ்டப்பட்டோம் கோதுப்பருப்பை தண்ணீரில் அவித்து பசியாறினோம்"

இறுதிக் கட்டப் போரில் சிக்கி உயிர்தப்பிய ஒரு பெண்மணியின் கண்ணீர்
'நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்." என இறுதிக் கட்ட போரில் உயிர்தப்பிய சிவராசா ரஞ்சனி தெரிவித்தார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கி வவுனியாவை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி தனது கசப்பான அனுபவங்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது அவரது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கையில், 'என்ர கணவர் சிவராசா. கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982ல் மணம் முடித்தோம். எங்களுக்கு 3 பிள்ளைகள். 2006ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து திரும்ப 'பாஸ்" கிடைக்கேல. கடந்த வருடம் யுத்தம் தொடங்கிட்டுது. வேறு வழியில்லாமல் இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் என ஆரம்பித்து புதுமாத்தளன் வரை 3 மாதங்கள், உடுத்த உடுப்போட நாடோடிகளாக அலைஞ்ச நாங்கள்"
புதுமாத்தளனில் உணவுக்கு கஸ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படியாக பொருட்களின் விலைகள் இருந்தன. கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியை ஆறினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை. அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வந்த ஆறுபேர் கால்களை இழந்தனர். நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16ம் திகதியன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்" என்றார். வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி தனது கசப்பான அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தார்.இவ்வாறு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மரண வேதனையான அனுபவங்கள் இருக்கின்றன. ஊடகங்கள் அனுமதிக்கப்படாததன் காரணமாக அவை இன்னும் அவர்களின் மனங்களில் புதைந்துபோயுள்ளன.
- லங்காநியுஸ்வெப்

போர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் தகவல்

இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்திய 'றோ' அமைப்பின் முகவர்கள் 50 பேர் இலங்கை அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர் பட்டியல் ஒன்றை இலங்கை அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

"இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரும் 'றோ' இலங்கையில் இருந்து 'றோ' செயற்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தார்கள். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கேட்கின்றோம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாதான் பயிற்சியளித்தது. அவர்கள் தமது தவறை உணர்ந்துகொண்ட பின்னர்தான் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இப்போதும் பிரிவினைவாத சக்திகளால் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது" எனவும் குறிப்பிட்ட ஜே.வி.பி. தலைவர், 1980-களில் இலங்கையில் தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பாக இந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்ட அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

"எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை மீட்பதற்காக எமது நாட்டைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தில் இப்போது யார் ஆக்கிரமித்துக் கொள்கின்றார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்காகவா எமது நாட்டவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.

இப்போது இங்கு 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். இலங்கையின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்."

இவ்வாறு சோமவன்ச தனது பேட்டியில் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
news: tamilwin.org

கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் 'வணங்கா மண்' நிவாரணப் பொருட்கள்


இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை, பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது.

தற்போது அப்பொருட்களை மீட்டு உரிய மக்களைச் சென்றடையச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து அவை கொழும்பு துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய தமிழர்கள் இலங்கை மக்களுக்காக உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரணப் பொருட்களை 'வணங்காமண்' கப்பலில் அனுப்பி வைத்தனர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் 'வணங்கா மண்' கப்பல் தத்தளித்தது.

முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, அக்கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் 27 கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்தின் மூலம் 'கொலராடோ' என்ற சரக்கு கப்பலுக்கு மாற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தக் கப்பல் கடந்த 9ஆம் திகதி கொழும்பு துறைமுகம் வந்தடைந்த பின்னரும், நிவாரணப் பொருட்களை இதுவரை செஞ்சிலுவை சங்கத்தினர் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த 19 நாட்களாகக் கேட்பாரற்று கிடக்கின்றன.

இது குறித்து தமிழகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் லண்டன் 'மெர்ஸி மிஷனி'ன் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,

"நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத்தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லண்டனில் உள்ள 'மெர்ஸி மிஷன்' (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம்.

எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகின்றன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Virakesari News

நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம்

கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதன் தென் தீவு 30 செ.மீ. மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா பக்கமாக நகர்ந்துள்ளது நியூசிலாந்து. இந்த நிலநடுக்கத்தால் மிகச் சிறிய சுனாமி அலையே ஏற்பட்டதும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் இரு கண்டத் திட்டுகளுக்கு மத்தியில் உள்ள மெதுவான பகுதியில் ஏற்பட்டதால் பாதி்ப்பு பெரிதாக இல்லை என்று நியூசிலாந்து வி்ஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அதிக அதிர்வு கொண்ட அலைகள் ஏற்படாமல் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டதாகவும் இதனால் கட்டடங்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெறிவித்துல்ளானர்.
வீரகேசரி இணையம்